சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, கேரளம் உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீவஸ்தவா 2026 மார்ச் மாதம் 5 ஆம் தேதி பணி ஓய்வு பெறுவதால் உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, 2016 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2018 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரளம் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டவரை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி 1966 ஆம் ஆண்டு ராய்பூரில் பிறந்தவர். சிவில், கிரிமினல் மற்றும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர். 1992 ஆம் ஆண்டு ஜபல்பூரில் உள்ள மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒய்.எஸ். தர்மாதிகாரிக்கு ஜூனியராக பணியாற்றினார். 2000 முதல் 2015 வரை அரசின் நிலை ஆலோசகராக, வருமான வரித் துறை, இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய கலால் வரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், பிஎஸ்என்எல், போபால் எரிவாயு உள்ளிட்ட வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார். ஜபல்பூரில் உள்ள மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 24 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் தர்மாதிகாரி. இந்நிலையில், அவரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.
அதேபோல பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியான நீதிபதி லிசா கில்லை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றதத் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.

கருத்துகள்