கோயமுத்தூர் சூலூர் குளக்கரையில் பத்து வயது சிறுமியின் சடலம்: உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்
தவெகவுக்கு வாக்களித்த தாயின் குமுறல் தொடர் தேர்தல் பிரச்சாரத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பது அபாயத்தில் உள்ளது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என செல்லும் தொகுதி யெல்லாம் மக்களிடம் பரப்புரை செய்து தான் தனித் தன்மை கொண்டு இன்று தவெக ஆட்சி அமைத்து அதன் பின் கூட்டணி ஆட்சியாக மாறிப்போனது, இதனால் வாக்களிந்த மக்கள் 40 சதவீதம் உள்ளவர்கள் மத்தியில் முதல்வர் சி.ஜோசப் விஜய் மீதான நம்பிக்கை குறைந்தது,
தவெக கூட்டணி ஆட்சி பதவியேற்று 2 வாரம் தான் ஆகிறது,
குற்றவாளி பக்கத்து ஊரோ, பக்கத்து தெருவோ, பக்கத்து வீடோ, இல்லை உறவினரோ அதைக் காரணம் காட்டுவது என்பது ஏற்புடையiதுமல்ல.
குற்றம் நடந்துவிட்டது, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விரைந்து தண்டனை வழங்குவது மட்டுமே தீர்வு என்பது. அதை நீதிமன்றமே செய்யும்
எப்போதுமே கோரிக்கையோ, போராட்டமோ இருந்தல்ல.. தங்கள் குழந்தைக்கு, தங்கள் வீட்டு பெண்களுக்கு நடந்தது இனி யாருக்கு நடைபெற கூடாது, அதற்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதோடு ஒரு பொறுப்பான ஆறுதல் மற்றும் நடவடிக்கை தீர்வாக நாம் வைப்பது..
எந்த அரசும் தீர்வை நோக்கி பயணிக்காமல், குற்றவாளியை கைது செய்ததை தீர்வாகவும், சாதனையாகவும் கருதுவது சமூக சீர்கேடுக்கான, குற்றத்தை அதிகமாகவே உதவும்,
இங்கு எல்லா ஆட்சியிலும் காட்டும் என்கவுண்டர் குரளிவித்தைகள் மட்டுமே தேவையல்ல..
கடுமையான சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக போர்கால அடிப்படையில் இயற்ற வேண்டும் என்பது மட்டுமேயல்ல அதை தீவிரமாக நடைமுறைபடுத்தி தண்டணையை விரைவாக பெற்றுத் தர வேண்டும் அதற்கு முழுமையான தகுதி வாய்ந்த அரசு வழக்கறிஞர்கள் முழுமையாக நியமிக்க வேண்டும் என்பதே தீர்வாக இருக்க வேண்டும்.
கடந்த திமுக ஆட்சி போல இத்தகைய கொடூரங்களை இனியும் தொடருமேயானால் எதுக்கு புதிய மக்கள் விரும்பிய ஆட்சியாளர்கள்?
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ஆறுதல் காலங்கடந்து மெத்தனப்போக்கையும்.. கடந்த கால ஆட்சியின் நீட்சியையே காட்டுகிறது..
ஊழல் நிர்வாகம் ஒழிக்க திறமை படைத்த நிர்வாகிகள் தேவை ஆனால் சில அமைச்சர்கள் சார்ந்த துறை குறித்த புரிதல் உள்ளதா என்பதே எழுவினா? உள்ளாட்சி கவுன்சிலர் வேலை என்பது வேறு அது அமைச்சர் வெலை இல்லை. இதை சில அமைச்சர்கள் உணர வேண்டும். என்பதே பலரது கருத்து.
மக்கள் கோவப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் மு. க.ஸ்டாலினும் திமுகவும் கண்டது தான்..
அதை சி. ஜோசப் விஜயும், தவெகவும் காணும் சூழலுக்கு ஆட்சியை கொண்டு செல்வதா வேண்டாமா என்பது முதல்வர் சி.ஜோசப் விஜயிடமும், ஆதவ் அரஜூனாவிடமும் தான் உள்ளது..
உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து நம்பிக்கை அளிக்க வேண்டும்.. அதுவே அரசின் முதல் கடமை.. பின் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்..
இந்த நிலையில் அடுத்தடுத்து 2 கொலைகள்
சென்னை, மணலி புதுநகர் அருகே அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்ததால் பெரும் பரபரப்பு
நேற்றிரவு மணலி புதுநகர் அருகே ரவுடி பிரசாந்த் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், இன்று விச்சூர் கிராமத்தில் இளைஞர்
விஜய் (வயது 21) ஓட ஓட வெட்டிக்கொலை, காரணம் உளவுப்பிரிவு முன்னரே மோப்பம் பிடித்து நடவடிக்கை எடுத்த கடந்த காலங்களில் இருந்தது போல இப்போது இல்லை என்பதை அணைவரும் அறிய முடியும், அதை சரி செய்ய வேண்டும்,







கருத்துகள்