நியோ மேக்ஸ் வழக்கில் அக்டோபர் மாதம்-19 ஆம் தேதியன்று வெளிவந்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவில், பல அம்சங்களை சுட்டிக்காட்டியது.
இந்தத் தீர்ப்பின் படி, அக்டோபர் மாதம் - 23: ஆம் தேதி பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை பொது அறிவிப்பை வெளியிட வேண்டும். அக்டோபர் மாதம்- 23 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம்– 30 ஆம் தேதி வரை - பொது அறிவிப்பில் உள்ள பட்டியல் படி புகார்தாரர்கள் புகார் அளிக்க அவகாசம். அக்டோபர் மாதம் - 31 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் - 26 ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின்
உண்மைத்தன்மையை பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வு செய்வதற்கான அவகாசம். நவம்பர் மாதம் - 27 ஆம் தேதி- உறுதி செய்யப்பட்ட முதிர்வுத் தொகையுடன் கூடிய முதலீட்டுத் தொகை விவரங்கள் அடங்கிய புகார்தாரர்களின் மொத்தப்பட்டியலை வெளியிடுவது. நவம்பர் மாதம்- 27 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம்- 02 ஆம் தேதி வரை பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல்துறை வெளியிட்ட பட்டியலில் ஆட்சேபனைகள் ஏதுமிருந்தால் முறையீடு செய்வதற்கான அவகாசம். டிசம்பர் மாதம் -03 ஆம் தேதி- இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல். வழக்கின் இறுதி விசாரணை. என்பதாக சில தேதிகளையும் குறிப்பிட்ட நிலையில் நீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையில்
அக்டோபர் மாதம்-23 ஆம் தேதியே வெளியாகியிருக்க வேண்டிய விளம்பர அறிவிப்பு பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல்துறை மூலம் வெளியிடப்படாத நிலையில், நியோமேக்ஸ் முதலீட்டாளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
அறிவிப்பை யார் வெளியிடுகிறார்கள் என்ற அடிப்படையான விவரம் கூட இடம்பெறாத, தெளிவாக இல்லாத ஒரு அறிவிப்பும் வெளியாகியிருந்தது. அதில், நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் அக்டோபர் மாதம்-30 ஆம் தேதிக்குள்ளாக புகார் தெரிவிக்கலாம் என்பதாக மட்டுமே இடம் பெற்றிருந்தது,
மேலும் குழப்பத்தை அதிகப்படுத்திய நிலையில், பொருளாதாரக் குற்றப்பிரிவு "for being mentioned" வழிமுறையின் வாயிலாக, முந்தைய உத்தரவில் சில மாறுதல்களை முன் வைத்திருக்கிறார்கள். EOW காவல்துறை முன்வைத்திருந்த கோரிக்கைகளை அனுமதித்து முந்தைய தீர்ப்பில் சில மாறுதல்களை செய்து மறு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்,
நீதிபதி பரதசக்ரவர்த்தி. இதன்படி,இதுவரை புகார் அளிக்காதவர்கள் புகார் அளிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது, இந்நீதிமன்றத் தீர்ப்பு. மொத்தம் எத்தனை பேர் முதலீட்டாளர்கள், மொத்த சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்பதையெல்லாம் ஒரு முறை சரிபார்த்த பிறகே, திருப்திகரமான முறையில் இருப்பதாக உணர்ந்த பிறகே இவ்வழக்கில் இறுதி உத்தரவை பிறப்பிக்க இயலும் என்பதாகவும் தெரிவித்திருக்கிறார் நீதிபதி.
ஆகவே, இதுவரையிலும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் பேச்சை நம்பி புகார் கொடுக்க முன்வராதவர்களும்கூட, நீதிமன்றத்தின் வாயிலாக நியாயமான தீர்வை நோக்கிநகர்வதற்கான ஒரு வழிமுறையாக அமைந்திருக்கும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி உரிய முறையில் புகார் அளிக்க பெருமளவில் முன்வருவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய, புகார்களை விட குறைந்தபட்சம் இன்னும் பத்து மடங்கு புகார்களாவது இம்முறை பதிவாக வாய்ப்பிருப்பதாகவே தெரிவிக்கிறார்கள். அதற்கான தொடர்பு முகவரி: காவல் துணைக் கண்காணிப்பாளர், பொருளாதாரக் குற்றப்பிரிவு, 4/425-5, முதல் தளம், சங்கரபாண்டியன் நகர், தபால் தந்திநகர் விரிவாக்கம், மதுரை - 625017. மின்னஞ்சல் முகவரி :eowmadurai2@gmail.com அலுவலகத் தொலைபேசி : 0452 2562626 ஆகும். இதில் பொது நீதி யாதெனில்:- குற்றவாளிகள் மீது வட்டம் போட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவும், நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முயல்வதை ஒரு சதுரமான பெயர் கொண்ட நிலம் வாங்கி விற்பதற்குள்ள அமைப்பு தடுக்கும் நிலையில் இருப்பதாகவே பலரும் பேசும் நிலையில்... இதில் PMLA மற்றும் SEBI தலையீடு விரைவில் வந்தால் நல்லது. திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது...அதை சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது, திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!
கருத்துகள்