தமிழ்நாடு அரசின் 50 வது புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பொறுப்பேற்றார்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்டதையடுத்து முதல்வரின் செயலாளரான முருகானந்தம் ஐஏஎஸ் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் முருகானந்தம். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவல் அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளைத் தொடங்கினார். 1991-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அணியைச் சேர்ந்த முருகானந்தம் பல துறைகளின் முக்கியப் பொறுப்புகளை வகித்தவராவார் 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சரின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார் முருகானந்தம். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல் பட்ஜெட் தாக்கல் செய்த போது நிதித்துறையில் செயலாளராக இருந்தார்.
2001ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றியிருந்தார், கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறையில் முதன்மைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பு வகித்தார்.
கருத்துகள்