முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழனி மடச் சொத்து மோசடியில் ஜடக் கும்பல் அட்டகாசம்

150 ஆண்டுகள் பழமையான பழனி தண்டபாணி மடத்திற்கும்



விழுப்புரம் எம்.தண்டபாணி மகன் முருகதாஸுக்கும் இந்தThirupugal Swamigal Murugadas Swamigal @ Dhandapani Swamigal Trust மடம் டிரஸ்ட்டுக்கும் உள்ள சம்பந்தம் என்ன?, மோசடிக் கும்பல் விழுப்புரம் காமராஜர் நகர் பகுதியில் உள்ள முருகதாஸின் வீடு பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. அங்கு 50-க்கும் மேற்பட்ட முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு,  அவரது வீடு சிபிசிஐடி காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது. காலையில் தொடங்கி இரவு வரை சோதனை நீடித்தது. தலைமறைவாக உள்ள முருகதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை சிபிசிஐடி காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.



காவல் காக்கும் ஐயனார் களவு போன கதைபோல விற்பனை உரிமை இல்லாத மடம் மற்றும் அறக்கட்டளை சொத்துக்களை பாதுகாக்காமல் HR&CE சட்டம் மற்றும் விதிமுறை மீறல்,    அடுத்து டிரஸ்ட் சட்டம் விதிமுறை மீறல்.(TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS-
ACT, 1959 (Tamil Nadu Act 22 to 1959) மற்றும் THE INDIAN TRUSTS ACT, 1882) மற்றும் ஆள்மாறாடடம் மோசடி காரணம் ஊழல் லஞ்சம் லாவண்யம்,



இது போல கடந்த காலங்களில் பல ஆலயங்களில் நடந்த சம்பவங்கள் பல உண்டுநிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் டிகேஎன் புதூர் சேதுபதி  மற்றும் வெள்ளத்துரை ஆகியோரின் வீடுகளில் சோதனை நடந்தது. தற்போது தலைமறைவாக உள்ள இவர்களைக் கைது செய்ய சிபிசிஐடி தீவிரமாக முயன்று வருகிறது  பழனி தண்டாயுதபாணி மடத்துக்குச் சொந்தமான சுமார் 100 கோடி சந்தை மதிப்புள்ள நிலம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அரசியல் பிரமுகர்கள்,




நிலத்தை விற்பனை செய்தவர்கள் மற்றும் நிலப் புரோக்கர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவின் பேரில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு அதிரடி சோதனைகள் நடத்தப்படுகின்றன இந்த மோசடிக் கும்பலின் பின்னணியைத் தேடி, ஒட்டன்சத்திரம்,  திருநெல்வேலி, பாளையங்கோட்டை  பகுதிகளிலும் சிபிசிஐடி தனது சோதனையை விரிவுபடுத்தியுள்ளதுசென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இந்த மோசடி நிலப் பதிவை முற்றிலும் செல்லாது என அறிவித்துள்ளது  சிபிசிஐடி கண்காணிப்பாளர் சஜிதா பழனி ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் நேரில் விசாரணை நடத்தி, வங்கிக் கணக்குகள் மற்றும் போலி ஆவணங்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து விசாரணை தீரமாக நடக்கும் நிலையில்.   




3 வது மாதம் நடந்த பழனி நில மோசடி ஊழலுக்கு 5 வது மாதம் தேர்வான தவெக அமைச்சர் மீது அவதூறு செய்வது ஏற்புடையதல்ல, அவர் தற்போது இந்த ஊழல் மீது தீவிர நடவடிக்கை எடுக்கும் நிலையில் எப்படிப் பொறுப்பு CBCID விசாரணை மூலம் உண்மை வெளிவரும் உண்மையான டிரஸ்டிகளும் விற்பனை செய்தவர்கள் இல்லை   




