முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டெல்லி நடைப்பயிற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற திருடன்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு டெல்லி சென்றுள்ள மயிலாடுதுறை


நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சுதா, நாடாளுமன்ற உறுப்பினர் விடுதி பகுதியில் உள்ள சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா அணிந்திருந்த 4.5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றிருக்கிறார். இது குறித்து               



இந்திய உள் துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் புகார் எழுப்புகிறார். உண்மையில் அவர் டெல்லி காவல்துறை சார்ந்த காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை  எடுக்கச் சொல்வது தானே நியாயம் மற்றும் சரியான வழி. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடமே இது மாதிரி நடந்திருப்பதற்காக  டெல்லி காவல்துறை விரைவு நடவடிக்கை மேற்கொள்ளச் செய்ய வேண்டியதை விட்டு விட்டு விளம்பரத்திற்காக ஏதோ செய்து கொண்டிருக்கிறார் என பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் 


தன்னுடைய சொந்த விளம்பரத்திற்காக முன்பு இலங்கை அதிபர் அனுராவுக்கு கடிதம் எழுதுவது நாடாளுமன்றத்தில் நகையை பிடிங்கிச் சென்று விட்டார்கள் என்று கூறுவதெல்லாம் முறைப்படி எங்கெங்கே என்ன விதமான புகார்களை அளிக்க வேண்டுமோ  அப்படி அளித்துத் தான் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர தன் மனம் போன போக்கில் எதையாவது சொல்லி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது  இவருக்கு வாடிக்கையாகிவிட்டது என பலரும் பேசும் நிலையில். ஒரு பொது மனிதருக்கு நடப்பது மாதிரித் தான் இதை அணுக வேண்டும். இதையெல்லாம் வைத்துக்கொண்டு தனக்கான விளம்பரங்களையும் கவன ஈர்ப்புகளையும் தேடக்கூடாது.                 இந்தச் சம்பவத்தில் மயிலாடுதுறை  சுதாவின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. உள்துறைக்கு தகவல் தந்த பின்னர், டெல்லி சாணக்யபுரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, செயின் பறிப்பில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், சாட்சிகளிடம் விசாரணை நடத்தியும் குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல், டெல்லியின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியில், உயர் பதவிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கே இதுபோன்ற தாக்குதல் நடப்பது, சாதாரண மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம், டெல்லியின் முக்கியப் பகுதிகளில் கூட குற்றச் செயல்கள் தங்குதடையின்றி நடக்கின்றன என்பதற்கான ஒரு சாட்சியாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலர் குற்றச்சாட்டியுள்ளனர்.நாடாமன்ற உறுப்பினர் சுதாவிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்க நகை பறிப்பு சம்பவம் நிகழ்வு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுதா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், “நானும் என்னோடு சக தோழியான நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சல்மா என்று ராஜாத்தியும் நடைப்பயிற்சிக்கு சென்றோம். பாதுகாப்பான வழியான தூதரக வழித்தடத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் அந்த பிளாட்பார்மை ஒட்டித் தான் நடந்தோம். எங்களுக்கு எதிராக ஒரு நபர் ஸ்கூட்டியில் ஹெல்மெட் அணிந்து கொண்டு எதிரே வந்தார். அவருக்கு வழிவிட்டு போவோம் என்று நான் கொஞ்சம் விலகினேன். விலகிய பொழுது ரொம்ப அருகில் வந்தவர் என் தங்கச் சங்கிலியை பிடுங்கினார். நான் அதை உணர்வதற்குள் என் துணியையும் கிழித்துவிட்டார். இதில் எனக்கு சிறிய காயம் ஏற்பட்டது.

நான் கத்தினேன். ஆனால் அவர் எதையோ சாதித்தது மாதிரி மெதுவாகவே செல்கிறார். சாலையில் கொஞ்ச நபர்கள் இருந்தார்கள். நானும் கத்தினேன், என்னுடனிருந்த சக நாடாளுமன்ற உறுப்பினரும் உதவினார் கத்தினார். ஆனால், அங்கிருந்த யாருமே உதவி செய்ய முன்வரவில்லை. எனக்கும்  ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு, தமிழ்நாடு விருந்தினர் மாளிகைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தோம். இரண்டு நிமிடத்திலேயே, ரோந்துப் பணியிலிருந்த டெல்லி காவற்துறையினர் வாகனத்தைப் பார்த்தேன். உடனடியாக நானும் சக நாடாளுமன்ற உறுப்பினரும் விரைந்துச் சென்று காவல் அலுவலரிடம் நடந்த விஷயத்தைச் சொன்னேன். என் துணி கிழந்திருந்ததையும் டெல்லி காவற்துறையின் அலுவலர் பார்த்தார். ஆனால், அவர் மிகவும் எளிமையாக உங்க பெயர் கொடுங்கள் நம்பர் கொடுங்கள், காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்கிறார். இதுதான் அவருடைய பேச்சாக இருந்தது. உடனடியாக வாகனத்தில் இருந்த வாக்கி டாக்கியை எடுத்து எச்சரிக்கை கொடுத்திருந்தால் கூட மற்ற டிராபிக் ஏரியாவிலோ அல்லது வேறு இடத்திலேயோ அவரைக் கட்டாயமாகப் பிடித்திருக்கலாம். செயினை பறிகொடுத்ததை விட இந்த சம்பவங்கள் தான் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. டெல்லி காவல்துறை அலட்சியமாக இருந்தார்கள்” என வேதனைக் குரலில் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...