முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வி.செந்தில் பாலாஜி மீது கைது வாரண்ட் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

வி.செந்தில் பாலாஜி மீது கைது வாரண்ட் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை - பாஸ்போர்ட் ஒப்படைக்க உத்தரவு!


சென்னை   உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன்,  திமுக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு எதிராக சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். விசாரணையின் போது, ​​பொது கருவூலத்திற்கு  ரூபாய் 17 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என நீதிபதி கூறினார். அரசு வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் கூறுகையில், ரூபாய் 17 கோடி என்பது பனிப்பாறையின் ஒரு முனை மட்டுமே என்றும், பொது கருவூலத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறைந்தபட்சம் ரூபாய் 100 கோடியாக இருக்கலாம் என்றும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் காவலில் வைத்து விசாரணை செய்வது முற்றிலும் அவசியம் என்றும் அரசு பப்ளிக் பிராஷகியூட்டர் தெரிவித்துள்ளது. Party Fund' பெயரில் மாதம் ரூபாய் 102 கோடி களவாடியது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஐஏஎஸ் விசாகன் உள்ளிட்டோர் மீது வழக்கு; மன்னார்குடி மதுபான ஆலையிலும் சோதனை.

கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் மூலம் மதுபானக் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ரூபாய் .1,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் ஐஏஎஸ் உள்ளிட்ட 7 பேர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்கு பதிவு செய்ததையடுத்து, மாநிலம் முழுவதும் 41 இடங்களில் இரண்டு நாட்கள் முன் அதிகாலை முதல் DVAC அதிரடி சோதனை நடத்தியது. கடந்த திமுக ஆட்சியில் 'Party Fund' என்ற பெயரில் மதுபான உற்பத்தி ஆலைகளிடமிருந்து மாதந்தோறும் ரூபாய் .102 கோடி பணம் முறைகேடாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த வழக்கு மேலும் பல முக்கிய நபர்களை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் மூலம் மதுபான கொள்முதல் மற்றும் விநியோகத்தில் பெருமளவு முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.  இந்த நிதி, திமுக கட்சி நிதிக்கும், கட்சி நிர்வாகிகளின் தனிப்பட்ட பயனுக்கும் பயன்படுத்தப்பட்டதாக புகார் கூறியது. தமிழ்நாட்டில் 4,048 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 'Party Fund' என்ற பெயரில் மாதந்தோறும் ரூபாய் .102 கோடி பணம் முறைகேடாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் இந்த தொகை ரூபாய் .3,600 கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு உயர் அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, டாஸ்மாக் வருவாய் மற்றும் கணக்கு முறைகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர அரசு உத்தரவிட்டுள்ளது.

DVAC பதிவு செய்துள்ள FIR-ல் இடம்பெற்றுள்ள 7 குற்றவாளிகள் மற்றும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள்:

1.வி. செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சர், தற்போதைய திமுக எம்எல்ஏ. டாஸ்மாக் கொள்முதலில் முறைகேடுகளில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றச்சாட்டு. மேலும், இவர் மீது ஏற்கனவே ரூ.35 கோடி கறையான் வழக்கு, ரூ.397 கோடி மின்மின்மாற்றி ஊழல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

2.எஸ். விசாகன்  முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் (ஐஏஸ் அதிகாரி). டாஸ்மாக் நிதி முறைகேடுகளில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

3.  சுப்பிரமணி  செந்தில் பாலாஜியின் உதவியாளர். இவரது இல்லத்தில் DVAC சோதனை நடத்தப்பட்டது.

4.பாஸ்கர் கரூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர். இவரது இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

5.கார்த்திக்  கோதை நகர் பகுதியைச் சேர்ந்தவர். முன்னதாக ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்.

6.  ரமேஷ்  கோதை நகர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது இல்லத்திலும் DVAC சோதனை நடத்தப்பட்டது.

7.டாஸ்மாக் மாவட்ட மேலாளர்  இவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

 மேற்கண்ட 7 பேர் தவிர, மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திமுக எம்.பி. டி.ஆர். பாலுவுக்கு சொந்தமான மன்னார்குடி மதுபான ஆலையிலும் DVAC சோதனை நடத்தியது.

