முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்குறுதியை நம்ப முடியாது டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டக் குழு அறிக்கை

மத்திய அரசின் டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்  கே.அண்ணாமலை நேற்று முன்தினம் மேலூர் நாட்டு கள்ளர் குலத் தலைவர்களான


அம்பலக்காரர்கள் மற்றும் பகுதி முக்கியஸ்தர்களை அழைத்து மத்திய சுரங்கத் துறை அமைச்சரின் வாயிலாக அனுமதி இல்லை என கூறுவார் என ஒரு உத்தரவாதம் கொடுத்தார். மதுரை மாவட்டம் அ. வல்லாளப்பட்டி கிராமத்தில், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த சகோதர சகோதரிகளை நேரில் சந்தித்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவது குறித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்ததாகவும் 

  விவசாயிகள் நலன் சார்ந்தே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  எப்போதும் முடிவு எடுப்பார். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது நிச்சயம் கைவிடப்படும். எனவே, பொதுமக்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு, பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன் என்றார். நமது பாரதப் பிரதமர் சார்பாகவும், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றவர் மேலும் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தன்னரசு மேலநாட்டின் தலைமைக்கிராமம்

அ.வல்லாளபட்டியில் நாட்டு அம்பலகாரர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை   விரைவில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் என்கிற உறுதிமொழி வழங்கினார்.

மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி  பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, சென்னை வரவிருக்கிறார். அவரை, நமது கிராமப் பெரியவர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் முடிவில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் முடிவை, நமது மத்திய அமைச்சர் அறிவிக்கவிருக்கிறார்.   பாஜக தலைவர் அண்ணாமலை.

மதுரை டங்ஸ்டன் பிரச்சனை குறித்து மக்களை சந்தித்து பேச வல்லாளப்பட்டி வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து மக்களை சந்திக்க ஏற்பாடு செய்த தெற்கு வளவு    மகாமணி அமபலகாரர்,  வடக்கு வளவு போஸ் அம்பலக்காரர் மற்றும் நடுவளவு சேதுராமன் அம்பலகாரர் ஆகியோருடன் பாஜகவின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை எடுத்த புகைப்படமும். வெளிவந்த நிலையில்

 


'மதுரை, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின், கடலில் கற்றாலைக்கும், கனிம வளம் எடுப்பதற்கும் கையெழுத்திட்டது ஏன்?' என, தேசிய பாரம்பரிய மீனவர்கள் சங்க மாநிலத்தலைவர் சின்னத்தம்பி கேள்வி எழுப்பினார்

மதுரை, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். துவக்கத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட தமிழ்நாடு அரசு, மக்களின் எதிர்ப்பு காரணமாக தற்போது செயல்படுத்த மாட்டோம், எனக்கூறி வருகிறது.


இதே முதல்வர், தமிழகக் கடலில் கனிமம் தோண்ட அனுமதி வழங்கியுள்ளார். கன்னியாகுமரி முதல் நாகப்பட்டினம் வரை, 30,000 கோடி ரூபாயில் கடலில் காற்றாலைத் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் சுரங்கம் போன்றவற்றிற்கு தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் தி.மு.க., அரசு கடலில் கனிமவளம் எடுக்க அனுமதி தந்தது ஏன்?

என தேசிய பாரம்பரிய மீனவர்கள் சங்க மாநிலத்தலைவர் சின்னத்தம்பி கேள்வி எழுப்பினார்.

அவரது அறிக்கையில்:

மதுரை, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர். துவக்கத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட தமிழ்நாடு அரசு, மக்களின் எதிர்ப்பு காரணமாக தற்போது செயல்படுத்த மாட்டோம், எனக்கூறி வருகிறது.

இதே முதல்வர், தமிழக கடலில் கனிமம் தோண்ட அனுமதி வழங்கியுள்ளார். கன்னியாகுமரி முதல் நாகப்பட்டினம் வரை, 30,000 கோடி ரூபாயில் கடலில் காற்றாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் சுரங்கம் போன்றவற்றிற்கு தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடலில் கனிம சுரங்கம் தோண்டும் போது, பல நுாறு கி.மீ., கடல் வளம் முழுதும் அழிந்து விடும். கடலியல் சூழல் பாதிக்கப்படும்.

கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து விடும். கடலை நம்பி வாழும் 60 லட்சம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கடலியல் சமன்பாடு சிதைக்கப்படும் போது, இயற்கை பேரழிவு தடுக்க முடியாமல் போகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சுரங்க அனுமதியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மீனவர்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். எனத்  தெரிவித்துள்ளா.இந்த நிலையில் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என்ற பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் வார்த்தைகளை நம்ப முடியாது. மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகே போராட்டம் நிறுத்தப்படுமென டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டோமென தமிழ்நாடு அரசு தரப்பில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரும், டங்ஸ்டன் சுரங்கம் வராது என பாஜக தலைவர் கே.அண்ணாமலையும் போராட்டக்களத்துக்கு நேரில் வந்து உறுதியளித்ததையடுத்து டங்ஸ்டன் சுரங்க ஏல எதிர்ப்புப் போராட்டத்தை கைவிட பல்வேறு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.



‘அண்ணாமலையை நம்ப முடியாது; மத்திய அரசு அறிவித்தால் மட்டுமே போராட்டம் வாபஸ் என  டங்ஸ்டன் சுரங்க ஏல எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பு சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், “டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக பாஜகவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது தான். அதேநேரத்தில் மத்திய கனிம வளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்படுவதாக முறைப்படி அறிவிப்பு செய்து அதை அரசிதழில் வெளியிட வேண்டும்.



அதுவரை டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை நம்ப முடியாது. அ.வல்லாளப்பட்டி கூட்டத்துக்கு கே.அண்ணாமலை வந்திருந்தபோது அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவை தவிர்த்து பிற மக்கள் அனைவரும் கே.அண்ணாமலை லண்டனிலிருந்து திரும்பியதும், டங்ஸ்டன் திட்டத்தை நல்ல திட்டம் என்று வரவேற்று பேசியுள்ளார். இதனால் மத்திய கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் மூலம் முறையான அறிவிப்பு வந்தால் ஏற்கலாம். அதைவிட்டு ,வெற்று வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.


எனவே, பாஜகவின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெறுமனே வாய்வார்த்தையில் மக்கள் போராட்டத்தை திசை திருப்பாமல், மத்தியில் ஆட்சியிலுள்ள தனது கட்சியின் பிரதமரான நரேந்திர மோடியை வலியுறுத்தி சட்ட அங்கீகாரம் தரும் எழுத்துபூர்வமான டங்ஸ்டன் ஏலத் திட்ட ரத்து அறிவிப்பு வெளிவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

தமிழ்நாடு ஆட்சியாளர்களும் தாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை திட்டம் வராது என்று வாய்வழி உறுமொழி அளிப்பதோடு நின்றுவிடாமல், நிரந்தரமாக அனைத்து வகையான அழிவுத் திட்டங்களிலிருந்தும் மேலூர் பகுதியைக் காப்பாற்ற இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மற்றும் தொல்லியல் மண்டலமாக அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பது தான், போராடும் மக்களின் கோரிக்கைக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதாக அமையும். அதுவரை டங்ஸ்டன் சுரங்க ஏலத் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடிவரும் மேலூர் பகுதி மக்களுக்கு காவல்துறை எவ்விதமான இடையூறுகளும் அளிக்கக்கூடாது என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தேரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...