முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிந்து ஒப்பந்தம் ரத்து பதிலுக்கு சிம்லா ஒப்பந்தம் ரத்து போர் பதட்டம்

சிந்து ஒப்பந்தம் ரத்து பதிலுக்கு சிம்லா ஒப்பந்தம் ரத்து சிந்து நதி ஒப்பந்தம் ரத்து - பாகிஸ்தானின் மின்சார உற்பத்தி, விவசாயம், குடிநீர் அனைத்தும் பாதிக்கும். பொருளாதார பின்னடைவை அந்நாடு மேலும் சந்திக்கும். பணவீக்கம் அதிகரிக்கும். மனிதாபிமானமற்ற மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் இருளில் மூழ்கும். வறுமையில் வாடும். 


இது ஒரு முடிவின் துவக்கம் .






ஜம்மு காஷ்மீர் சுற்றுலாப் பயணிகள் மீது ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பஹல்காம் பகுதியில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்ட நிலையில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


இந்த தாக்குதலில் ஆண்கள் மட்டும் குறிவைக்கப்பட்டதாகவும், இந்துவா? முஸ்லிமா? என்று மதத்தைக் கேட்டு தாக்குதல் நடத்தியதாகவும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் வாயிலாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியாகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவில் மட்டுமல்லாது பல நாட்டுத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல் வந்தது.  


இதற்கிடையே, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டதில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையை மூடுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், இந்தியாவிற்கு வர பாகிஸ்தான் நாட்டினருக்கு அனுமதி இல்லை எனவும், பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எஸ்விஇஎஸ்(SVES) விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும்,




பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே மாதம் 1 ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையில் 1960 ஆம் ஆண்டில் கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பது என முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்தியாவின் அதிரடி முடிவுகளால் 








பாகிஸ்தானுக்குச் செல்லக் கூடிய சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் எனும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாக்லிகார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்கு நதிநீர் சென்று வந்தது. இந்த சூழ்நிலையில், ராம்பன் அணையின் மதுகுகளை மூடி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை நிறுத்தி வைப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் வாழும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக அமைந்திருக்கும் சிந்து நதிநீர் தற்போது இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. சிந்து நதிநீரை நிறுத்தி வைத்த இந்தியாவின் இந்த முடிவு சட்டவிரோத நடவடிக்கை என்றும் இதன் மூலம் இந்தியா நீர் போர் நடத்துகிறது என்றும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. 



இந்த நிலையில், இந்தியா உடனனான சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி வைத்த பின்பு, பாகிஸ்தான் வான்வெளியை இந்தியா பயன்படுத்தத் தடை  உள்ளிட்ட பல அறிவிப்புகளை தேசியப் பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு பிறகு அறிவித்து வரும் பாகிஸ்தான், தற்போது இந்தியா உடனான சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 




1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போருக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மீட்டெடுப்பதற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கும் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் பாகிஸ்தான் அதிபர் சுல்ஃபிகார் அலி பூட்டோ ஆகியோரால் 1972 ஆம் ஆண்டில் ‘சிம்லா ஒப்பந்தம்’ போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரின் முடிவை கணக்கிட்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருக்கக் கூடிய சுமார் 13,000 கி.மீ அளவிலான பரப்பளவை இந்தியாவிற்கு ஒதுக்கப்படும் என்றும், இரு நாடுகளின் எல்லைகளை தீர்மானிப்பதற்கு அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்க வேண்டும் என்றும், உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடு தலையிடக் கூடாது என்றும் குறிப்பிட்ட. இந்த ஒப்பந்தத்தை  தற்போது பாகிஸ்தான் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.




இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலம் இருநாடுகளின் எல்லை தொடர்பான எந்தவித பேச்சுவார்த்தைக்கும் உடன்படிய மாட்டோம் என பாகிஸ்தான் மறைமுகமாக செய்தி சொல்வதாகக் தெரிகிறது. பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவின் எடுத்த அதிரடி நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் அறிவிப்பால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் நிலவுகிறது.  

பந்திப்போராவில் OGW எனப்படும் தீவிரவாதிகளுக்கு களத்தில் இருந்து உதவும் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின் போது முகமது ரபீக் கண்டே மற்றும் முக்தார் அகமது தார் என அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின் போது, ​​சட்டவிரோத ஆயுத வெடிமருந்துகள் அதாவது சீன கைக்குண்டு 02, 7.62 MM மெக்சைன் 01 இந்திய ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவு கருத்துத் தெரிவித்ததற்காக நாட்டின் பாதுகாப்பக் கருதி ' அஸ்ஸாமின் AIUDF சார்ந்த MLA கைது செய்யப்பட்டார்.

திங் தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அமினுல் இஸ்லாம், நாகான் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். (பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானையும் அதன் உடந்தையையும் ஆதரித்ததாகக் கூறி, அசாமின் எதிர்க்கட்சியான AIUDF எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் வியாழக்கிழமை தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...