தமிழ்நாடு 14 காவல் துறை
அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை, திருப்பூர், சேலத்துக்கு புதிய காவல்துறை ஆணையர்கள் நியமனம்.
உள்துறைச் செயலாளர் கே.மணிவாசன் உத்தரவு: தமிழ்நாடு மின்சார வாரிய விஜிலென்ஸ் அதிகாரியான ஆயுஷ் மணி திவாரி தற்போது தலைமையிடத்து கூடுதல் டிஜிபி-யாக நியமனம், திருப்பூர் மாநகர் காவல்துறை ஆணையரான எஸ்.ராஜேந்திரன் மதுரை மாநகர் காவல்துறை ஆணையராகவும், மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் கபில்குமார் சரத்கர் வட சென்னை கூடுதல் ஆணையராகவும், வடசென்னை பணியில் இருந்த பிரவேஷ் குமார் இப்போது கடலோரப் பாதுகாப்புக் குழும ஐஜி-யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஐஜி-யான எஸ்.ராஜேஸ்வரி திருப்பூர் மாநகர் காவல்துறை ஆணையராகவும், சேலம் மாநகர் காவல்துறை ஆணையர் அனில் குமார் கிரி தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி-யாகவும், சென்னை போக்குவரத்துக் காவல்துறை கூடுதல் ஆணையரான ஜி.கார்த்திகேயன் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி-யாகவும், அப் பணியில் இருந்த பி.சாமுண்டீஸ்வரி சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
காவல் துறை நவீன மயமாக்கல் பிரிவு ஐஜி ஏ.ஜி.பாபு டிஜிபி அலுவலகத்தில் செயல்படும் தலைமையிடத்து ஐஜியாகவும், சென்னை காவல்துறை தலைமையிடத்து ஐஜி ஜோஷி நிர்மல் குமார் சேலம் மாநகர் காவல்துறை ஆணையராகவும், பணியமைப்பு பிரிவு ஐஜி பி.சி தேன்மொழி சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை ஆணையராகவும், அப்பணியில் இருந்த ராதிகா நிர்வாகப் பிரிவு ஐஜியாகவும், அப்பணியில் இருந்த சி.மகேஸ்வரி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (செல்-1) ஐஜியாகவும், அப்பணியில் இருந்த துரைகுமார் பணியமைப்பு ஐஜியாகவும் நியமிக்கப்பட்டனர்.
தமிழ்நாடரசு திங்கள் அன்று 14 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.
சென்னை முக்கிய நியமனங்களாக
1GP கபில்குமார் சரத்கர் - கூடுதல் ஆணையர் வடக்கு
GP பி.சி. தென்மொழி - கூடுதல் ஆணையர் மத்திய குற்றப்பிரிவு
GP பி. சாமுண்டேஸ்வரி - கூடுதல் ஆணையர் போக்குவரத்து
IGP ஏ.ஜி. பாபு - கூடுதல் ஆணையர் தலைமையகம்
TNEB ஹார்டு டிஸ்க் திருட்டை அம்பலப்படுத்திய ADGP ஆயுஷ் மணி திவாரி ADGP தலைமையகமாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னையில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கூடுதல் ஆணையர்களாக நியமனம். இங்கு குறிப்பிடத்தக்கது.







கருத்துகள்