தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது வைப்பு நிதி கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் வெளியீடு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான பொது வைப்பு நிதி கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் வெளியீடு
தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த குடிமைப் பணி (அகில இந்திய சேவை) அதிகாரிகள், தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோருக்கான 2025-2026-ம் ஆண்டுக்கான பொது வைப்பு நிதி மற்றும் ஆசிரியர் வைப்பு நிதி ஆகியவற்றுக்கான ஆண்டு கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் இன்று (2026 மே 25) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தின் https://cag.gov.in/ae/tamil-nadu/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சந்தாதாரர்கள்/அதிகாரிகள் தங்களது கணக்கு விவரப் பக்கத்தில் ஆண்டு கணக்கு அறிக்கையினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இணையதளத்தில் தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்துள்ள அதிகாரிகள் மற்றும் சந்தாதாரர்களுக்கு இது குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்