அன்று காலை 7 மணியளவில் மாநிலம் முழுவதும் 41 இடங்களில் ஒரே நேரத்தில் DVAC சோதனை நடத்தப்பட்டது:

 செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடான ராமேஸ்வரப்பட்டி, அவரது உதவியாளர் சுப்பிரமணியின் வீடான மூர்த்திபாளையம், திமுக ஒன்றிய செயலாளர் பாஸ்கரின் வீடான கோயம்பள்ளி, கார்த்திக் மற்றும் ரமேஷின் வீடுகள் கோதை நகர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம். உள்ளிட்ட 

14 இடங்களில் சோதனை. செந்தில் பாலாஜி தங்கியிருந்த மாரீஸ் தனியார் ஹோட்டல் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம்: பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம், நவக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கிடங்குகள் மற்றும் மதுபான உற்பத்தி அலகுகளில் சோதனை.

தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மதுபான ஆலையில் சோதனை. கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் சோதனை.

 திருவள்ளூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திருவாரூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சோதனை நடந்தது.

இந்த சோதனைகளில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும், 20-க்கும் மேற்பட்ட லாரிகள் தேக்கி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Party Fund' என்ற பெயரில் மாதம் ரூபாய் .102 கோடி களவு என்பது, மக்களின் பணத்தை அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட நிதிக்காக பயன்படுத்தியதற்கு சமம். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, டாஸ்மாக் ஊழல் வழக்கு மிகப்பெரிய அளவில் விரிவடையப்போவதற்கான அறிகுறியாகும். கடந்த ஏப்ரலில் டிவிஏசி தலைமை இயக்குநராக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டதற்கு டி.ஆர். பாலு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இப்போது அவரது மதுபான ஆலையிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணை அரசியல் பழிவாங்கல் இல்லை  உண்மையான ஊழலை வெளிக்கொணரும் முயற்சி எனக் கவனிக்க வேண்டும். ஆனால், ரூபாய் .3,600 கோடி முறைகேடு புகார் இவ்வளவு பெரிய அளவில் உள்ள போது, அது அரசியல் குற்றமாக இருந்தாலும் சரி, சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டியதே. இந்த வழக்கில் DVAC-யின் விசாரணை முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். இல்லையெனில், இது அரசியல் குற்றவாளிகளை தண்டிக்க கடந்த ஐந்தாண்டுகளில் இந்த முறைகேடு நடந்திருந்தால், அதற்கு பொறுப்பான அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

DVAC தனது விசாரணையை தொடர்ந்து, 41 இடங்களில் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்யும். இந்த விசாரணையில் இருந்து பெறப்படும் தகவல்கள், பிற முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுக தலைவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். செந்தில் பாலாஜி மற்றும் விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த வழக்கு, வரும் கால தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது, 

த.வெ.க எம்.எல்.ஏ பேர வழக்கில் தினந்தோறும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி வந்தவர், வரவில்லை 

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மட்டுமே ஆஜராகி கையெழுத்திட்டு சென்றார்

‘தனது அண்ணனுக்கு உடல் நலமில்லை’ அதனால் மருத்துவமனை சென்றிருப்பதாக அசோக் குமார் தகவல்   மேலும் V.செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதி விலகல்!

போக்குவரத்துத்துறை பண மோசடி வழக்கின் விசாரணையில் இருந்து விலகினார் உச்சநீதிமன்ற நீதிபதி V.மோகனா.இந்த வழக்கில் ஏற்கனவே வழக்கறிஞராக நீதிபதி V.மோகனா ஆஜராகி இருந்ததால் வழக்கின் தற்போதைய விசாரணையில் இருந்து விலகல்!தமிழ்நாடு அரசாங்கம் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக Tasmac விவகாரம் குறித்து தொடர்ந்த SLP(Crl.7958/2025) வழக்கில் ED-விசாரணைக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடை தற்போது வரை நீடிக்கிறது 

ஆனால், அதே வழக்கில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த Counter Affidavit-ஐ மையமாக வைத்து தமிழ்நாடு DVAC முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,விசாகன் IAS உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது 

TASMAC மேலாளர்களின் புகார்  மற்றும் Surprise Raid மூலமாக DVAC பதிவு செய்த 41 FIR-களை இணைத்தே ED -ன் சென்னை மண்டல அலுவலகம் II-ல் 03.10.2023-ல் 

