ரூபாய் .5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திடக்கோடடை வி.ஏ.ஓ., கைது
தேவகோட்டை தாலுகா வாரிசு சான்றிதழுக்காக ரூபாய் .5000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 46). இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திடக்கோட்டை குரூப் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். திடக்கோட்டையைச் சேர்ந்த ராஜா (வயது 42), இவரது தந்தை இறந்துவிட்டதால் தேவகோட்டை தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலம் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியில் உரிய சான்றுகளுடன் சமர்ப்பித்தார்.
தனக்கு ரூபாய் .5000 கொடுத்தால் தான் வாரிசு சான்றிதழ் பெற வட்டாச்சியருக்குப் பரிந்துரை செய்வதாக கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகாரளித்தார். அவர்கள் ஆலோசனைப்படி அவரிடம் அவர் கொண்டு வந்த பணத்தை அரசு சாட்சி முன்னிலையில் பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய ரூபாயை திரும்பக் கொடுத்து அரசு சாட்சி உடன் அனுப்பினர்.அன்று மதியம் 12:00 மணிக்கு தேவகோட்டை நீதிமன்றம் எதிரில் உள்ள பேக்கரியில் இருப்பதாகவும், அங்கு வந்து பணத்தைத் தருமாறும் கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் கூறினார். அங்கு சென்ற ராஜா பணத்தை சுதாகரிடம் கொடுத்தார். ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் துணைக் கண்காணிப்பாளர் , ஜான் பிரிட்டோ தலைமையிலான துறையினர் சுதாகரை லடஞ்சம் பெற்ற கையுடன் கைது செய்து பணத்தை கைப்பற்றினர்.
சுதாகர் அவரது தந்தை இறப்பிற்காக கருணை அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டவர். ஆனால் கருணையை மறந்து லஞ்சம் பெற்றார் இந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். குறிப்பாக சிவகங்கை மாவடடத்தில் தேவகோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட வருவாய் துறை அலுவலகங்களில் கோப்புகளை நீண்ட நாட்கள் தேக்கி வைத்து பணம் வாங்கிய கோப்புகளை மட்டுமே வேலைக்கு எடுத்து பணி செய்யும் ஊழல் நடப்பதையும் ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை சுதாகர் போல மனச்சாட்சி இல்லாத சிலர் தங்களை மஹாராஜா என நினைத்து வாழ்கிறார்கள், சில்லரை உள்ளவர்களுக்கு சாமரம் வீசிவிட்டு சாமானியனிடம் சமர் புரிகிறார்கள்.... அரசு பணியாளர்கள் பப்ளிக் சர்வர் என்பதை மறக்கும நிலை தான் ஜனநாயக ஆபத்து
.jpg)




கருத்துகள்