முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மராட்டியத்தில் ஆர்எஸ்எஸ் ஸின் செல்லப் பிள்ளை தேவேந்திர பட்னாவிஸ்க்கு முதலமைச்சர் மகுடம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக  சிவசேனா என்சிபி கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது


மகாராஷ்டிரா மாநிலத்தில்  பெரும்பான்மையான மக்கள் காங்கிரஸ் உத்தவ் தாக்கரே  சரத்பவார் கூட்டணி வேட்பாளர்களைப்  புறக்கணித்தனர். 


இது முழுக்க ஆர்எஸ்எஸ் ஸின் செல்லப் பிள்ளை தேவேந்திர பட்னாவிஸ்க்கு முதலமைச்சர் மகுடம் சூட்டுவதற்காக ஆர்எஸ்எஸ் பேரியக்கத்தால் கட்டமைக்கப்பட்ட. ஒரு தேர்தல்.                                சரியாகப் பொது ஆண்டு 1775 ல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனிப் படையை மண்டியிட வைத்தது நானா பட்னவிஸ் - தற்போது ஷிண்டேவின் மராட்டியக் கூட்டணி..!
249 வருடங்களுக்கு பிறகு 2024 ஆம் வருடம், மராட்டியத்தில் காங்கிரஸ் சேனையை புறமுதுகிட்டு ஓடச் செய்துள்ளது தேவேந்திர பட்னவிஸ் - ஏக்நாத் ஷிண்டேவின் மகாயுதி மராத்திய கூட்டணி..!


சில மாதங்களுக்கு முன்பு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியின் ஆஃப் கி பார் சார் சௌ பார் எனும் பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார சூழலில் ஆர்எஸ்எஸ் முனைப்புடன் பணியாற்றவில்லை. அதனால் பாரதிய ஜனதா கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் ஒரு சரிவைச் சந்தித்தது. ஆனால் அது தற்போது ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் கடுமையான உழைப்பால் சரி செய்யப்பட்டது என்பதே உண்மை. 




2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் போல அல்லாமல் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் ஆர்எஸ்எஸ் தனது களப்பணியாளர்களை அனைத்து மட்டத்திலும் பாரதிய ஜனதா கட்சி சிவசேனா என்சிபி தொண்டர்களுடன் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து இராணுவ கட்டுக்கோப்புடன் பணியாற்றி இந்த மகத்தான வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது. 



இது நரேந்திர மோடி-அமித்ஷா கூட்டணி பாரதிய ஜனதா கட்சிக்கு ஆர்எஸ்எஸ் கொடுத்துள்ள நேர்மறையான அதே நேரத்தில் அதிரடியான பதில். இதை படிக்கும் சிலர் மனம் கொந்தளித்து கோபப்படலாம். ஆனால் உண்மை இது தான் மாறாது.


இனி அடுத்த சில மாதங்களில் மெல்ல மெல்ல ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் தரப்பில் சட்ட மன்ற உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சி  விழுங்கி ஏப்பம் விடும் படலம் துவங்கும். அதன் முதல் படியாக ஏக்நாத் ஷிண்டே அஜித் பவார் இருவரையும் ராஜ்ய சபாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கி மத்திய அமைச்சர்களாக அமர்த்தப்படுவர். மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில்  தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை  பூர்வீகமாக கொண்ட தமிழர் கேப்டன் ஆர். தமிழ்ச்செல்வன்.


சயான் கோலிவாடா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்ச்செல்வன் அவர்கள்  வெற்றி பெற்றார் . அதுபோல அமையும் புதிய தேவேந்திர பட்னாவிஸ் அரசில் அமைச்சராகவும் இடம்பெறுவார் எனத் தகவல்




இந்தத் தேர்தலில் தேவேந்திர பட்னாவிஸ் டீமின் உழைப்பு அளப்பரியது. கடந்த ஓராண்டு காலமாக பட்னாவிஸ் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை செவ்வனே செய்துள்ளதை இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது. 

