இந்திய துணை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய ஜெகதீப் தன்கர் திடீரென மாயமாகி இருக்கிறார்.
அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. ரஷ்யா மற்றும் சீனா போன்ற நிலை இந்தியாவிலும் ஏற்பட்டிருப்பதாக சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்புகொள்ள முயன்றபோதும் ஜெகதீப் தன்கருடன் பேச முடியவில்லை
ஜூலை மாதம் 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக துணைக் குடியரசுத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் குறைவு காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சிவசேனா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் . சஞ்சய் ராவத் எழுதியுள்ள கடிதத்தில், "குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகிய ஜெகதீப் தன்கர் தற்போது எங்கிருக்கிறார்?; ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது?; மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் சிலர் தொடர்புகொள்ள முயன்றபோதும் தன்கருடன் பேச முடியவில்லை" என்று சஞ்சய் ராவத் அந்தக் கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

.jpg)



கருத்துகள்