முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலஞ்சம் வாங்கிய காவல் பெண் ஆய்வாளர் மற்றும் பாலியல் தொல்லை துணை ஆணையர் இணை ஆணையரிடம் சிக்கினர்

இலஞ்சம் வாங்கிய காவல் பெண் ஆய்வாளர் மற்றும் பாலியல் தொல்லை துணை ஆணையர் இணை ஆணையரிடம் சிக்கினர்

கோயம்பேடு மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக தாஹிரா பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், காதலனால் ஏமாற்றப்பட்டு, கர்ப்பமடைந்த பெண் ஒருவர் இவரிடம் புகார் அளிக்க வந்ததாகவும், புகாரில் விசாரணை மேற்கொள்வதாக கூறி அவரது கையில் மருத்துவ செலவுக்காக இருந்த ரூ.1,500 ஆய்வாளர் தாஹிரா வாங்கிக் கொண்டதாக தெரிகிறது.


இந்நிலையில், புகார் அளிக்க வந்த பெண் மேற்கு மண்டல இணை ஆணையர் திஷா மிட்டலை சந்தித்து, தனது புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கையில் இருந்த பணத்தை ஆய்வாளர் தாஹிரா நடவடிக்கை எடுப்பதாக வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். உடனடியாக இணை ஆணையர் உண்மையை கண்டறிய, பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்து ஆய்வாளருக்கு செல்போனில் அழைத்துப் பேச வைத்துள்ளார்.


“தனது குடும்பச் செலவுக்கு இருந்த பணத்தை நீங்கள் வாங்கிக் கொண்டீர்கள்; அதை கொடுத்து விடுங்கள் மேடம்” என்று கேட்டதற்கு, “நீ என்ன கொடுத்த பணத்தை கேட்கிறாய்” என ஆய்வாளர் அதற்கு பதில் அளித்ததாகவும், மறுமுனையில் இருந்த இணை ஆணையர் திஷா மிட்டல், உண்மையை தெரிந்து கொண்டு உடனடியாக ஆய்வாளர் தாஹிராவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒருபுறம்புகார் அளிக்க வந்த பெண் இன்ஜினியரை உல்லாசத்திற்கு அழைப்பு;

விருகம்பாக்கம் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

பல லட்சத்திற்கு ஆன்லைனில் பொருட்கள் வாங்கி ஏமாற்றிய பெண் சாரபு ஆய்வாளரும் சிக்கினார்

திருமணம் செய்வதாக உல்லாசமாக இருந்து ஏமாற்றிய காதலன் மீது புகார் அளிக்க வந்த இளம் பெண் (சினிமா படங்களில் துணை நடிகையாகஉள்ளார)  பொறியாளருக்கு வாட்ஸ் ஆப் மூலம் உல்லாசத்திற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக விருகம்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் சார்பு ஆய்வாளரை  காவல்துறை ஆணையர் அருண்  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். 

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் X (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மென் பொறியாளர், கனடா நாட்டில் பொறியாளராக பணியாற்றும் அலெக்ஸ் எனற நபரைக் காதலித்த நிலையில் அந்தப் பொறியாளர் சென்னை வந்தபோது, X உடன் நெருங்கிப் பழகியுள்ளார். இதனால் இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக வாழ்ந்துள்ளனர். இதற்கிடையே காதலனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும் சம்பவம் X க்கு தெரியவந்ததனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் காதலர்கள் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என கனடா இன்ஜினியர் அந்த X ஐ மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த X, சம்பவம் குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் மீது உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் விசாரித்த போது புகார் அளித்த பெண் பொறியாளருக்கு நியாயம் பெற்றுத் தருவதாகக் கூறி அவரிடம் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் வீட்டிற்கு தேவையான மளிகை மற்றும் ஆடம்பரப் பொருட்கள் என பல லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கியுள்ளார். அதேபோல் புகார் அளித்த பெண்ணிடமிருந்து காப்பாற்றுவதாக காதலனிடமும் கைது செய்யாமல் இருப்பதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சப் பணமாக வாங்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் இளம் பெண் புகாரின் மீது கைது செய்யாமல் இருக்க காதலனுக்கு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் பல வகையில் உதவி செய்துள்ளார். இதன் மூலம் முன்ஜாமீன் பெற்ற காதலன், சென்னையிலிருந்து கனடா நாட்டிற்கு தப்பி சென்று விட்டார். 

