டெலிகிராம் செயலி தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பவெல்துரோவ் உடன் இளம்பெண் ஒருவர் கைது.
ஜூலி வவிலோவா என்ற பெண் இஸ்ரேலின் மொசாட் உளவாளி எனக் குற்றம் சாட்டப் பட்டது டெலிகிராம் செயலி மூலமாக சட்டவிரோதச் செயல்கள் நடை பெறுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் குற்றவியல் நடவடிக்கைகளைக் கண்காணிக்க தவறியது, பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்துப் பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டெலிகிராம் CEO பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டின் விமான நிலையத்தில் சனிக்கிழமையன்று மாலை கைது செய்யப்பட்டார். 90 கோடி பயனாளர்களைக் கொண்ட டெலிகிராமின் CEO கைது செய்யப்பட்டது உலக அளவில் பரபரப்பான நிலையில், பவெலுடன் ஜூலி வவிலோவா எனும் இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டார். இவர் பவெலின் காதலியென நம்பப்படுகிறது.24 வயதான ஜூலி வவிலோவாதுபாயைச் சேர்ந்த கிரிப்டோ பயிற்சியாளர் மற்றும் சமூக ஊடகப் பங்கேற்பாளர் என்பது தெரிய வந்தது. கேமிங், கிரிப்டோ, மொழி ஆகியவற்றை தனது ஆர்வப் பட்டியலில் தெரிவித்துள்ளவர் ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடியவர். இவர் மொசாட் ஏஜென்ட்டாகச் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வவிலோவாவும், டெலிகிராம் CEO வும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அஜர்பைஜான் உள்ளிட்ட பல நாடுகளில் ஒன்றாகச் சுற்றியுள்ளனர். அவர்களது வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகியது.
கருத்துகள்