முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மயிலாப்பூர் 'ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்' நிறுவனத்தில், ரூபாய்.525 கோடி நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது!

மயிலாப்பூர் 'ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்' நிறுவனத்தில், ரூபாய்.525 கோடி நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது!       


 மயிலாப்பூர் ஹிந்து ஸாஷ்வத (நிரந்தர) நிதி லிமிடெட் நிறுவனம் மூலம் நிதி மோசடி செய்ததாக 

140 பேர் புகார் அளித்த நிலையில் பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் கைது செய்தனர்


 

வின் டிவி உரிமையாளர் தேவநாதன் யாதவ் மயிலாப்பூர் ஹிந்து ஸாஷ்வத (நிரந்தரமான) நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில் நிதி நிறுவன மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.



இந்த நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதி வைத்திருந்ததாகவும், பலர் உறுப்பினராக இருந்ததாகக் தெரிகிறது.

ரூபாய். 540 கோடி வரை மோசடி என எழுந்த புகாரில் வின் டிவி தேவநாதன் யாதவை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் கைது செய்தனர்.



சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.     



 சென்னை, மயிலாப்பூர் மாடவீதியில் 150 ஆண்டுகளாக ‘மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்’  நிதி நிறுவனம் செயல்படுகிறது. அதன் தலைவராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரான தேவநாதன் யாதவ் இருக்கிறார்.நிதி நிறுவனம் தொகை முதிர்வு காலத்திற்குப் பின்னரும் தங்கள் முதலீடுகளைத் திருப்பித் தரத் தவறியதாகக் கூறப்படுகிறது,

மேலும் வாக்குறுதியளித்தபடி வட்டி கொடுக்கப்பட்டது. மேலும் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களான ஆர்.குணசீலன் மற்றும்
டி.மஹிமைநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவநாதன் யாதவ் மற்றும் அவரது நிறுவனம் ரூபாய் 24.5 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக 140-க்கும் மேற்பட்ட டெபாசிட்டர்கள் புகார் அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது.


2024 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக போட்டியிட்ட தேவநாதன் யாதவ்  2017 ஆம் ஆண்டு முதல் மேற்கண்ட நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்தார். இந்தியாவின் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவராகவும், வின் டிவியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் அம்பேத்கர் ராஜன் மூலம் உத்திரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர்

கான்ஷிராமிடம் பணியிலிருந்து பின் அவர் காலமாகவே தமிழ்நாட்டுக்குத் தனவந்தராக மாறி வந்த நிலையில் அது ஒரு பின் கதை என்று பலரும் அறிந்த நிலையில், ஆனால் தற்போது இந்த நிதி மோசடி குறித்து முறையாக ஆய்வு செய்துள்ளோம். இது முதன்மையானது , மேலும் நிறுவனம் மற்றும் தேவநாதன் யாதவ் உட்பட நான்கு பேருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.   அப்பாவி மக்கள் பணத்தை திருப்பித் தராதவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே இது வெட்கக்கேடானது

என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை  நாட்டிய நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில், "கஷ்டப்பட்டு சம்பாதித்தவர்கள் மற்றும் ஓய்வூதியப் பணம் பல ஆண்டுகளாக மயிலாப்பூர் அசோசியேஷனில் முதலீடு செய்திருக்கிறார்கள். தேவநாதன் யாதவை வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுத்தது, அந்த அசோசியேஷன் பணத்தை அவர் பாஜக 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பயன்படுத்தியதாகத் தகவல். பணத்தை திருப்பி கொடுக்க நிறைய நேரம் கொடுக்கப்பட்டது.அப்பாவி மக்கள் ஏமாற்றப்பட்டு, இப்போது பணத்தை திருப்பித் தராதவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். வெட்கக்கேடானது.

பண விஷயங்களில் நீங்கள் எப்போதாவது மக்களுக்காக உங்கள் அக்கறையை உயர்த்தியுள்ளீர்களா? நீங்களும் பாஜகவும் எப்போதும் மக்களை ஏமாற்றுவதில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறீர்கள். மோசடி செய்ததற்காக அவர் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அவர் குற்றவாளி இல்லை என்றால் சட்டம் அவரை விடுவிக்கும்." எனவும் விமர்சித்துள்ளார்.பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை 
இரட்டை வேடம் போடும் வல்லமைக்கு இன்றைய அரசியலில்  குற்றப் பின்னணி கொண்டவர்களை - அதுவும் அதி பயங்கர குற்றப் பின்னணி கொண்டவர்களை - அதிகமாக கட்சியில் சேர்த்த பெருமை இவரைத் தான் சேரும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மாவட்டம் தோறும் இவர் கட்சிக்காரர்கள் ஒரு புறம் செய்கிறார்கள்.

மறுபுறம், அவர்கள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது என்ற அழுத்தத்தை மத்திய அதிகார மையம் செய்வதாக பேசப்படுகிறது 
தமிழ்நாடு காவல்துறை டெல்லியின் கட்டளைக்கு கட்டுப்படுவதா? சென் ஜார்ஜ் கோட்டையின் கட்டளைக்கு கட்டுப்படுவதா? என இரண்டுங் கெட்டான் நிலையில் தவிக்கிறது. பெரும்பாலும் டெல்லியின் கையே ஓங்கி இருக்கிறது.
இதைக் கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதிக்கு இழைக்கப்பட்ட அநீதி விவகாரம் தொடங்கி பல்வேறு நிகழ்வுகளில்  இங்குள்ள பாமர மக்களாலும் உணர முடிகிறது.
விஷயத்திற்கு வருவோம். மயிலாப்பூர் ஹிந்து சாஸ்வத நிதி நிறுவனத்தில் அப்பாவி நடுத்தர மக்களின் பணத்தை சுமார் 525 கோடிக்கு மோசடி செய்து ஆட்டம் காட்டி வருபவர் தேவநாதன் யாதவ். கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இது தொடர்பான புகார்களை மயிலாப்பூர் வாசிகள் பாஜக மாநிலத் தலைமை அலுவலகமாக கமலாயத்திற்கே வந்து பல முறை கவனப்படுத்தினார்கள். அவர்கள் ’மலை’ போன்ற நம்பிக்கைக்கு ’உலை’ வைத்தவர் இவராகிறார்.

இவர் ஒரு நியாயமான கட்சித் தலைமை என்றால், மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உரிய விசாரணை நடத்தி மக்கள் பணத்தை திருப்பி ஒப்படைக்க அவருக்கு கட்டளை இட்டிருக்க வேண்டும். ஆனால், குற்றவாளியை பாதுகாத்து, அவருக்கு சிவகங்கையில் நிற்க நாடாளுமன்ற வேட்பாளர் சீட்டும் வழங்கப்பட்டதென்றால், அது சீட்டிங் செய்ததற்கு தந்த பரிசு போலல்லவா ஆனது !

இவ்வளவு காலம் தாழ்ந்து மக்களின் தொடர் போராட்டம் காரணமாக ஒரு கைது நடந்திருக்கிறது. இப்பவாவது சட்டப்படி நடவடிக்கை போகட்டும் என அமைதி காக்க முடிகிறதா என்றால் ? இல்லை என்பது தான் பதிவாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...