இந்த தகவல் பாதிக்கப்பட்ட பெண் X க்குத் தெரியவந்தது. உடனே விசாரணை அலுவலரான உதவி ஆய்வாளர் பெனசீர் பேகத்திடம் நியாயம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முறையாகப் பதில் அளிக்கவில்லை. உடனே பாதிக்கப்பட்ட X இணை ஆணையர் தீஷா மிட்டலை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் மற்றும் ஆன்லைன் மூலம் பல லட்சத்திற்கு பொருட்கள் வாங்கியது தொடர்பாக ஆவணங்களுடன் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது விசாரணை நடத்த இணை ஆணையர் தீஷா மிட்டல் விருகம்பாக்கம் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபுவுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி பாதிக்கப்பட்ட பெண் பொறியாளர் X, விருகம்பாக்கம் உதவி ஆணையர் அலுவலகத்தில் பாலகிருஷ்ண பிரபுவை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அப்போது உதவி  ஆணையர், பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, பெண் பொறியாளர் X ன் வாட்ஸ் அப் எண்ணிற்கு அடிக்கடி நள்ளிரவில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு பெண் பொறியாளர் x  பதில் அளித்துள்ளார். அதன் பிறகு அடிக்கடி தனது அலுவலகத்திற்கு விசாரணை என்ற பெயரில் பெண் பொறியாளரை அழைத்து தனது அலுவலகத்தில் உதவி  ஆணையர் பாலகிருஷ்ண பிரபு தன் வசப்படுத்தும் வகையில், X தோளின் மீது கையை வைத்து தொட்டுத் தொட்டுப் பேசியுள்ளார். அதேநேரம் புகார் அளித்த உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே உதவி ஆணையர் ஒரு கட்டத்தில் X பெண் பொறியாளருக்கு வாட்ஸ் அப்புக்கு ‘ நீ அழகாக இருக்கிறாய்.... உன்னை பார்த்ததில் இருந்தே என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.... நான் சொல்வதை நீ செய்தால்... நீ சொல்வதை நான் செய்கிறேன்.....’ என்று மிகவும் ஆபாசமாகவும், பாலுணர்வை தூண்டும் வகையில் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதை பார்த்த பெண் பொறியாளர் X அதிர்ச்சியடைந்தார். 

உடனே இணை ஆணையர் தீஷா மிட்டலை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து, திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். பெண் உதவி ஆய்வாளர் வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பல லட்சம் பணம் பெற்று ஏமாற்றினார். அவர் மீது புகார் அளிக்க விருகம்பாக்கம் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபுவிடம் புகார் அளித்ததால், அவர் தன்னை படுக்கைக்கு அழைத்து மெசேஜ் போடுகிறார்.

நான் என்ன தான் செய்ய ேவண்டும் மேடம் என்று அழுது புலம்பியுள்ளார். அதைதொடர்ந்து இணை ஆணையர் தீஷா மிட்டல் புகார் அளித்த இளம் பெண் பொறியாளர் X அளித்த வாட்ஸ் அப் மெசேஜ் மற்றும் புகாரைத் தொடர்ந்து விருகம்பாக்கம் உதவி  ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் ஆகியோர் மீதான புகார் குறித்து காவல்துறை ஆணையர் அருண் ஐ பி எஸ் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதைத் தொடர்ந்து, ஆணையர் அருண், இருவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி உயர் காவல் துறை அலுவலர்கள் உதவி ஆணையர் மற்றும் உதவி பெண் ஆய்வாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், புகார் அளிக்க வந்த இளம் பெண் X க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் புகார் அளிக்க வந்த இளம் பெண் X டம் வீட்டிற்கு தேவையான பொருட்களை பல லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் பெற்ற பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் ஆகியோரை  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல்துறை ஆணையர் அருண் உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிக்கியுள்ள பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் அண்ணாநகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, சாலையோர வியாபாரிகள் மற்றும் புகார் அளிக்க வந்தவர்களிடம் பணம் பெற்றதாக 5 க்கும் மேற்பட்ட புகார்கள் நிலுவையிலிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...