தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்றத்தில் வாதிட 83 அரசு வழக்கறிஞர்களை சட்ட அதிகாரிகளாக நியமித்தது.
தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் அதன் மதுரை கிளைக்கும் மாநில அரசு வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள்
மற்றும் அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 83 சட்ட அதிகாரிகளை நியமித்துள்ளது. மேலும் இவர்களுடன் 8 கூடுதல் அட்வகேட் ஜெனரல்களையும் பொதுத்துறை நியமனம் செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை அமர்வு மற்றும் மதுரை கிளைக்கு 8 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் உட்பட மொத்தம் 91 வழக்கறிஞர்களை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், பி.வி. பாலசுப்பிரமணியம், டி. கௌதமன், பி. சரவணன், ஏ. அப்துல் ஹமீது, ஜே. பரதன், எஸ். அர்ஜுன் சுரேஷ், எஸ். குமரேசன் மற்றும் கவிதா நித்யானந்தன் ஆகிய 8 பேர் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பாலசுப்பிரமணியம் மற்றும் கௌதமன் ஆகியோர் ஏற்கனவே தற்காலிக ஏற்பாடாக நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடர், கூடுதல் அரசு பிளீடர் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு மற்றும் உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு நியமனம் .மாநில அரசு பிளீடராக வழக்கறிஞர் எம். குருபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு அரசின் புதிய கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமனமானது
தமிழ்நாடு அரசு 30.07.2026 ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ள அரசாணை.(Ms.) எண் .501 மூலம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்விற்காக 8 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் அவர்கள் பதவியேற்கும் நாளிலிருந்து அமலுக்கு வரும்.
தமிழ்நாடு அரசு, அரசாணையின் மூலம் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்காக புதிய State Government Pleader, Government Pleader, Special Government Pleader, Additional Government Pleader, Government Advocate (Civil Side) மற்றும் Government Advocate (Taxes) உள்ளிட்ட சட்ட அலுவலர்களை நியமித்துள்ளது. தேர்வுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மொத்தம் 83 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் Government Advocate (Civil Side) மற்றும் Government Advocate (Taxes) பதவிகளுக்கான நியமனம் 2 ஆண்டுகள் செல்லுபடியாகும்.












கருத்துகள்