திமுக முன்னால் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய அமலாக்கத்துறை கடிதம்
திமுக மற்றும் அதிமுக முன்னாள் மாநில அமைச்சரும் திமுக தூத்துக்குடி மாவட்டப் பிரமுகருமன அனிதா ராதாகிருஷ்ணன் மீது பணமோசடி வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறையின் சார்பாக குற்றஞ்சாட்டியது.
தொடர்பாக, முந்தைய திமுக ஆட்சியின்போது அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. இருப்பினும், அவரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு திமுக அரசு அனுமதி வழங்கவில்லை. என்ற நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிகோரி, தற்போதைய தவெக தலைமையிலான கூட்டணி தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத் துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன அதன்படி, அமலாக்கத் துறை அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் 4 பக்கங்களுடன் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் 218-வது பிரிவை மேற்கொள் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரிவின்படி, அனுமதி கோரும் மனுவைப் பெற்ற 120 நாள்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க வேண்டும். இல்லையெனில், அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்.
சமீபத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை விசாரிக்கவும் அனுமதிகோரி தமிழ்நாடு தவெக கூட்டணி அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.. ஊழல் ஒழிக்க நடவடிக்கை துரிதமாக எடுக்கும் அரசு இந்த விவாகாரத்தில் நடக்கும் நடவடிக்கை தான் பேசு பொருளாகும்.


கருத்துகள்