தமிழ்நாடு அரசியல் ஆட்சியை தக்கவைக்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆட்சியைக் காப்பாற்ற நடந்த குதிரை பேரப்புகாரில் தவெக அரசின் பொதுச்செயலாளரும் மாநில அமைச்சருமான புஸ்ஸி N.ஆனந்த், மற்றும் மாநில சபாநாயகர் J.C.D.பிரபாகர்
மற்றும் அஇஅதிமுகவிலிருந்து தவெவிற்கு ராஜினாமா செய்த பின் மாறிய 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது CBI விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்த நிலையில் அதன் விசாரணை துவங்க உள்ளது, இந்த நிலையில் அந்த நால்வர் சார்பில் கேவியட் மனு மட்டுமே தாக்கல் செய்து காத்திருக்கும் நிலையில் ”முதலமைச்சர் சி ஜோசப் விஜய் கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 21 பேர் மீது நடவடிக்கை எதுவும் வேண்டாம் என எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் கொடுத்துள்ளார். அதிமுகவின் 21 பேர் மீது நடவடிக்கை இல்லை. ராஜினாமா செய்த 4 பேர் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என செய்தியாளர் சந்திப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று கூறியதாவது:-
25 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி அதிமுக எடப்பாடி கே.பழனிசாமி சார்பில் முதலில் மனு அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் எடப்பாடி கே.பழனிசாமி 4 கடிதங்களை அனுப்பியுள்ளார்.
4 கடிதத்தையும் முறையாக பரிசீலித்து ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டேன் பேரவை விதியை மனதில் ஏற்றுக்கொண்டேன்.
த.வெ.க.விற்கு ஆதரவு அளித்த 21 அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை.
21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் மன்னிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் அளித்தததை தொடர்ந்து தகுதி நீக்க நடவடிக்கை இல்லை.
கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததற்காக பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா ஆகியோர் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 4 பேர் மீதான நடவடிக்கை முடிந்ததும் அறிவிப்பேன் என்றார்.


கருத்துகள்