முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா கெம் கண்காட்சியை அறிமுகம் செய்த அமைச்சர்கள்

மத்திய ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் ஆகியோர், 13 வது இந்தியா கெம் கண்காட்சியை அறிமுகம் செய்தனர்

ரசாயனம், உரத் துறையை மேலும் வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்: மத்திய அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா

மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா,  இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் ஆகியோர் "சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் ரசாயனங்கள், பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை" என்ற கருப்பொருளுடன் கூடிய இந்தியா கெம் என்ற ரசாயனக் கண்காட்சியின் 13-வது பதிப்பைப் புதுதில்லியில் இன்று (20.07.2024) அறிமுகம் செய்து வைத்தனர். இந்தியா கெம் 13-வது பதிப்புக்கான கையேட்டையும் திரு ஜெ.பி. நட்டா வெளியிட்டார். ரசாயனம், பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை செயலாளர் திருமதி நிவேதிதா சுக்லா வர்மா, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ரசாயனம் - பெட்ரோ கெமிக்கல் துறையைச் சேர்ந்த தொழில்துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய மத்திய ரசாயனம் - உரத்துறை அமைச்சர் திரு ஜெ. பி. நட்டா இந்த நிகழ்ச்சி, இந்த ஆண்டு அக்டோபரில் மும்பையில் நடைபெறவுள்ள 13-வது கண்காட்சிக்கு தயாராகி வருவதற்குப் பாராட்டுத் தெரிவித்தார். இந்தியா கெம் 2024-ன் கருப்பொருள் "இந்தியாவுக்கான வாய்ப்புகள்: இந்திய ரசாயனம், பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதல்" என்பதை அவர் குறிப்பிட்டார்.  2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.


இந்தியா கெம்-ன் 13-வது பதிப்பின் பிரதான நிகழ்வுகள், அக்டோபர் 17 முதல் 19 வரை மும்பையில் நடைபெறவுள்ளதால் 2024-ம் ஆண்டு இந்தத் துறைக்கு ஒரு முக்கியமான ஆண்டு என்று அவர் கூறினார். ஆராய்ச்சி, மேம்பாடு, மனிதவளப் பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் இந்தத் துறை முக்கியப் பங்களிப்பை வழங்கும் என்று திரு ஜே பி நட்டா நம்பிக்கை தெரிவித்தார்.


இந்த தொழில்துறையின் வளர்ச்சிக்கு அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறிய திரு ஜெ. பி. நட்டா,  ரசாயனத் துறையை வலுப்படுத்த பல்வேறு கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். இந்தத் துறைக்கு அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்தத் துறையை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றும் அவர் இந்தத் தொழில்துறை பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல், வாகனம், கட்டுமானம், மின்னணுவியல், சுகாதாரம், ஜவுளி போன்ற முக்கிய துறைகளின் பொருளாதார வளர்ச்சியில் ரசாயனம்- பெட்ரோ கெமிக்கல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார். பொருளாதார வளர்ச்சியில் ரசாயனத் துறையின் அதிகரித்து வரும் பங்களிப்பையும் இத்துறையில் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் அவர் எடுத்துரைத்தார்.

ரசாயனத் துறையின் முதன்மை நிகழ்வான இந்தியா கெம் 2024 என்பது சர்வதேச கண்காட்சி, மாநாட்டை உள்ளடக்கிய ஆசிய-பசிபிக் தொழில்துறையின் மிகப்பெரிய கூட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்தியா கெம் கண்காட்சி இந்திய ரசாயனத் தொழில் துறை, அதன் பல்வேறு தொழில் பிரிவுகளின் மிகப்பெரிய திறனை வெளிப்படுத்தும். அத்துடன் தொழில்துறை பிரதிநிதிகளிடையே  விவாதங்கள், தொலைநோக்கு யோசனைகள், உத்திசார் ஒத்துழைப்புகள் ஆகியவற்றுக்கான தளத்தை வழங்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய ரசாயனத் தொழில் தற்போது 220 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைக் கொண்டுள்ளது. 2030-ம் ஆண்டில் இது 300 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், 2040-ம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இளையாத்தங்குடியில் கோலப் புரட்சி, மீனா ஆச்சி -லீலா மாமி குழு தந்த வண்ண மாட்சி!

 * இளையாத்தங்குடியில் * *மீனா ஆச்சி - லீலா மாமி குழு செய்த கோலப் புரட்சி! இளையாத்தங்குடி கைலாஷநாதர் - நித்யகல்யாணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்! பகுதி 1: பிரத்யேகம் - தற்போது பிரபலமான நிகழ்வாக நடைபெறும் கோலச் சேவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருநகருக்கு அருகில் அமைந்துள்ள இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் தற்போது பக்தர்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பிரபலமான நிகழ்வாக நகரத்தார் பெண்கள் குழுவினரின் கோலச் சேவை நடைபெற்று வருகிறது. இவர்கள் திருப்பணி ஏற்கனவே நாம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வெளியிட்ட நிலையில், தற்போது இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் இது பிரபலமான நிகழ்வாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது பெண்கள் அடங்கிய குழுவினர் செம்மை, பசுமை, மஞ்சள், நீலம், ஊதா என பல்வேறு வண்ணப் பொடிகளைக் கொண்டு, நுண்ணிய புள்ளிகள் வைத்து, சிக்குக் கோலங்கள், பூக்கோலங்கள், தாமரைக் கோலங்கள், கிளிக் கோலங்கள் இட்டு, கருங்கல் தரையை வண்ண ஓவியமாக மாற்றி வருகின்றனர். தலைம...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...