(ECIR No.CEZO-II/23/2023) வழக்கு பதிவு செய்யப்பட்டது அதன்படி பார்த்தால், தற்போது (28-07-26)DVAC பதிவு செய்துள்ள FIR-ல் குற்றம் நடந்ததாக குறிப்பிட்டுள்ள 2021-25 காலத்தில் ஏற்கனவே,டாஸ்மாக் நிறுவனம் சார்ந்து பதிவு DVAC செய்துள்ள FIR-கள் எண்ணிக்கை ED 2023 வரை என பதிவு செய்து குறிப்பிட்டுள்ள FIR எண்ணிக்கையான 41-உடன் ஒத்துப்போக  வேண்டும்,

ED கடிதம் மற்றும் Counter Affidavit படி prima facie உள்ளதென புதிதாக வழக்கு பதிவு செய்துள்ள DVAC இதே டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் தொடர்புள்ளதென 

ED குற்றம் சாட்டியுள்ளது ஆனால் அந்த பெயரை  FIR-ல் DVAC சேர்க்கவில்லை

முழுமையான ஆதாரங்களை சேகரித்து கொடுக்கப்படும் புகாரை விசாரித்து,FIR பதிவு செய்து,DVAC-யை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வைத்து வெற்றி பெற வேண்டும் 

மத்திய ஏஜென்சியின் கடிதம் மற்றும் பிராமணப்பத்திரத்தின் அடிப்படையில் FIR பதிவு செய்திருப்பது தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் இதுவே முதல் முறை 

Political Charge மற்றும் Statement-ஐ நிரூபிக்க இதுவரை எப்போதும் இல்லாத வகையில் ஊழல் தடுப்புத் துறை மல்லுக்கட்டுகிறது.. ஊழல் ஒவிப்பை மக்கள் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலை

டாஸ்மாக் ஊழல் வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்தது, விசாரணைக்கு அவர் அளித்த ஒத்துழைப்புக்கு உட்பட்டு!

குற்றம் சாட்டப்பட்ட எண் 7 கார்த்திக் மற்றும் ரமேஷ் (எப்.ஐ.ஆரில் பெயர் இல்லை) கைது செய்யப்பட்டு கோரப்பட்டுள்ளனர். இருவரும் வி.செந்தில்பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளாக கருதப்படுகிறார்கள். 

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் பிரதான குற்றவாளியான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய DVAC முடிவு; அதிரடி நடவடிக்கைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் - விசாரணையில் ஒத்துழைக்க நிபந்தனை.

 டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான ஊழல் முறைகேடு வழக்கில் பிரதான குற்றவாளியான முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான வி. செந்தில் பாலாஜியை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்கூட்டிய ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில், இன்று (ஜூலை 31) காலை DVAC அதிகாரிகள் அவரை கைது செய்ய தயாராக இருந்தனர். இருப்பினும், இந்த நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு, அவரது கைதுக்கு இடைக்கால தடை விதித்து, பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கவும், விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.


டாஸ்மாக்கில் 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மதுபான கொள்முதல், போக்குவரத்து ஒப்பந்தங்கள், பார் உரிமங்கள் வழங்கல் உள்ளிட்ட நிர்வாக முடிவுகளில் பெருமளவு முறைகேடுகள் நடந்ததாக DVAC பதிவு செய்த FIR-இல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் (ஐஏஎஸ்), அவரது முன்னாள் உதவியாளர் பாஸ்கர், 'கரூர் கும்பல்' என்று அழைக்கப்படும் எஸ். கார்த்திக், ரதேஷ் ராஜ் சண்முகவேல் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

'கருநகர் கும்பல்' டாஸ்மாக் பார் உரிமங்களை கட்டுப்படுத்தி, சாதகமானவர்களுக்கு உரிமங்களை வழங்குமாறு அதிகாரிகளை அழுத்தம் கொடுத்ததாகவும், போலி மற்றும் உயர்த்தப்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும் DVAC குற்றம்சாட்டியுள்ளது. மாநில அரசு வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த வழக்கில் அரசுக்கு ரூபாய் .1000 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 29-ம் தேதி DVAC மாநிலம் முழுவதும் 41 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இதனையடுத்து, செந்தில் பாலாஜி முன்கூட்டிய ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜூலை 30-ம் தேதி, நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இந்த வழக்கில் காவலில் விசாரணை அவசியம் என்று கூறி அவரது மனுவை நிராகரித்தார். "குற்றம் சாட்டப்பட்டவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளார்" என்று நீதிபதி குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபால், முகுல் ரோஹத்கி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மல்யா பாக்ச்சி அடங்கிய அமர்வு, இன்று (ஜூலை 31) மதியம் 1 மணிக்கு இந்த மனுவை விசாரித்தது.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவுகள்:

 விசாரணையில் முழுமையாக ஒத்துழைக்கும் நிபந்தனையின் பேரில், செந்தில் பாலாஜியின் கைது தடை செய்யப்படுகிறது".

