பணியில் இறந்த அரசு ஊழியரின் வாரிசுக்கு வேலை என்பது கருணை தானே தவிர உரிமை அல்ல கரூர் வழக்கில் தீர்ப்பு அரசு மேல்முறையீடு .
பணியில் இறந்த அரசு ஊழியரின் வாரிசுக்கு வேலை என்பது கருணை அடிப்படையில் தானே தவிர உரிமை அடிப்படையில் அல்ல..
உரிமைக்கு இருக்கும் கட்டாயம், கருணைக்கும் சலுகைக்கும் என்று ஏற்கனவே உள்ள தீர்ப்பு விபரம் இனி உச்சநீதி மன்றத்தில் விவாதம் பெறும், காரணம் அந்தத் தீர்ப்பும் உச்சநீதிமன்றம் வழங்கியதே,கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு, கரூர் தவெக கூட்ட நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசாங்க வேலை வழங்கிய தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர்களில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் மாவட்டச் செயலாளர் சந்தோஷ்குமார் பரமேஷும் ஒருவர்
அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதில் தமிழ்நாடு அரசு 31 பேருக்கு அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
படித்து முடித்து அரசு வேலைக்காக முயற்சித்துக்கொண்டிருக்கும் பல லட்சம் பட்டதாரிகளின் சார்பாக முன்னெடுத்த வழக்கு.
அரசுப்பேருந்தில் சென்று விபத்தில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்குவீர்களா?,
சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கும் அரசுப்பணி வழங்கலாமா?
டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப்பணிக்கு எண்ணற்றவர்கள் தேர்வு எழுதிக் காத்திருக்கின்றனர் என நீதிபதி கேள்வி
கரூர் கூட்ட நெரிசல் 31 பேரின் அரசுப்பணி ரத்து முழு விபரம்.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வழங்கிய அரசுப்பணியாணை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசுப்பணி வழங்கிய தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவு
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு சாதாரண பணி வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறுவதை ஏற்க முடியாது -எனவும்,
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி தமிழ்நாடு அரசு உதவலாம் எனவும்,
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி என்றால் பேருந்து விபத்தில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கும் வழங்குவீர்களா?
சிவகாசி வெடி விபத்தில் உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்திற்கும் அரசுப்பணி வழங்குவீர்களா? எனவும்,
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அண்மையில் அரசுப்பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்
கருணை அடிப்படையில் வேலை பெற பலர் காத்திருக்கும் நிலையில் கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முன்னுரிமை ஏன்?. எனவும் வினா?உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு (Special Leave Petition) செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பணி நியமனம் பெற்றவர்களின் தரப்பு வாதங்களைக் கேட்காமலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நியமனங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16-ஆவது பிரிவுகளுக்கு நேரடியாக முரணானவை எனவும் விபத்துகளில் அல்லது அரசியல் கூட்டங்களில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு இப்படி நேரடியாகக் கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14 மற்றும் 16 ஆகிய பிரிவுகளுக்கு அதாவது சம வாய்ப்புக் கொள்கைகளுக்கு எதிரானது.அரசுப் பேருந்தில் பயணித்து விபத்தில் இறப்பவர்கள்,அரசு பேருந்தை நம்பி பயணித்து விபத்தில் இறந்தால் இரண்டு மூன்று லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவித்துவிட்டு சடலமாக கொடுப்பது மட்டும் என்ன நியாயம்?" என பலரது பலநாள் கேள்வியை தற்போது நீதிமன்றம் தெரிவித்துள்ளது,





கருத்துகள்