முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு முழுவதும் 56 காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு முழுவதும் 56 காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்:


உணவு விநியோக பிரிவின் சிஐடி பிரிவு அலுவலர்கள் மொத்தமாகப் பணியிட மாற்றம்.  மாநில உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார் நேற்று வெளியிட்ட உத்தரவில் :

சென்னை நுண்ணறிவுப் பிரிவு: சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளைக் கண்காணிக்கும் பிரிவு துணை ஆணையர் எஸ்.சக்தி கணேசன் சென்னை நுண்ணறிவு பிரிவு (1) துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

 மதுரை தெற்கு மண்டல அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளர்சுஜித் குமார் சென்னை பாதுகாப்புப் பிரிவுக்கும், வண்டலூர் ஊனமாஞ்சேரியிலுள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமி கண்காணிப்பாளர் எஸ்.செல்வநாகரத்தினம் திருவல்லிக் கேணி காவல்துறை மாவட்டத் துணை ஆணையராகவும் மாற்றப்பட்டனர்.

சென்னை மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையர் (2) என்.எஸ்.நிஷா, நீலகிரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும், இராமநாதபுரம் கடலோரப் பாதுகாப்புக் குழும கண்காணிப்பாளர்ஹரிகிரன் பிரசாத், சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராகவும், திருப்பத்தூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும், திருவண்ணாமலை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கோயம்புத்தூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும்  பணியமர்த்தப்பட்டனர்.


திருநெல்வேலி மாநகர் கிழக்கு துணை ஆணையர் ஆதர்ஷ் பசேரா, பெரம்பலூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும், தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறைக் கண்காணிப்பாளர் புக்யா சினேக பிரியா, சென்னை அண்ணாநகர் துணை ஆணையராகவும், சென்னை பூக்கடை காவல்துறை மாவட்டதுணை ஆணையர் ஸ்ரேயா குப்தா திருப்பத்தூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும், தாம்பரம் காவல்துறை மாவட்டம் பள்ளிக்கரணை துணை ஆணையர் கௌதம்கோயல் சேலம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும் , அங்கிருந்த அருண் கபிலன் நாகப்பட்டினம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, கரூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராவும், நீலகிரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் சென்னை பூக்கடை துணை ஆணையராகவும், காவல் நவீனமயமாக்கல் உதவி ஐ.ஜி டி.கண்ணன், விருதுநகர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும், தாம்பரம் காவல்துறை ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.சுப்புலட்சுமி கோயம்பேடு காவல்துறை துணை ஆணையராகவும் பணி மாறுதல் செய்யப்பட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு (1) துணை ஆணையர் ஜி.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும், கரூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் கே.பிரபாகர் திருவண்ணாமலை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும், சென்னை காவல்துறை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தருமபுரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும், சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் வி.ஆர்.னிவாசன் தென்காசி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும், சேலம் மாநகர் தெற்கு காவல்துறை துணை ஆணையர் என்.மதிவானன் வேலூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும், ஆவின் விஜிலென்ஸ் கண்காணிப்பாளர் மேகலினா, ஐடென் சென்னை தலைமையிடத் துணை ஆணையராகவும் மாற்றப்பட்டனர்.

சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் க்ரைம் துணைஆணையர் வி.வி.கீதாஞ்சலி, அதே பிரிவிலுள்ள மத்திய குற்றப்பிரிவு (2) துணை ஆணையராகவும், சென்னை காவல்துறைக் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் டி.ரமேஷ்பாபு, சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் வி.பத்ரி நாராயணன் கோயமுத்தூர் தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப் பட்டனர்.

உணவுப் பொருட்கள் விநியோகம்: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மண்டலங்களான கோயமுத்தூர் கண்காணிப்பாளர் எம்.சந்திரசேகரன், திருச்சிராப்பள்ளி ஏ.சுஜாதா, மதுரை விஜய கார்த்திக் ராஜ் ஆகியோர் மாற்றப்பட்டு புதிய  கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். என அந்த உத்தரவில் கூறப்பட்டுளளது.

தமிழ்நாட்டில் 56 காவல்துறை உயர் அலுவலர்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...