தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார்
நியமிக்கப்பட்டார். அதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது.
1988-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக காவல்துறையில் பணியில் சேர்ந்த சுனில்குமார் 2021-ஆம் ஆண்டு சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவில் டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர், ஏற்கனவே தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் ஐ.ஜி., கூடுதல் டி.ஜி.பி., டி.ஜி.பி.யாக பணியாற்றியுள்ளார். தற்போது ஓய்வு பெற்ற பின் அவருக்கு இந்தப் பணி கிடைத்துள்ளது. ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி இந்தப் பதவியில் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை எனத் தெரிகிறது.
கருத்துகள்