தமிழ்நாட்டில் 5 முக்கிய ஐ.பி.எஸ். (IPS) அதிகாரிகள் பணியிட மாற்றம்,
அரசின் உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கி. மணிவாசன் ஐஏஎஸ் உத்தரவு அதன்படி எம். விஜயலட்சுமி, IPS: திருச்சிராப்பள்ளி ஆயுதப்படை டி.ஐ.ஜி (DIG)-யாக இருந்தவர், சென்னை ஊர்க்காவல் படை டி.ஐ.ஜி-யாக மாற்றப்பட்டுள்ளார்.ஆர். சிவபிரசாத், IPS: சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (SP)- ஆக இருந்தவர், தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக (SP) நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் குப்தா, IPS: தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP)- ஆக இருந்தவர், சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக (SP) மாற்றப்பட்டுள்ளார். டி. சண்முகப்பிரியா, IPS: சென்னை சிபிசிஐடி (CB-CID) மத்திய மண்டல எஸ்பி-யாக இருந்தவர், சென்னை மேற்கு சரக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு (DVAC) எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். பி.ஆர்.மீரா, IPS: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உட்கோட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் (ASP)- ஆக இருந்தவர், சென்னை டிஜிபி தலைமையகத்தின் அலுவலக மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு உதவி காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். இந்த இடமாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.


கருத்துகள்