 பாலாஜி தனது பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.

 FIR No. 05 of 2026, தேதி ஜூலை 8, தடை செய்யப்படுகிறது".

 சாட்சிகளை பாதிக்கவோ, விசாரணையில் தலையிடவோ கூடாது".

நீதிமன்றம், "FIR பெரும்பாலும் ED-யின் மனுவின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்" என்று கேள்வி எழுப்பியது.

செந்தில் பாலாஜி சார்பில், "டாஸ்மாக் ஒரு சுயாதீன அமைப்பு. அமைச்சராக இருந்தபோதும் அதன் செயல்பாடுகளில் நேரடி பங்கு இல்லை. 2021 முதல் 2025 வரை நடந்த நிகழ்வுகளுக்கு நான் பொறுப்பல்ல" என்று வாதிடப்பட்டது. மேலும், "FIR ED-யின் மனுவை முழுமையாக பிரதி செய்துள்ளது" என்றும் குற்றம்சாட்டப்பட்டது. "நான் தலைமறைவாக போகும் அபாயம் இல்லை; காவலில் விசாரணை தேவையில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

மாநில அரசு தரப்பு, "பாலாஜி இன்னும் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், அவரது செல்வாக்கு தொடர்கிறது. 2021 முதல் 2025 வரை அவர் ஆட்சியில் இருந்ததால், எந்த புகாரும் நிலைக்க அனுமதிக்கவில்லை. விசாரணைக்கு இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளது" என்று வாதிட்டது. "அவரது முந்தைய நடவடிக்கைகள் மற்றும் குறைந்தது ஆறு தீவிர வழக்குகள் உள்ள நிலையில், கைது அவசியம்" என்று அரசு தெரிவித்தது.

 உயர்நீதிமன்றம் முன்கூட்டிய ஜாமீனை நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு கைதுக்கு தடை விதித்துள்ளது. "FIR ED-யின் புகாரை அடிப்படையாகக் கொண்டது" என்ற காரணத்தை நீதிமன்றம் முன்வைத்துள்ளது. இது, டாஸ்மாக் ஊழல் வழக்கில் உள்ள சிக்கல்களை காட்டுகிறது. 'கரூர் கும்பல்' டாஸ்மாக்கை கட்டுப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ஒருவர் 'எனக்கு எதுவும் தெரியாது' என்று கூறுவது எந்த அளவிற்கு நம்பகமானது? பாலாஜி மீது ஏற்கனவே குதிரை பேர வழக்கு, மின்மின்மாற்றி ஊழல் வழக்கு உள்ளிட்ட ஆறு தீவிர வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும், நீதிமன்றம் அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது. பாஸ்போர்ட் ஒப்படைப்பு மற்றும் விசாரணையில் ஒத்துழைப்பு போன்ற நிபந்தனைகள் அவரது இயக்கத்தை கட்டுப்படுத்தும். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு, DVAC-யின் விசாரணையில் ஒரு தடையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் முடிவு, எதிர்காலத்தில் இதே போன்ற வழக்குகளில் ஒரு முன்னுதாரணமாக அமையும். பாலாஜி இந்த உத்தரவை மதித்து, விசாரணையில் ஒத்துழைப்பாரா அல்லது மீண்டும் நீதிமன்றத்தை நாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த வழக்கு, டாஸ்மாக் ஊழலின் முழு உண்மையையும் வெளிக்கொணரும் ஒரு சந்தர்ப்பமாக அமைய வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு, செந்தில் பாலாஜியின் கைதுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும், அவர் விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். DVAC தனது விசாரணையை தொடர்ந்து, பாலாஜி மற்றும் பிற குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தும். அடுத்த விசாரணையில் உச்சநீதிமன்றம்  இந்த வழக்கில் என்ன இறுதி முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த வழக்கு, வரும் கால தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...