பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி தற்போதைய இந்திய மத்திய அமைச்சரவையில் மத்தியக் கல்வி அமைச்சராகக் (கூடுதல் பொறுப்பு) ஏற்றார்,
நீட்-யுஜி தேர்வு முறைகேடு சர்ச்சையைத் தொடர்ந்து தர்மேந்திரப் பிரதான் பதவியை ராஜினாமா செய்ததால், நேற்று இவருக்கு இக்கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கு முன்பாக, இவர் வகித்து வந்த நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளின் மத்திய அமைச்சராக கல்வித் துறைக்கு கூடுதலாகப் தற்போது பொறுப்பு வகிக்கிறார் கர்நாடகாவின் தார்வாட் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியிலிருந்து
தொடர்ந்து 5 முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கர்நாடகா மாநிலம் விஜயபுரால் 27 நவம்பர் 1962 ல் பிறந்து, ஹூப்பள்ளியில் உள்ள கே.எஸ். கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இளம் வயதிலேயே இராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தில் இணைந்து பணியாற்றிய பிரகலாத் ஜோஷி தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் கர்நாடகாவின் ஹூப்ளி இத்கா மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தைப் பெற்றார். நாடாளுமன்றத்திற்கு 2004: ஆம் ஆண்டு தார்வாட் தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.2009, 2014, 2019, 2024: ஆம் ஆண்டுகளில் அதே தார்வாட் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு ஐந்து முறை வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.2019 ஆம் ஆண்டு முதல் 2024:ஆம் ஆண்டு வரை நரேந்திர மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். இந்தக்காலத்தில் முத்தலாக் தடைச் சட்டம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் போன்ற முக்கிய மசோதாக்கள் நிறைவேற உதவினார்.
ஜூன் மாதம் 2024 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை: நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று கூடுதல் பொறுப்பாக: புதிய மத்திய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
கல்வித்துறை சீர்திருத்தம்: நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகளுக்குப் பிறகு, தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதும் புதிய கல்விக் கொள்கையைத் தொடர்ந்து செயல்படுத்துவதும் இவரது முக்கியப் பணியாகும். 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை 500 ஜிகாவாட்டாக (GW) உயர்த்தும் இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறார்.மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் - மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை
மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி இன்று (26.07.2026) கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். மேலும், நுகர்வோர் விவகாரங்கள், உணவு பொது விநியோகம், புதிய - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய மத்திய அமைச்சகங்களின் பொறுப்புகளையும் அவர் வகிக்கிறார்.
திரு ஜோஷி அமைச்சகத்தின் ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். அதில் அவர் கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள், இதர முன்முயற்சிகளின் செயலாக்கத்தை ஆய்வு செய்தார். மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரியும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
உயர்கல்வித் துறை செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, பள்ளிக் கல்வி - எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு டி.கே. அனில் குமார் ஆகியோரும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.








கருத்துகள்