இதில் For Thirupugal Swamigal Murugadas Swamigal @ Dhandapani Swamigal Trust   ன கையெழுத்து செய்தவர் விழுப்புரம் M.தணடபாணி மகன் முருகதாஸ்   அவரது வீட்டில் சிபிசிஐடி காவல்துறை சோதனை நடத்தி ஆவணங்கள் கைப்பற்றி, வீட்டை சீல் வைத்துள்ளனர், இந்த தண்டபாணி மடம் டிரஸ்ட்என்பதன் நிறுவனர் யார்? உண்மையில் அந்த டிரஸ்ட் எப்போது ஏற்படுத்தப்பட்டது, அதன் மேனேஜிங் டிரஸ்டி யார்?  நிதிக்குழு டிரஸ்டி யார்?எந்த நோக்கத்தில் டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டது, அதன் தொடர்ச்சியான டிரஸ்டிகள் யார்? யார்?   தற்போது அந்த டிரஸ்ட் அரசு சட்டவிதிகளின் படி லைவில் உள்ளதா? வருமானவரித்துறைக்கு 10 A, B மற்றும் 12 A, B பதிவுகள் உள்ளதா ஆண்டு அறிக்கை ஆய்வு செய்தனரா? அதற்கு ஆடிட்டர் உண்டா வருமானவரி கணக்குகள் தொடர்ச்சியாக தாக்கல் செய்து வரி விலக்கு 80-G உள்ளதா?






மத்திய என்ஜிஓ பதிவு யூனிஃகியூ ஐடி உள்ளதா?  அதற்கு தற்போது நிர்வகிக்கும் ஒரே பெயர் உள்ள நபர்கள் திருத்தப் பத்திரம் அமென்மென்ட் பதிவு உள்ளதா மேலும் டிரஸ்ட் சொத்து விற்பனை செய்ய டிரஸ்ட் தீர்மானப்படி திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மூலம் டிரஸ்ட் ஓபி வழக்கு தாக்கலாகி தீர்ப்பு வந்ததா? மேலும் பொது அறிவிப்பு பழனி பகுதி முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டதா? இப்படி பல எழுவினா இதில் தொக்கி நிற்கும் நிலையில் இதில் HR & CE செயல்பாடுகள் மற்றும் அனுமதிகள் எவ்வாறு வழஙகப்படடது என்பதில் சடட ரீதியாக பல எழு வினாக்கள் உள்ளது, நாம் கேள்விப்பட்ட வகையில் திருத்தண்டபாணி சுவாமிகள்  நவம்பர் மாதம் 28 ஆம் தேதி , 1839 -முதல் ஜூலை மாதம் 5 ஆம் தேதி , 1898 ல் தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர் தமிழுக்கும், தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர்.



முருக பக்தர், இவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், திருப்புகழ்ச் சுவாமிகள், முருகதாச சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டவர். இவரது இலக்கண நூல்கள் முன்னோரின் கருத்துக்களோடு முரண்பட்டவை அல்ல. எனினும் பிற இலக்கண ஆசிரியர்களைப் போல முன்னோர் இலக்கண நூற்பாக்களை இவர் எடுத்தாளவில்லை. தமிழ் மொழியின் வளர்ச்சி நிலையைக் கருத்தில் கொண்டு இலக்கணம் பாடியுள்ளார்.


19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ’ஆங்கிலியர் அந்தாதி’ பாடியவர். தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டம்  நெற்கட்டும் செவ்வல் ஜமீன் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில்நாயகம் பிள்ளை - பேச்சிமுத்து ஆகியோருக்கு 1839 இல் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம். தந்தையின் நண்பரான சீத்தாராம நாயுடு என்பவரால் இவருக்கு பழனி முருகன் மீது பக்தி உருவாயிற்று. ஆரம்பக் கல்வியை முடித்தவர், இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமை பெற்றவர். எட்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார். அந்த வயதில், "பூமி காத்தாள்" என்ற அம்மனுக்கு அப்பெயர் எப்படி அமைந்தது என்ற காரணத்தைக் கூறி, பாடுதற்கு அரிய வெண்பாவில் அதைப் பாடினார். கவிதை பொழியும் இவருடைய ஆற்றலைக் கண்டு வியந்த சீத்தாராம நாயுடு இவருக்கு "ஓயா மாரி" என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். தனது பதின்மூன்று வயதில் ’வண்ணம்’ என்ற சந்தப்பா பாடுவதில் வல்லமை பெற்றிருந்ததால் வண்ணச்சரபம் என்றும், முருகன் புகழ் பாடியதால் இவர் "முருகதாசர்" என்றும் அழைக்கப்பட்டார். இவர் முருகனின் திருப்புகழை விரும்பிப் பாடிக்கொண்டே இருந்ததால் "திருப்புகழ்ச் சுவாமிகள்" என்றும் சிறப்பிக்கப்பட்டார். அரையில் கௌபீனமும், கையில் தண்டமும் கொண்டிருந்ததால் தண்டபாணி சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.