காங்கிரஸ் கட்சிக்கு இது மிகப்பெரிய பின்னடைவு மற்றும் படிப்பினை. தேர்தலில் வெற்றி பெற பணபலம் மட்டுமே போதாது. அனைத்துக் கூட்டணிக் கட்சித்  தொண்டர்களுடன்  இணைந்து அனைத்து மட்டத்திலும் உழைக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி ஏனோ மறந்து விட்டது. தேர்தல் வெற்றிக்கு முனைப்புடன் உழைக்கும் தன்மையை அதிவேகமாக இழந்தும் வருகிறது.  பாவம்  உத்தவ் தாக்கரே இன்னும் பால் தாக்கரே காலம் போல ஒரு கணக்கில் உள்ளார். அதேபோல தேசிய வாத காங்கிரஸ் சரத்பவார் இருவர் நிலையும் அந்தோ பரிதாபம். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் கூட்டணி பெற்ற வெற்றி என்பது ஆர்எஸ்எஸ் தந்த பரிசு என்பதை உணரும் நாள் தான் இது என்று நாம் நம்புகிறோம். 

மராட்டியத்தில் இரண்டு மாநிலக் கட்சிகளையும் அழித்தே விட்டது பாஜக. அடுத்ததாக 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜேஎம்எம் கூட்டணியின் அபார வெற்றி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு படிப்பினை. கட்சியை உடைத்து ஆடும் தேர்தல் ஆட்டம் அங்கு பலனளிக்கவில்லை. மேலும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஹேமந்த் சோரன் மனைவி. கல்பனா முர்மு சோரனின் அமர்க்களமான பணியை  பறைசாற்றும் விதத்தில் இந்த மகத்தான வெற்றியை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு பெற்றுத் தந்துள்ளார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா, மேற்கு வங்காளத்தில் மமதா பானர்ஜி, டெல்லி ஷீலா தீட்சித்,  உத்திரப் பிரதேச மாயாவதி, ராஜஸ்தான் வசுந்தரா ராஜே சிந்தியா வரிசையில் ஜார்க்கண்ட் கல்பனா முர்மு சோரன்




வீரமிகு விவேகம் மிகு பெண் தலைவராக உருவாக்கியுள்ளார். அவரது பேச்சில் உள்ள வசீகரம் கலந்த தன்னம்பிக்கை அவரை ஒரு நல்ல பெண் அரசியல்வாதியாக்கி விட்டது. மலை வாழ் பழங்குடியினர் பிரதிநிதி 


கல்பனா முர்மு சோரன்!பீஹார் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தோல்வி கண்டுள்ளது. நான்கு தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட சட்டசபை இடைத்தேர்தலில் தமது கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். தராரி தொகுதியில் கிரண் சிங், ராம்கரில் சுஷில் குமார் சிங், இமாம்கன்ஜ் தொகுதியில் ஜிதேந்திர பாஸ்வான், பெலாகன்ஜ் தொகுதியில் முகமத் அமாஜத் ஆகியோரை வேட்பாளர்களாகவும் அறிவித்தார் இந்த தேர்தல் முடிவுகள் தமது எதிர்கால அரசியல் பயணத்தை மாற்றி அமைக்கும். வெற்றி கிடைக்கும், அதன் மூலம் அரசியல் பாதை பலப்படும் என்று கனவு கண்ட பிரசாந்த் கிஷோர், இந்த நான்கு தொகுதிகளில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தினார். 30 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டிய நேரம் வந்துவிட்டது, உங்களுக்கு நன்மை செய்யவே வந்துள்ளேன் என்று மக்களுக்கு முன் அறிவிப்பு செய்த இவரது கட்சி தோல்வி என்பதை ஊருக்கே ஜோதிடம் சொல்லும் ஜோஸியக்காரன் தனக்கு பலன் அறிவதில்லை என்ற நிலையில் தான் பார்க்க வேண்டும்.


ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு தமது கட்சி தான் பிரதானமான போட்டி என்று செல்லும் இடங்களில் எல்லாம் அறிவித்தார். இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் சொற்பமான வாக்குகளே பெற்று அவரது கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. பல மாநிலங்களில் இருக்கும் கட்சிகளுக்கெல்லாம் பலப்பல ஐடியாக்கள் சொல்லி காசு பார்த்த பிரசாந்த் கிஷோர், தமது சொந்தக் கட்சியை ஜொலிக்க வைப்பதில் தோல்வி அடைந்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், 'இனி பிரசாந்த் கிஷோரின் எதிர்கால அரசியலுக்கு யார் ஐடியா தருவார்' என்ற விமர்சனங்கள் இணையத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளன.கேரளா வயநாடு தொகுதி நான்கு லட்சம்


வாக்குகள் கடந்து பிரியங்கா காந்தியை முதல் முறையாக தேர்வு செய்து அனுப்பி வைக்கிறது இதுவே காங்கிரஸ் கட்சியின் வெற்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...