காக்ரோச் ஜனதா பார்ட்டி இந்தியாவின் தற்போதைய அரசியல், வேலையின்மை மற்றும் ஊழல் போன்றவற்றை எதிர்த்து இளைஞர்களால் இணையத்தில்
உருவாக்கப்பட்ட ஒரு நையாண்டி அரசியல் இயக்கம். மே 2026-ல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கொன்றில் விமர்சகர்களையும் வேலையில்லாத இளைஞர்களையும் 'காக்ரோச்' அதாவது கரப்பான் பூச்சி மற்றும் 'ஒட்டுண்ணிகள்' என விமர்சித்தார்.இந்த வார்த்தையை சாதகமாக எடுத்துக்கொண்ட அரசியல் தகவல் தொடர்பு வியூகவாதியான அபிஜித் தீப்கே நையாண்டி கட்சியை டிஜிட்டல் தளத்தில் தொடங்கினார். 'கரப்பான் பூச்சி' என்பது அதிகாரத்தில் இருப்பவர்களால் ஒதுக்கப்படும் சாதாரண மக்களின் சகிப்புத்தன்மையின் அடையாளமாக மாற்றப்பட்டது.
ஜூன் 2026-ல் டெல்லி ஜந்தர் மந்தரில் இக்கட்சி சார்பாக பெரும் போராட்டம் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும் கடந்த சில ஆண்டுகளாகவே ஊழல் நிறைந்த நபராக உள்ள தர்மேந்திரப் பிரதான் பதவி விலகல் தான் தீர்வு சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவை இந்த இயக்கம் குறுகிய காலத்தில் பெற்றுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய முதல் ஆர்ப்பாட்டம் மற்றும் இளைஞர்களின் கருத்துக்களை அறிய:இந்த நையாண்டிப் பிரசாரம் எப்படிப் பிரபலமானது என்பது குறித்துப் பேசிய தீபக், "இதற்குப் பிறகு, இது பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும், இனி இது வெறும் நகைச்சுவை அல்ல என்றும் நாங்கள் உணரத் தொடங்கினோம். ஏனென்றால், மக்கள் விரக்தியடைந்துள்ளனர். அதனால் நாங்கள் ஒரு இணையதளத்தையும், கட்சியின் தேர்தல் அறிக்கையையும் உருவாக்கினோம்," என்றார்.
மேலும், "இன்ஸ்டாகிராமில் எங்களை இரண்டு மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள். (தற்போது 22.1 மில்லியன் அல்லது 2 கோடியே 21 லட்சத்திற்கும் அதிகமானோர்). இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் காக்ரோச் ஜனதா கட்சியில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளனர். நீண்ட காலத்திற்குப் பிறகு இந்திய அரசியலில் இது ஒரு முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாகும்" என்று அவர் கூறினார். ஆன்லைன் இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே, சனிக்கிழமை காலை அமெரிக்காவில் இருந்து தலைநகருக்கு வந்திறங்கிய பிறகு போராட்டத்தில் சேர்ந்தார். புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வருபவர்கள் மீது போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்திருந்தனர்














கருத்துகள்