அவிநாசி முதல் வேளூர் வரையிலான 218 ஊர்களுக்கும், கேரளம் மற்றும் இலங்கைக்கும் இவர் சென்றுள்ளார், பழனியில் மடம் அமைத்து சிலகாலம் வாழ்ந்தவர்.பழனி தண்டபாணி மடத்திற்கு  சொந்தமான சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய் பெருமானம் உள்ள 1.35 ஏக்கர்  நிலத்தை

 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில்,

 27 மார்ச் 2026  அன்று பத்திர பதிவு செய்யப்பட்ட  ஆவண 

எண் 1446 /2026 ல் 5 ஆம் பக்கத்தில்   நிலத்தை வாங்கியதாக கூறப்படும்

 சேதுபதி ,  வெள்ளத்துரை ஆகியோர் அளித்த தலா ஒரு கோடி ரூபாய்  செக் விபரத்தில்   செக்  எண் மட்டுமே உள்ளது. 

எந்த வங்கியில் இருந்து யாரால் , யாருக்கு செக் அளிக்கப்பட்டது என்ற விவரம்  பத்திர ஆவணத்தில் இல்லை , திட்டமிட்டு அந்த தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது . 

எந்த வங்கியில் இருந்து செக் அளிக்கப்பட்டது என்ற விவரம் தெரிந்தால்  பினாமிகளின் பணப் பரிவர்த்தனையை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்

இந்த முறைகேட்டிற்கு  மூல காரணமாக விளங்கும் முக்கிய புள்ளியை எளிதாக கைது செய்து விடலாம் சிபிசிஐடி போலீசார் இதில் கவனம் செலுத்த வேண்டும். இது 

திமுக ஆட்சியில் நடந்த சம்பவம்  தவெக ஆட்சி அமைத்தது மே பத்தாம் தேதிக்கு பின் 

கவனம் செலுத்துவாரா இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவதற்கு இன்னும் பல தகவல் பப்ளிக் ஜஸ்டிஸ் புலனாய்வுத் தகவல் பல உண்டுஇந்த ஊழல் அறநிலையத்துறை செயலாளர் மற்றும் பதிவுத்துறை செயலாளர் குமரகுருபரன் இ ஆ ப ஒருவரே இதை விளக்க வேண்டும் திமுக ஆட்சி மற்றும் தற்போது      விழுப்புரம் தண்டபாணி மகனுக்கும் இந்த டிரஸ்ட்டுக்கும் உள்ள சம்பந்தம் என்ன, மோசடிக் கும்பல்,  ஒரு வரலாற்றுப் பார்வை :- பழனியில் தண்டபாணி மடம் அமைத்த ‘வண்ணச்சரபம்’ தண்டபாணி சுவாமிகள் 

பழநித் திருவாயிரம் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் முருகபக்தர் வண்ணச்சரம் தண்டபாணி சுவாமிகள் (1839 - 1898). இவரது இயற்பெயர் சங்கரலிங்கம். ‘வண்ணம்’ எனும் சந்தப் பாக்களைப் பாடும் வல்லமை கொண்டிருந்ததால் ‘வண்ணச் சரபம்’ சுவாமிகள் என்றும்,  பழநி ஆண்டியைப் போலவே கௌபீனம், தண்டம் இவற்றுடன் எப்போதும் காட்சி அளித்ததால் 

‘தண்டபாணி சுவாமிகள்’ என்றும் அழைக்கப்பட்டார். 

திருநெல்வேலியில் (1839) பிறந்தவர். இயற்பெயர் சங்கரலிங்கம். தந்தையின் நண்பர் சீதாராம நாயுடுவால் முருகன் மீது பக்தி அதிகரித்தது. சிறு வயதிலேயே தமிழில் புலமை பெற்றிருந்தார்.

பூமி காத்தாள்’ என்ற அம்மனுக்கு அப்பெயர் வருவதற்கான காரணத்தை, 8 வயதில் வெண்பா மூலம் பாடி விளக்கியவர். முருகனைப் பற்றி ஏராளமான பாடல்கள் பாடியதால் முருகதாசன் என்றும், திருப்புகழைப் பாடிக்கொண்டே இருந்ததால் திருப்புகழ் சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.

