லோக் பவன், தமிழ்நாடு
ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்திக் குறிப்பு :-
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் சி ஜோசப் விஜய் அவர்கள் பரிந்துரை ஏற்று அமைச்சர்கள் குழுவிற்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 10.05.2026 அன்று அவருடன் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர், அமைச்சர்கள் குழுவிற்கான இலாகாக்கள் மற்றும் பொறுப்புகள் ஒதுக்கீடுகள் ஆகியவற்றைப் பரிந்துரைத்துள்ளார் .தமிழ்நாடு அமைச்சரவை முழுத் துறை விவரங்கள்
சி. ஜோசப் விஜய் - முதல்வர் தமிழ்நாடு அமைச்சரவை - பதவி ஏற்ற அமைச்சர்களின் துறை விவரங்கள்:
முதல்வர் சி. ஜோசப் விஜய் - பொது நிர்வாகம், உள்துறை, சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, மகளிர் நலம், இளைஞர் நலன், குழந்தைகள் நலம், முதியோர் நலம், மாற்றுத் திறனாளிகள் நலம், நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வழங்கல்.
என்.ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
துறைகள்: ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துகள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள்.
ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர்
துறைகள்: பொதுப்பணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாடு.
டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் - சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
துறைகள்: சுகாதாரம், மருத்துவக் கல்வி, குடும்ப நலம்.
கே.ஏ. செங்கோட்டையன் - நிதி அமைச்சர்
துறைகள்: நிதி, ஓய்வூதியம், ஓய்வூதியத் திட்டங்கள்.
பி. வெங்கட்ராமன் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர்
துறைகள்: உணவு, சிவில் சப்ளை, நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு.
ஆர். நிர்மல்குமார் - எரிசக்தி, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்
துறைகள்: மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், ஊழல் எதிர்ப்பு, சட்டமன்றம், தேர்தல்கள், பாஸ்போர்ட்.
ராஜ்மோகன் - பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
துறைகள்: பள்ளிக் கல்வி, தொல்லியல், அலுவல் மொழியாக தமிழ், தமிழ் கலாச்சாரம், தகவல் மற்றும் விளம்பரம், திரைப்பட தொழில்நுட்பம், அச்சிடுதல்.
டாக்டர் டி.கே. பிரபு - இயற்கை வளத்துறை அமைச்சர்
துறை: கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.
செல்வி எஸ். கீர்த்தனா - தொழில்துறை அமைச்சர்
துறைகள்: தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு. ஆகியவை இன்று வெளியிடப்பட்டது, அமைச்சரவை விரிவாக்கம் குறித்த தகவல் இல்லை என்றாலும், தவெகவில் மேலும் ஐந்து அமைச்சர்களும், அதிமுக அணிக்கு ஐந்து அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர்களம் பத்து நாட்களில் நிலைமை சீரடைந்த பின்னர் நடக்க வாய்ப்பு உள்ளது.அமைச்சர் நியமனம் இல்லாத துறைகளாக ஹிந்து சமய அறநிலையத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண்மைத் துறை, பால்வளம், மீன்வளம் மற்றும், கால்நடைத்துறை, கைத்தறி மற்றும் காதி, கூட்டுறவுத்துறை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை, போக்குவரத்துத்துறை, வீட்டுவசதித் துறை, உயர் கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்த்துறை, ஆகியவற்றுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.



















கருத்துகள்