வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த , குற்றவாளிகள் கண்டறியப்பட்டது குறித்து சிபிசிஐடி காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக
வேங்கை வயல் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது ஆதாரங்களாய் வந்து அழிக்கப்பட்ட புகைப்படங்கள்.
வேங்கை வயல் சம்பவம் குறித்து துப்பு துலங்கிய காவல்துறை அதன் பின்னணி
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு பஞ்சாயத்திலுள்ள வேங்கைவயல் கிராமத்தில் 10,000 லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்ட மேல்நிலைக் குடிநீர் நீர்தேக்கதொட்டியில் மனித கழிவுகள் மிதப்பதாக 26.டிசம்பர்.2022 ஆம் தேதியன்று கனகராஜ் என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில்
20.ஜனவரி.2025 ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் எதிரிகள் 1 முரளிராஜா (வயது 32/2023), த/பெ ஜீவானந்தம், வேங்கைவயல், 2.முத்துகிருஷ்ணன்,( வயது 22/2023), த/பெ கருப்பையா வேங்கைவயல். 3.சுதர்சன், (வயது 20/2023), த/பெ பாஸ்கரன், வேங்கைவயல் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளவழக்கில்
முரளிராஜாவிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று தான் பணிக்குச் சென்றுவிட்டதாகவும் தனக்கு நடந்த சம்பவம் பற்றி எந்த விபரமும் தெரியாதெனத் தெரிவித்துள்ளார். மேலும் சுதர்சன் என்பவரை விசாரணை செய்து அவரது செல்போனைக் கைப்பற்றி பின்னர் தடய அறிவியல் துறை ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வறிக்கை பெறப்பட்டது.
அந்த ஆய்வு அறிக்கை சம்பவத்தன்று நீர்தேக்க தொட்டியின் மேலிருந்து அவரது செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அழிக்கப்பட்டிருந்தன. தடய அறிவியல் ஆய்வகத்தின் மூலம் புகைப்படங்கள் மீட்கப்பட்டு அவற்றை ஆய்வு செய்ததில் கீழ்க்கண்ட விபரங்கள் தெரியவந்தது. 26.டிசம்பர்.2022 ஆம் தேதி காலை 07.34.59 மணிக்கு தண்ணீர் தொட்டி முழுவதும் தண்ணீர் நிரப்பப்பட்டு தண்ணீரில் எந்த மலத்துண்டுகளும் இல்லாமல் சுத்தமாக இருந்தது.
07.35.21 மணிக்கு முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகிய இருவரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேலே செல்பி எடுத்துக்கொண்ட போட்டோ பதிவு. 07.35.22 மணிக்கே வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரில் மனித மலம் உள்ள புகைப்படம். 07.53.04 மணிக்கு முரளிராஜா தண்ணீர் டேங்க் மேலே உட்கார்ந்து கொண்டும் சுதர்சன் வீடியோ எடுத்துக்கொண்டும் முத்துகிருஷ்ணன் சிரித்துக்கொண்டும் உள்ள வீடியோவில் வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரில் மலம் உள்ளது. அப்போதும் நீர்தேக்க தொட்டியில் மலம் மிதக்கவில்லை.
ஆனால் அச்சமயத்தில் முரளிராஜா நீரில் இருந்து மலத்தை சேகரித்ததாக உண்மைக்கு புறம்பாக கூறுகிறார். பின்பு முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவர் முத்தையாவின் செல்போனில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 09.24 IST மணிக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒரே ஒரு மலத்துண்டு மட்டும் இருந்துள்ளது. மேற்கூறிய நீர்த்தேக்க தொட்டியில் சுதர்சனால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள தண்ணீரில் எந்தவிதமான மலத்துண்டுகளும் இல்லை.