மேனி முழுவதும் திருநீறு, நெற்றியில் குங்குமம், இடது தோளில் வடகலைத் திருநாமம், வலது தோளில் தென்கலைத் திருநாமம் தரித்திருப்பார். அக்கமணி மாலை, பாதக்குறடு, கோவணத்துடன், தண்டாயுதம் ஏந்தி வலம் வந்ததால் இவரை ‘தண்டபாணி சுவாமிகள்’ என்றனர் மக்கள். அகப்பொருளின் துறைகளை அமைத்து சந்த யாப்பில் ‘வண்ணம்’ என்ற பெயரில் பாடல்களைப் பாடியதால் ‘வண்ணச்சரபம்’ என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது.

முத்தமிழ் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழ் அலங்காரம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தவர். திருக்குறளை அடியொட்டி, 1300 குறள் வெண்பாக்களில் மறுநெறித் திருநூல் என்ற நூலை இயற்றியவர். அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு ஆகிய 3 இலக்கண நூல்களை தந்துள்ளார்.

அரசாட்சி, அருளாட்சி, திருமகள் அந்தாதி, திருமால் ஆயிரம், தில்லை ஆயிரம், சடகோபர் சதக்கந்தாதி, அருணகிரிநாதர் புராணம் என பல இலக்கியங்களைப் படைத்துள்ளார். ஏராளமான கீர்த்தனைகள், தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.

‘ஆங்கிலியர் அந்தாதி’ என்று நூல் வாயிலாக ஆங்கிலேயர் ஆதிக்கத்தை கண்டனம் செய்தார். 1240 விருத்தப் பாக்களால் ஆன சுயசரிதையை குருபர தத்துவம் என்ற பெயரில் எழுதினார். 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை 3 ஆயிரம் பாடல்களில் புலவர் புராணம் என்ற நூலாகப் படைத்தார். அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை  வடலூர் அருட்பிரகாச வள்ளலாரை 3 முறை சந்தித்துள்ளார். தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் தந்தை, தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் உள்ளிட்டோர் இவரது சீடர்கள். பெண் கல்வி, விதவை மறுமணம், உயிர்க்கொலை புரியாமை, புலால் உண்ணாமை, தமிழ் உணர்வு ஆகியவற்றை தன் நூல்களில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். மனைவிக்கு கல்வி கற்பித்து புலமைபெற வைத்தார்.

எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடிகளில் இவர் 1 லட்சம் பாடல்கள் எழுதியதாக கூறப்படுகிறது. அவற்றில் 50 ஆயிரம் பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

அருணகிரிநாதரைப் போலவே ஸ்தலவழிபாட்டை மேற்கொண்ட சுவாமிகள், பழநியிலும் மடம் அமைத்துப் பலகாலம் தங்கி பழநி ஆண்டவன் மேல் பல நூல்களை இயற்றினார். வெண்பா மாலை, வெண்பா அந்தாதி, அலங்காரம், குருபரமாலை, பதிற்றுப்பத்தந்தாதி, ஒருபா ஒருபது, நவமணிமாலை, சித்திமாலை, நவரசம், நடுவொலியந்தாதி, வகுப்பு, வண்ணம், பிள்ளைத்தமிழ், கலம்பகம், யமக அந்தாதி, திரிபு மஞ்சரி எனும் பிரிவுகளைக் கொண்டு தண்டபாணிக் கடவுளைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட ‘பழநித் திருவாயிரம்’எனும் நூலை இயற்றினார். 

1973 ஆம் ஆண்டு, பழநி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தினர், இந்நூலின் புதிய பதிப்பை வெளியிட்டனர்.


இவற்றுள் ஒன்றாகிய பழநி அலங்காரத்தில் பழநியின் சிறப்புகள், முருகனின் பெருமைகள், தோற்றப் பொலிவு, அவனது வாகனம், கொடி, கருவிகள் ஆகியவற்றை விரிவாகப் பாடியுள்ளார்.

தன் உள்ளக் கனவிற்கு முருகனின் பல உருவங்கள் காட்சி தந்தாலும்,

பழநி முருகனைப் போன்று பிற திருவுருவங்களிடம் தனக்கு 

அபிமானமில்லை என்று உறுதியாகப் பாடுகிறார்.

