முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த மு.க.அழகிரி மகள் கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுதலை

வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த  மு.க.அழகிரி மகள் கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுதலை

சென்னை அடையார் சாஸ்திரி நகரில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் எஸ்.பி.ஐ. வங்கி கிளை இயங்கி வருகிறது.

20-ஆம் தேதி அந்தக் கட்டிடத்தில் உள்ள மின்தூக்கி பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் வங்கிக்கு வந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும்





வாடிக்கையாளர்கள் படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் சிரமம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக வங்கிக் கிளை மேலாளர் ஹர்ஷீன்சிங், கட்டிடப் பராமரிப்பு பொறுப்பில் இருந்த கயல்விழியின் வீட்டு பணியாளரைத் தொடர்புகொண்டு மின்தூக்கியை உடனடியாக சீரமைக்குமாறு கண்டிப்புடன் வலியுறுத்தியதை தையடுத்து கயல்விழி நேரடியாக வங்கிக்கு சென்று வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்து, கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங்கின் கன்னத்தில் அறைந்துள்ளார்.


இந்தச் சம்பவம் மேலாளர் அறையில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, செய்தி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கயல்விழி மீது கொலை மிரட்டல்     உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசார ணையை தொடங்கினர். பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் ஆபாசமாகப் பேசுதல் (296-b), அத்துமீறி நுழைதல் (329-4), தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்துதல் (115-2) மற்றும் குற்றவியல் மிரட்டல் (351-2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் அடையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின் முடிவில் அவர் முறைப்படி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் உள்ள பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனையே உள்ளதால், சட்ட நடைமுறைகளின்படி அவர் உடனடியாக காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும், அனுமதியின்றி சென்னையை விட்டு வெளியேறக் கூடாது என அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, கயல்விழி அழகிரி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையில், காவல்துறை அனுப்பிய சம்மனின் பேரில் கயல்விழி நேற்று மதியம் 1 மணியளவில் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆஜரானவரிடம் சுமார் 3 மணி நேரம் நடத்தப் பட்ட விசாரணையின் போது, சம்பவம் தொடர்பாக அவர் அளித்த விளக்கங்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ காட்சிகள் மூலம் பதிவாகவும் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

விசாரணை முடிவில் கயல்விழி கைது செய்யப்பட்டு, பின்னர் காவல் நிலையத்தில் சுய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விசாரணை நிறைவடைந்ததும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறை நட வடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்  கடந்த கால நிகழ்வு ஒரு பார்வை:திமுக முன்னால் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி மகன் 

முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி மீது கடந்த காலங்களில் பல்வேறு குற்றவியல்  குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குகளில் இருந்து அவர் நீதிமன்றங்களில் வழக்கு வாதம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார்.  ஆட்சி அதிகாரம் தந்த பலம் மற்றும் எதிர்த்து நிற்கும் நபர்கள் பலஹீனம் முன்னால் அமைச்சர் 

தா.கிருஷ்ணன் கொலை வழக்கு 2003ஆம் ஆண்டு  மதுரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மு.க.அழகிரி முதன்மைக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, அப்போதைய அதிமுக அரசால் கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கு ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. போதிய ஆதாரங்கள் இல்லை என 2008-ஆம் ஆண்டு மு.க.அழகிரி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து முற்றிலுமாக விடுவிக்கப்பட்டனர். 

அடுத்ததாக தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த தாக்குதல்  குற்றச்சாட்டு: 2007-ஆம் ஆண்டு, திமுக தலைவர் கலைஞர் மு கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக்கணிப்பை தினகரன் நாளிதழ் வெளியிட்டதில் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக முடிவுகள் இருந்ததால் ஆத்திரமடைந்த மு. க.அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்ததில் குற்றம் சாட்டப்பட்ட மு. க.அழகிரியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 17 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது.

அடுத்து தேர்தல் அதிகாரியான தாசில்தார் மீதான தாக்குதல் வழக்கு 2011 சட்டமன்றத் தேர்தலின் போது, மதுரை மேலூர் அருகே தேர்தல் பிரசாரத்தை வீடியோ எடுத்த உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் காளிமுத்தை அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் தடுத்துத் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீண்ட காலம் வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், பிப்ரவரி மாதம் 2024- ஆம் ஆண்டில் மு.க.அழகிரி உள்ளிட்ட 16 பேரையும் விடுவித்தது. 

அடுத்ததாக நில அபகரிப்பு வழக்கு 2014 ஆம் ஆண்டு  மதுரை சிவரக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் அழகிரிக்குச் சொந்தமான கல்வி அறக்கட்டளைக்கு அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போதைய நிலை: இந்த வழக்கில் அவர் முன்பிணை பெற்றார். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கை எதிர்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் 

தற்போது சென்னை அடையாறில் உள்ள இவரது மகள் கயல்விழிக்கு சொந்தமான கட்டடத்தில் லிப்ட் பழுதானது தொடர்பான தகராறில், எஸ்பிஐ வங்கி மேலாளரை தாக்கியதாக கயல்விழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் 

இதில் பொதுநீதி ...... "முன்பு ஏசு வந்தார், பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திடப் பிறந்தார்  இவர் திருந்த வில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்"......... இந்தப்பாடல் தான் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...