மத்திய விமானப் போக்குவரத்துத்துத்றை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த தமிழ்நாட்டின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மத்திய விமானப் போக்குவரத்துத்துத்றை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடம் கோரிக்கை மனு அளித்த தமிழ்நாட்டின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை இன்று பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.என்.அருண் நேரு, மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆகியோருடன் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இணைந்து சென்று, நேரில் சந்தித்து திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தின் சேவைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை மனு வாயிலாக முன் வைத்தனர்.
அதில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய கட்டிடத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பாக பயன்பாட்டிற்கு வந்தது. கூடுதல் பயணிகளின் வருகைக்காகவே இந்தப் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
கூடுதல் விமான சேவைகள் வழங்கப்பட்டால் மட்டுமே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதற்கு திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் போதிய ஓடுதள வசதி இல்லை. ஆகவே, விமான ஓடுபாதை விரிவாக்கப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்கத் தேவையான நிதியை ஒதுக்கி வழங்குமாறும், மேலும்
இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் (BASA) படி, திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து சேவை வழங்கிட அந்த நாட்டின் விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருச்சிராப்பள்ளியிலிருந்து ஏர் இந்தியா விமானம் மட்டுமே துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படுகிறது. வாராந்திர சேவை அடிப்படையில் ஒரு வாரத்திற்கு 3760 இருக்கைகள் மட்டுமே இந்த விமானத்தில் நிரப்பப்படுகின்றன. இதனால் பயணக் கட்டணமும் பல மடங்கு அதிமாக உள்ளது. ஆகவே, வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர் பெங்களூர், சென்னை, கொச்சின் உள்ளிட்ட நகரங்களிலிருந்து விமான சேவையைப் பயன்படுத்துகின்றனர். இதனால், திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வர வேண்டிய வருவாய் பெங்களூர், கொச்சின் போன்ற விமான நிலையங்களுக்குச் சென்று விடுகின்றன.
எனவே, திருச்சிராப்பள்ளியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். அதன் மூலம் பொதுமக்கள் பயனடைவதோடு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருவாயும் அதிகரிக்கும் எனவும்,
மேலும் திருச்சிராப்பள்ளியிலிருந்து டெல்லிக்கு நேரடி விமான போக்குவரத்து சேவை இல்லை. ஆகவே, டெல்லியிலிருந்து திருச்சிராப்பள்ளி க்கும் திருச்சிராப்பள்ளியிலிருந்து கொச்சினுக்கும் விமானங்களை இயக்கிட வேண்டுமெனவும்
இந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால், திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட அருகாமையில் உள்ள மாவட்ட மக்களுக்கும் பெரும் பயன் விளைவிப்பதாக இருக்கும்.
மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவின் தந்தை காலஞ்சென்ற கிஞ்சராபு எர்ரான் நாயுடுவும் துரை வைகோ தந்தை வைகோவும் நெருங்கிய நண்பர் மற்றும் உறவினர்கள் ஆவார். அமைச்சர் ராம்மோகன் நாயுடு, வைகோ அவர்களின் உடல் நலத்தை மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்ததோடு, அவர் டெல்லிக்கு வரும்போது நேரில் வந்து சந்திப்பதாகத் தெரிவித்ததாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி விமான நிலைய சேவைகள் தொடர்பாக தாங்கள் வைத்த கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தாகத் தெரிவித்தார்
கருத்துகள்