ஆயிரம் வழக்குகளுக்கும் குறைவாக நடத்தும் மாவட்ட நுகர்வோர் மன்றங்களான ஆணையங்களைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
ஆயிரம் வழக்குகளுக்கும் குறைவாக நடத்தும் மாவட்ட நுகர்வோர் மன்றங்களான ஆணையங்களைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அதனால் நுகர்வோர்களன் நீதி பாதிக்கப்படுமா? என்பது குறித்த பார்வை
குறைந்த வழக்குகள் உள்ள மாநிலங்களில் மாவட்ட நுகர்வோர் ஆணையங்களை கலைத்து, நடுவர்களிடம் வழக்குகளை ஒப்படைக்கலாம்; அதற்கு உயர்நீதிமன்ற ஒப்புதல் அவசியம்.
மொத்தம் 1,000-க்கும் குறைவான நுகர்வோர்களின் வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்கள், சில மாவட்ட நுகர்வோர் ஆணையங்களைக் கலைத்து, அந்த வழக்குகளை பணியில் உள்ள நீதித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு அந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் முன் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்ச்சி மற்றும் வி. மோகனா ஆகியோர்கள் அடங்கிய அமர்வு, கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் தொடர்ச்சியாக இந்த தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவு, நாடு முழுவதுமுள்ள நுகர்வோர் ஆணைய உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் பணி நிலைமைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக (suo motu) முன்வந்து எடுத்த வழக்கின் ஒரு பகுதியாகும். கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில், பல்வேறு மாநிலங்களில் நுகர்வோர் ஆணைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பெரும் வேறுபாடுகள் இருப்பதைக் கண்டறிந்த நீதிமன்றம், அனைத்து மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் ஆணையங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 11, 2026 ஆம் தேதி அன்று, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், முழு அளவிலான நுகர்வோர் ஆணையங்களை பராமரிப்பதற்கு பதிலாக, மாற்று ஏற்பாடுகளைச் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.தற்போதைய உத்தரவில், நீதிமன்றம் பின்வரும் முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்தியுள்ளது:
மொத்தம் 1,000-க்கும் குறைவான நுகர்வோர் வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்கள் மட்டுமே மாவட்ட நுகர்வோர் ஆணையங்களை கலைக்க முடியும். இந்த கலைப்பு நடவடிக்கைக்கு அந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் முன் ஒப்புதல் (prior concurrence) பெறப்பட வேண்டும்.
கலைக்கப்படும் ஆணையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், பணியில் உள்ள நீதித்துறையினரிடம் (serving judicial officers) ஒப்படைக்கப்படும்.
பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி உத்தரவுப் படி அந்தத் தேதியில் நிலுவையிலிருந்த வழக்குகளுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் பதிவாகும் புதிய வழக்குகளுக்கும் இது பொருந்துமென நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. வழக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள அனைத்து வடகிழக்கு மாநிலங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையங்கள், பொதுமக்களுக்கு விரைவான நீதி வழங்கும் நோக்கத்துடன் செயல்பட வேண்டும். ஆனால், வழக்குகளின் எண்ணிக்கை குறைவு என்ற காரணத்திற்காக ஆணையங்களை கலைப்பது, நுகர்வோரின் அடிப்படை உரிமையை பாதிக்குமா எனும் கேள்வியும் எழுகிறது. ஆயிரம் வழக்குகள் என்ற எண்ணிக்கை எந்த அட இது ஒரு தன்னிச்சையான முடிவா? மாற்று ஏற்பாடாக நீதித்துறை அதிகாரிகளிடம் வழக்குகளை ஒப்படைப்பது, அவர்களின் ஏற்கனவே உள்ள பணிச்சுமையை அதிகரிக்கும். நுகர்வோர் வழக்குகளுக்கு தனி நிபுணத்துவம் தேவைப்படும் போது, நுகர்வோர் ஆணைய உறுப்பினர்களின் ஊதிய பிரச்சனையே இந்த வழக்கின் மூல காரணம். ஊதிய சீரமைப்பு செய்யாமல், ஆணையங்களையே கலைக்க அனுமதிப்பது, பிரச்சனைக்கு தீர்வாகுமா .
இந்த உத்தரவின் பேரில், 1,000-க்கும் குறைவான வழக்குகள் உள்ள மாநிலங்கள், தங்கள் மாவட்ட நுகர்வோர் ஆணையங்களை கலைக்கும் முன், உயர்நீதிமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும். இதனால், பல மாநிலங்களில் மாவட்ட நுகர்வோர் ஆணையங்கள் மூடப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையில், மாநில அரசுகள் பிப்ரவரி 11 உத்தரவிற்கு இணங்க தாங்கள் மேற்கொண்ட ஏற்பாடுகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில், ஓய்வு பெற்ற உறுப்பினர்களின் ஊதியப் பிரச்சனைகளும் தொடர்ந்து விசாரணையில் உள்ளன.
இந்தச் செய்தியானது, உச்ச நீதிமன்றத்தின் `In Re: Pay and Allowances of members of the UP State Consumer Disputes Redressal கமிஷன் (Suo Motu) வழக்கில் ஜூலை 26, 2026 ம் தேதி அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் உள்ளது.


கருத்துகள்