இவர்கள் இறங்கி வந்த பின்பு தான் தண்ணீரில் மலத்துண்டு இருந்தது. பின்னர் மீண்டும் முரளிராஜா நீர்தேக்க தொட்டியின் மேலே ஏறிச் சென்று 09.27 மணிக்கு தனது செல்போனில் எடுத்த போட்டோவிலும் ஒரு துண்டு மலம் புதிதாக கிடக்கிறது. முரளிராஜா நீர்தேக்க தொட்டியின் மேலே ஏறிச் சென்று 09.27 IST மணிக்கு தனது செல்போனில் புகைப்படம்
எடுத்ததால் முரளிராஜா, முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் எடுக்கப்பட்ட போட்டோக்களில் தண்ணீரில் எந்த விதமான மலத்துண்டுகளும் இல்லை. இவர்கள் இறங்கி வந்த பின்புதான் தண்ணீரில் மலத்துண்டு இருந்தது. சம்பவத்தன்று காலை 05.00 மணி முதல் மோட்டார் மூலம் நீர்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு காலை 07.30 மணிக்குதான் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வல்லுநர்களின் கூற்றுப்படியும் பரிட்சாத்த செய்முறை நடத்தியதன்படியும் 26.டிசம்பர் 2022-ஆம் தேதி காலை 05.00 மணிக்கு முன்பு தண்ணீரில் மலம் போட்டிருந்தால் தண்ணீர் விழும் வேகத்தில் தொட்டிக்குள் இருந்த மலம் சிதறிக் கரைந்திருக்கும். அவ்வாறு இல்லாமல் ஒரு மலத்துண்டு மட்டும் மிதந்து கொண்டிருந்தால் தண்ணீர் ஏற்றுவது நிறுத்திய பின்பு தான் போடப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. மேலும் சுதர்சனின் செல்போனில் இருந்து தடய அறிவியல் ஆய்வகத்தால் எடுக்கப்பட்ட ஆடியோ பதிவில் அவரது அம்மா சுலோச்சனா மற்றும் அத்தை வள்ளிகண்ணு ஆகியோரிடம் அவர் பேசிய ஆடியோ குரல் பதிவுகள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து அவர்களுடைய குரல் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை பெற்றதில் உள்ள குரல்கள் மேற்கண்ட நபர்களுடையதுதான் என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, தடய அறிவியல் ஆய்வறிக்கையிலிருந்து மற்ற அறிக்கைகள் மற்றும் வேங்கைவயலை சேர்ந்த முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் குற்றச் செயலில் ஈடுபட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
வேங்கைவயலில் குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 397 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறை தெரிவித்துள்ளது. 196 மொபைல் எண்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை உள்ளடக்கிய 87 டவர்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும், கிராம மக்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள் எடுத்து டி.என்.ஏ பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது. வேங்கைவயல் நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக, முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முத்தையா, வேங்கைவயல் காவலர் முரளிராஜின் தகப்பனார் ஜீவானந்தத்தை அவமானப்படுத்தியது
விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இதற்குப் பழி வாங்குவதற்காக, முரளிராஜாவால் இந்தச் செயல் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது புலனாய்வு மூலம் புலப்படுவதாக தெரிவித்துள்ளது.
முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, முத்துக்கிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் தடயவியல் பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும், அதில் அழிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, சாட்சியங்களின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் ஆகியற்றை பகுப்பாய்வு செய்தபின்னர் விசாரணை முடிக்கப்பட்டு, முரளிராஜா, சுதர்ஷன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மீது புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக, சிபிசிஐடி காவல்துறை தனது விளக்கத்தில் கூறியுள்ளது.750 நாட்களாக குற்றவாளிகள் யாரென்பது தெரியாமலிருந்த இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறை விசாரணையை முடிந்து புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வேங்கைவயல் வழக்கில் காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது! எனவும் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும்!
