பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பிறகு, அதன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அமலாக்கத்துறை இயக்குனரகம் (ED) பயங்கரவாத நிதியுதவி தொடர்பாக பல சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளது. இருப்பினும், சில சொத்துக்கள் மீதான பறிமுதல் உத்தரவை சிறப்பு நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ளன. தேசியப் புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததன் விளைவாக இது தற்போது நிகழ்ந்தது என்று முக்கிய செய்தி ஏஜன்ஸி கூறியுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமாக சொத்துக்கள்
பறிமுதல்: அமலாக்க இயக்குனரகம் (ED) பயங்கரவாத நிதியுதவி தொடர்பாக PFI-ன் சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளது. இந்த நடவடிக்கைகள் சட்டவிரோத நிதியுதவி, பணமோசடி மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளனது கேரளா மாநிலத்தில் கொச்சியிலுள்ள சிறப்பு நீதிமன்றம், PFI-உடன் தொடர்புடைய 10 சொத்துக்கள் மீதான பறிமுதல் உத்தரவை ரத்து செய்தது. இது என்ஐஏ (NIA) நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததன் விளைவாக ஏற்பட்டது.
சொத்துகளின் மதிப்பு: ED பறிமுதல் செய்த சொத்துக்களின் மதிப்பு பல கோடி ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
PFI அமைப்பு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) கீழ் ஐந்து ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டது.
PFI-ன் நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த வழக்குகள் தொடர்பான விசாரணையில், PFI-ன் உலகளாவிய வலையமைப்பு, நிதியுதவி முறைகள் மற்றும் வன்முறை சம்பவங்களில் அதன் பங்கு குறித்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமாக மூணாறில் உள்ள வில்லாக்கள், நிலங்களை அமலாக்கத்துறை அதிரடியாகப் பறிமுதல் செய்தது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2022 செப்டம்பர் 22ம் தேதி 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு செயல்பட இந்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் வௌிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய பிஎப்ஐ தலைவர்கள், உறுப்பினர்கள் கேரளா மாநிலம் மூணாறில் தங்கியுள்ளனர். அவர்கள் பயங்கரவாத செயல்களுக்கு நிதி சேர்க்க மூணாறு வில்லா விஸ்டா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் குடியிருப்புத் திட்டத்தை உருவாக்கி செயல்படுவதாகவும் தகவல் வௌியானதையடுத்து பணமோசடி தடுப்பு விசாரணையின் ஒருபகுதியாக மூணாறில் உள்ள 4 வில்லாக்கள், 6.75 ஏக்கர் நிலங்களை அமலாக்கத்துறை நேற்று அதிரடியாகப் பறிமுதல் செய்தது. கைப்பற்றப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூபாய்.2.53 கோடி என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.6 நவம்பர் 2025 அன்று PMLA, 2002 இன் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) ன் ஆதாயச் சொந்தமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ரூபாய்.67.03 கோடி மதிப்புள்ள 08 அசையாச் சொத்துக்களை ED பறிமுதல் செய்துள்ளது. குறிப்பிடத்தக்கதுதடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் (சிமி) முன்னாள் உறுப்பினர்களுடன் இணைந்து ஆயுதப் பயிற்சிக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ), ரகசிய அமைப்பை உருவாக்கத் தயாராகி வருவதாக NIA காவல்துறை FIR மூலம் கூறியுள்ளனர்.ஃ கேரளாவில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் கையை வெட்டியது, நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆயுதப் பயிற்சி, தமிழ்நாடு தஞ்சாவூரில் ராமலிங்கம் படுகொலை உள்ளிட்ட பிஎஃப்ஐக்கு எதிரான பல்வேறு வன்முறை வழக்குகள், என்ஐஏ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் விசாரிக்கப்படுகின்றன.
இவர்களில் பலர் குற்றவாளிகள் எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பிஎஃப்ஐ உடன் தொடர்புள்ளது. பிஎஃப்ஐ தொடர்பான பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.கேரளாவில் இயங்கி வந்த தேசிய வளர்ச்சி முன்னணி(என்.டி.எஃப்), தமிழ்நாட்டின் மனித நீதிப் பாசறை, கர்நாடகாவைச் சேர்ந்த ஃபோரம் ஃபார் டிக்னிட்டி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து 2007-ஆம் ஆண்டுபாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு குற்றங்களில் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு பேராசிரியரை தலையைத் துண்டித்துப் படுகொலை செய்தது, தமிழ்நாட்டில் ராமலிங்கம் படுகொலை உள்ளிட்டவை இந்த அமைப்பின் மீது கூறப்பட்ட முக்கியக் குற்றச்சாட்டுகள். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு பணம் வரும் வழிகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.




கருத்துகள்