‘‘எவ்வகைத் துயரம் நான் எய்திடினும், என் இதயத் தென்றும்

தெவ்வடும் வேலான் கொண்ட திருஉரு அனந்தத்துள்ளும்

எவ்வமில் பழநிக் குன்றில் இலங்கு உரு மேலாம் என்னும்

அவ்வபிமானம் மட்டும் அகன்றிடல் அரிதாம்  அம்மா

என்னுடல் ஆவி மூன்றும் ஏற்றவன், பழநிக் குன்றில்

மன்னு சற்குருவே என்கை மறுக்க நும் சரதம் ஆமால்’’

.........பழநிக் குருபரதத்துவம்,

பழநிமலை முருகன், தீயமனத்தினர் தொண்டு புரிந்தாலும் 

வேண்டிய இன்பம் அளிப்பான் என்பதை

‘‘பாதாளவாசிகள் அஞ்சுறக்கூவும் பசுமயிலோன் 

வேதாள பூதங்கள் இன்புறப்போர் செயும் வேற்படையான் 

கூதாளமும் புனைவான் பழனாபுரிக் கோயில் எந்தை 

தீதாளர் தொண்டு புரிந்தாலும் வேண்டிய 

சீர் நல்குமே’’ - என்று பாடியுள்ளார்.

பழநி மலையில் வீற்றிருக்கின்ற முருகப் பெருமான் தன் திருக்கைகளால் இந்திரன் முதலான தேவர்களைக் காத்தான் என்பதனை‘‘உத்தம சற்குருவாகிப் பழனி வெற்புற்ற செவ்வேள் கைத்தலம் இந்திரர் பற்பலர்க் காத்தது’’ என்று குறிப்பிடுகிறார். 

பழனிப் பதிற்றுப்பத்தந்தாதியில், 

‘‘பொடியதனால் முழுக்காடிக் கீளொடு வெண்

கோவணமும் புனைந்து கையில் 

தடிபிடித்துப் பழநிவெற்பில் குலவும் அவன்

தனை மறவேன் சரதம் மாதோ’’

என்று பழநி முருகனிடம் தனக்குள்ள அன்பை வெளிப்படுத்துகிறார். 

‘‘பண்டு விண்ணோர் குலம் வாழப் புரந்து 

பழநியில் ஓர் தண்டுடன் நின்று விளையாடும் மாண்டைச் சற்குரவர்

கண்டு தொழுது துதிபாடி நெஞ்சில் கருதும் உண்மைத் 

தொண்டு செய்வார்க்கு அவன் வேலும் 

மயிலும் துணை செய்யுமே’’

அருணகிரியாரின் கந்தர் அலங்காரச் செய்யுளை ஒட்டி வண்ணச்சரபம் பாடிய அலங்காரச் செய்யுள்.பழநி வடிவேலர் சந்நதி முறை:பழநி ஆண்டவனின் பெருமை கூறும் எட்டுப்பாடல்கள் கொண்ட இந்நூலின் ஆசிரியை அகிலாண்ட நாயகி அம்மாள் ஆவார். பழநிமுருகனை வழிபடும் நியதிகள், தீர்த்தச் சிறப்பு, காவடி வகைகள் மற்றும் பிணிதீர்த்து அருள்பாலிக்கும் பழநி ஆண்டியின் திறன் ஆகியவை பற்றிப் பாடியுள்ளார்.

பழநி ஆண்டவர் மயில் விடு தூதுபழநி முருகனை தரிசிக்கப் பெற்று அக்காட்சி மறைய, மீண்டும் அந்த அனுபவத்தைப் பெறும் பொருட்டு பழநி முருகனை அழைத்து வரும்படியான மயிலைத் தூது விடுகிறார், ஆசிரியர் நடேச கவுண்டர் அவர்கள்.  ‘கொணாதி உன் இறைவனையே’ என்று பாம்பன் சுவாமிகள் மயிலைத்தூது விடும் பாக்களை இது நினைவுறுத்துகின்றது.

இறுதிகாலத்தில் அரிசி உணவைத் தவிர்த்து பயறு வகைகளை மட்டுமே உட்கொண்டார். 19-ம் நூற்றாண்டில் முருகன் வழிபாடு தழைத்தோங்கப் பாடுபட்டவர். கடும் தவத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட தண்டபாணி சுவாமிகள் 59-வது வயதில் 1898 ஆம் ஆண்டில் முக்தியடைந்தார்... அந்த மடம் கண்ட மஹான். இதுவே கடந்த கால வரலாறு 



தற்போது நிலமோசடி அசுரர்களை அழிக்க வேலெடுத்து வீசிய எம்பெருமான் முருகன் போல் நமது முதல்வர் சட்டத்தின் வழி கோலெடுத்து வெல்லட்டும் ஊழல் அசுரன் ஒழியட்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...