தமிழ்நாடெங்கும் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் காரணமாகியுள்ள
புதிய குற்றவியல் சட்டங்களை, மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தாமலும் செயல்படுத்தியுள்ளனர். இதனைத் தி.மு.க.வும் தமிழ்நாடு அரசும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர், தலைமை வழக்கறிஞர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவில், புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உள்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்பதை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து மாநில அளவில் என்னென்ன திருத்தங்களை கொண்டு வரலாம் என்பது குறித்து ஒரு மாதத்தில் இந்தக் குழு அரசுக்கு அறிக்கை அளிக்கும். என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற உயர் அலுவலர்கள் கூட்டத்தில், இந்தச் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டு, அதற்காக ஓய்வுபெற்ற மாண்பமை நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையவர்கள் தங்களது கருத்துகளை இந்தக் குழுவிடம் தெரிவிக்கவும்! எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்