ஆடிப்பெருக்கு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். ஆடி மாதத்தில் 18 ஆம் தேதி
மேற்குத் தொடர்ச்சி மலையும் மலை சார்ந்த இடங்களிலும் தென்மேற்குப் பருவக்காற்றின் மழை பெய்து நிலம் நோக்கி ஆறுகளிலும் ஓடைகளிலும் புதுப்புனல் பொங்கி வரும் நாளின்று
காவேரி ஆறு பெருகி இன்று பெரு வெள்ளமாக தமிழ்நாடு ஆற்றுப்பகுதிகளைப் பாய்ச்சலுடன் கடக்கிறது. தமிழர் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த காவேரி! இதோடு வைகை, தாமிரபரணியும் உண்டு,
மேலும் இந்த விசாலமான வரிசையில், அடையாறு, அமராவதி ஆறு - காவிரியின் துணையாறு, அரசலாறு, அர்ச்சுணன் ஆறு, பவானி ஆறு - காவிரியின் துணையாறு, சிற்றாறு, சின்னாறு, செஞ்சி ஆறு, செய்யாறு ஆறு ,கபினி ஆறு, கடனாறு - தாமிரபரணியின் துணையாறு, கல்லாறு, காவிரி ஆறு - தமிழகத்தின் பெரிய ஆறு, கெடிலம் ஆறு, கொள்ளிடம் ஆறு, குடமுருட்டி ஆறு, குண்டாறு, குந்தா ஆறு, குதிரையாறு - அமராவதியின் துணையாறு, நங்காஞ்சி ஆறு - குடகனாற்றின் துணையாறு, கெடிமலம், கோமுகி ஆறு, கோதையாறு, மலட்டாறு, மஞ்சளாறு, மணிமுத்தாறு - தாமிரபரணியின் துணையாறு, மணிமுக்தா ஆறு, மோயாறு, முல்லை ஆறு, நொய்யல் ஆறு - காவிரியின் துணையாறு, பச்சை ஆறு - தாமிரபரணியின் துணையாறு, பரளி ஆறு, பாலாறு, பரம்பிக்குளம் ஆறு, பைக்காரா ஆறு, சங்கரபரணி ஆறு, சண்முகா ஆறு, சிறுவாணி ஆறு, தென்பெண்ணை ஆறு, தாமிரபரணி ஆறு, உப்பாறு, வைகை ஆறு, வராக ஆறு, வைப்பாறு, வெண்ணாறு, வெட்டாறு, ஜனத்குமார ஆறு- காவிரியின் துணையாறு, மார்கண்ட ஆறு, பாம்பாறு, வாணியாறு, கம்பையநல்லூர் ஆறு-தென்பெண்னையாற்றின் துணையாறுகள் எனத் தமிழ்நாடு முழுவதும் நரம்பு மண்டலம் போல ஆறுகளிருந்தன.
எனினும், இந்த ஆறுகள் யாவும் எல்லாப் பருவங்களிலும் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்தவையல்ல. மழைக்காலங்களில் மட்டுமே இந்த ஆறுகள் நீர்புரண்டு கிடந்தன.
கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே விவசாயிகள் நிலத்தையும் விதைகளையும் பண்படுத்தும் நாளாகவும் இந்த ஆடிப்பெருக்கு விவசாய நிலங்களை நனைத்து பசும்பயிர்களை உருவாக்கும் நாளாகவும் இருந்த காரணத்தால்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்றார்கள்!
இந்த ஆடியில் விதைத்தால் தான் தையில் அறுவடை முடியும்.
ஆண்டுதோறும் இந்த புதுப்புனல் அன்று பெண்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றுவார்கள். ஆடித் திருவிழா ஆடி நோம்பி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நாட்களில் புது வெள்ளம் பாய்ந்து வருவதை வேடிக்கை பார்க்க சமைத்த உணவுகளுடன் ஆற்றோரங்களில் மக்கள் கூடுவது கால காலமாகத் தொடரும் அழகான ஏற்பாடு! அந்த நேரங்களில் நதிகள் ஓடைகளின் மீது பூக்களைத்தூவி நதியை வரவேற்பது தமிழ்நாடு மக்களின் கலாச்சாரப் பண்பாட்டுச் செயல்பாடு.