என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டது! அதில் வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவும் காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது; எனவும் மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் எனவும். வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ. டி சார்பில் இன்று பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதில் இந்த வழக்கில் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது எனவும். இது ஏற்கத்தக்கதாக இல்லை எனவும். எனவே, சி பி சி ஐ டி காவல்துறை சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். எனவும் வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவும் அதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை. தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் , சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காக இந்தக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சி பி சி ஐ டி காவல்துறை தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். மேலும், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவன்: தொல். திருமாவளவன், நிறுவனர் - தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இருந்த போதிலும் வேங்கைவயல் சம்பவம் குறித்து காவல்துறை செய்தி அறிக்கை வெளியீடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையா கிராமசபைக் கூட்டத்தின் போது, வேங்கைவயல் காவலர் முரளிராஜாவின் தகப்பனார் ஜீவானந்தத்தை அவமானப்படுத்தியது விசாரணையின் போது தெரியவந்தது
மேலும் இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது புலனாகிறது
மேலும், முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் அழிக்கப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் மீட்கப்பட்டன. இது நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியதுவேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது? 1. மலம் கலக்குவதற்கு முன்பே, மலம் கலக்க போகிறவர்கள் தண்ணீரை யாரும் அருந்தவேண்டாம் என ஒரு வாரத்திற்கு முன்பே தொடர்ந்து எச்சரித்து அதன் பிறகே நீர் தொட்டியின் மேல் ஏறி உள்ளனர். 2. அங்கே இவர்கள் பொட்டலமாக எடுத்து சென்ற மலத்தை விடியோ எடுத்து, செல்ஃபியும் எடுத்துள்ளனர்.அதன்பிறகு மலத்தை தொட்டிக்குள் கலந்துள்ளனர். 3. அதன் பிறகு இந்த பிரச்சினை விஸ்வரூபம் ஆனதும் வீடியோவை டெலீட் செய்து விட்டனர். 4. முதலில் மாற்று சமூகத்தினர் தான் இந்தச் செயலை செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது, ஆனால் மாற்று சமூகத்தினர் இந்தப் பகுதிக்குள் யாரும் வந்ததில்லை, வந்து போனதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. 5.காவல்துறைக்கு சவால் நிறைந்ததாக மாறிப் போனது வேங்கை வயல் பிரச்சினை. அதன்பிறகு நீர் தொட்டி இருக்கும் பகுதி மக்களிடம் விசாரணை தொடங்கியது. அப்போது தான் ஒரு சிறிய clue கிடைத்தது. 6. மலம் கலக்குவதர்க்கு முன்பே, மலம் கலந்ததாக சொல்லப்பட்ட செய்தி எவ்வாறு மக்களிடம் சென்றது என்று ஆராய்ந்து, அந்த விஷயத்தை சொன்னவர்கள் மேல் விசாரணை வளையம் தொடங்கியது. அந்த நபர்கள் தான் முதலில் நீர் தொட்டியில் ஏறி உள்ளனர் என்பதை உறுதி செய்த காவல் துறை, அவர்களின் கைபேசியை ஆராய தொடங்கினர். 7. அதன்பிறகு அந்த கைபேசியில் backup செய்ய அனுப்பி வைத்துள்ளனர். இந்த விசாரணை நேரத்தில் இவர்களை சுதந்திரமாக செல்லவும் அனுமதித்துள்ளனர் காவல்துறை. இவர்களை தனிப்படை மூலமும், கைபேசி call recording மூலமும் நோட்ட மிட்டு இருந்தனர். 8. அப்போதுதான் அந்த cellphone உரையாடல் நிகழ்ந்தது. அதன்பிறகும் காவல்துறை இவர்களை கிடுக்கிப்பிடி செய்யவில்லை. விடியோ ஆதாரம் கிடைத்ததும் தான், நடந்த குற்றத்தை முழுமையாக உறுதி செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 9. குற்றதுக்கான பின்னணி என்னவென்றால், மாற்று முத்தரையர் சமூக பஞ்சாயத்து தலைவரை பழி வாங்க திட்டமிட்டு குற்றத்தை நிகழ்த்தி உள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது
இந்த விசயத்தில் காவல்துறையின் விசாரணை முறை அதை உறுதி செய்த விதம் அனைத்தும் பாராட்டுக்குரியவை.
சுயசாதி உணர்வில், குடிநீரில் மலம் கலந்த சைக்கோ கிரிமினல்களுக்கு ஆதரவாக பேசுவது அன்று மிதந்த மலத்தை விட அருவருப்பானது. கிராமத்தான்கள் எளிய விளிம்பு நிலை மனிதர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்ற பொதுப்புத்தி மிகத்தவறானது. கிராமத்து எளிய மனிதர்கள் தான் அதீத வன்மம் நிரம்பிய கொடூரக்குற்றத்தை குற்ற உணர்வே இல்லாமல் செய்கிறார்கள்
நீங்கள் அரசியல் செய்ய, போராட்டம் நடத்த ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன.
கருத்துகள்