திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை வட்டம் வாரிசு சான்றிதழுக்கு ரூபாய் .4,000 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது.
மணப்பாறை வட்டம், பாம்பாட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (30) என்பவரின் தந்தையார் கருப்பசாமி சமீபத்தில் உயிரிழந்ததையடுத்து, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அவர் அரசு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த மனு தொடர்பாக வி.பெரியப்பட்டி வருவாய் பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதாவை அணுகியபோது, மனுவை விரைந்து பரிசீலித்து சான்றிதழ் வழங்குவதற்காக முதலில் ரூபாய் .5,000 லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது. என்பவர் தனது பின்னர் அது ரூபாய் .4,000 ஆகக் குறைக்கப்பட்டது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஈஸ்வரி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞச ஒழிப்புத் துறையில் (DVAC) எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு துறை அலுவலர்களின் பொறிவைப்பு திட்டப்படி, பினாப்தலீன் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைப் புகார்தாரர் அரசு சாட்சிகள் முன்னிலையில் ஹேமலதாவிடம் வி.பெரியப்பட்டி பிர்கா அலுவலகத்தில் வைத்து, ஈஸ்வரியிடம் இருந்து ரூபாய் .4,000 லஞ்சப் பணத்தைக்கொடுத்துப் பெற்றபோது, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் மறைந்திருந்து ஹேமலதாவை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர், அவர் பணி செய்யும் அலுவலகத்திலும் மேலும் அவரது இல்லத்திலும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அதன் பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்


கருத்துகள்