நீர் மேலாண்மை நாளாக பண்பாடு உருப்பெற்று உள்ளதை சூழலியல் வாதிகள் மக்களிடம் நீராதாரம் பகுதிகளை விழிப்புணர்வுடன் காக்க இந்த நாள் நிகழ்வுகளை சமய விழாக்கள் என முன்னெடுத்த காரணமாக இது இப்போதும் தொடர்கிறது. முல்லைப் பேரியாறு அணை கட்டப்பட்டது
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி ஆண்ட ஆட்சியில் - 1895 ஆம் ஆண்டில். அப்போது அணை கட்டுமிடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது, சங்க இலக்கியத்தில் கூட பல நூற்களில் மேற்கோள் கட்ட பட்டு உள்ளது ,எடுத்துகாட்டாக சிலப்பதிகாரம் வர்ணிக்கும் முல்லையாறும் பேரியாறும் சிவன் கழுத்தில் ஆரம் போல எனக் கூறுகிறது. "பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை" (சிலப்பதிகாரம். 25, 22) என மேற்கோள் காட்ட பட்ட இடம்,(பெரியார் என்பது தவறு பேரியாறு என்பதுதான் சரி என ஆய்வளர்கள் விளக்கம். பல்லுயிர் ஓம்புதல் – இயற்கை வழிபாடு – இயற்கையோடு இயைந்த வாழ்வியல் கொண்ட தமிழர் மற்றும் இந்தியர் மரபு என்றெல்லாம் காலங்காலமாக ஜம்பமடித்து வரும் நாம் என்ன செய்தோம் என்பதே வருடத்தில் 35.3 சதவீதம் அழிந்தேவிட்டது. இத்தனைக்கும் இது அரசு துறை சார்ந்த அமைப்பு வெளியிட்ட ஸ்டடி. இழப்பு மேலும் அதிகம் என்று வேறு சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.முல்லை பேரியாறு அனையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த சட்டப் போராட்டம் நடத்துவோம்— தமிழக முதலமைச்சர் அவர்கள்
152 அடி உயர்த்துவது ஓரு புறம் இருக்கட்டும்,1979 ஆம் ஆண்டில் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்ததால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழுப்புகள் ஏராளம்.
தரிசாக மாறிய நிலப்பரப்பு 38000 ஏக்கர்
இருபோக சாகுபடியாக இருந்து ஓரு போக சாகுபடி நிலமாக மாறிய நிலப்பரப்பு -26000 ஏக்கர்
ஆற்று நீர் பாசன சாகுபடியிலிருந்து நீர்வரத்து இல்லாமையால் ஆழ்குழாய் சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53000 ஏக்கர்
விவசாய உற்பத்தி இழுப்பு - ஆண்டுக்கு ரூபாய்.55 கோடி
மின் உற்பத்தி இழப்பு -ஆண்டுக்கு ரூபாய்.75 கோடி
1980 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மொத்த இழுப்பு = ரூபாய்.4346 கோடிக்கு மேல்.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டதன்படி :"வான ஊர்தி ஏறினள் மாதோகானமர் புரிகுழற் கண்ணகி - தாண் - எண். வெண்பா தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் - தெய்வமாய் மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து. கட்டுரை முடிகெழு வேந்தர் மூவருள்ளும் படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர் அறனும், மறனும், ஆற்றலும், அவர்தம் பழவிறல் மூதுார்ப் பண்புமேம்படுதலும், விழவுமலி சிறப்பும், விண்ணவர் வரவும். ஒடியா இன்பத்து அவருடை நாட்டுக் குடியும், கூழின் பெருக்கமும், அவர் தம் வையைப் பேரியாறு வளஞ்சுரந்து ஊட்டலும், பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும், ஆரபடி, சாத்துவதி என்றிரு விருத்தியும், நேரத் தோன்றும் வரியும், குரவையும், என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும், வடஆரியர் படைகடந்து: தென் தமிழ்நாடு ஒருங்குகானப், புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ் செழியனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று..".. என்பதே.
கருத்துகள்