தமிழ்நாட்டில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தை மேலும் திறம்படவும், விரைவாகவும் செயல்படுத்தும் நோக்கில், புதிய மண்டலங்கள் பிரித்து தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு.
ஹிந்து சமய அறநிலையத்துறையில் நிர்வாக சீரமைப்பு நடவடிக்கையாக புதிதாக சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலங்கள் உருவாக்கம்; வடக்கு மண்டலத்திற்கு சென்னை, தெற்கு மண்டலத்திற்கு திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி நிலையில் கூடுதல் ஆணையர் பணியிடங்கள் உருவாக்கம், கோயில் நிர்வாகம், ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கோயில் சொத்துகள் பாதுகாப்பு, பதிவேடுகள் பராமரிப்பு, வரவு மற்றும் செலவு ஒப்புதல், தணிக்கை, குத்தகை மற்றும் ஏல அனுமதி, திருப்பணிகள், கும்பாபிஷேகம், ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்கள் கூடுதல் ஆணையர்களுக்கு பகிர்ந்தளிப்பு,
தமிழ்நாடு ஹிந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டம், 1959-ன் பிரிவுகள் 13 மற்றும் 13-A கீழ் நிர்வாக அதிகார வரம்புகள் நிர்ணயம் தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியீடு, அரசாணை. மாநிலம் முழுவதும் சென்னை (வட மண்டலம்) மற்றும் திருச்சிராப்பள்ளி (தென் மண்டலம்) என இரண்டு புதிய மண்டலங்களாகப் பிரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய மண்டலங்கள் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையிலான கூடுதல் ஆணையர்களால் கண்காணிக்கப்படும்.புதிய மண்டலங்களின் கீழ் வரும் மாவட்டங்களின் விவரங்கள் :சென்னை மண்டலம் (வட மண்டலம்) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், மாவட்டங்கள் அடங்கும், திருச்சிராப்பள்ளி மண்டலம் (தென் மண்டலம்) திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி,கூடுதல் ஆணையர்களின் முக்கியப் பணிகளாக :கோயில் நிர்வாகத்தை மேம்படுத்துதல். கோயில் நிர்வாகப் பதிவேடுகளைப் பராமரித்தல்.கோயில் சொத்துகளை ஆய்வு செய்தல். நிர்வாக பட்ஜெட்டுகளுக்கு ஒப்புதல் அளித்தல்.தமிழ்நாட்டில் ஹிந்து சமய அறநிலையத்துறை 1 ஜனவரி 1960 ஆம் ஆண்டு முதல் முறையான சட்டத்தின் கீழ் (HR&CE Act, 1959) செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுமார் 43,800 ஹிந்து மதக் கோயில்கள், 22 சமண மதக் கோயில்கள், 45 ஆதீன மடங்கள் மற்றும் பல மன்னர் கால அறக்கட்டளைகளை இத்துறை நிர்வகிக்கிறது. திருக்கோயில் சொத்துக்களைப் பாதுகாத்தல், திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்துதல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அன்னதானத் திட்டங்களைச் செயல்படுத்துதல். அதன் நோக்கம் ஆனால் கடந்த 40 ஆண்டு காலத்தில் ஊழல் மட்டுமே நடக்கும் துறையாக உள்ள நிலையில் அதை சீரமைக்கும் நடவடிக்கை தற்போது பத்து சதவீதம் நடக்கிறது இனி அரசின் முயற்சி காரணமாக அது 50 சதவீதம் சரி செய்தாலே வெற்றி தான் இது அதை நோக்கிய அரசின் பயணம்





கருத்துகள்