இளையான்குடி பகுதியில் இரகசியமாகச் செயல்பட்ட போதைப்பொருள் தொழிற்சாலையில், ரூபாய் . 1.50 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) பறிமுதல் செய்யப்பட்டு 9 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் மெத்தம்பெட்டமைன் தயாரிப்பு மொத்தமாக சுமாராக 1.4 கிலோ போதைப்பொருள் மற்றும் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், ஆய்வக உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இளையான்குடியைச் சேர்ந்த ஜாஹிர் உசேன் என்பவரது இரும்புக் கடைசல் லேத் பட்டறையில் ரகசியமாக இந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகம் இயங்கி வந்துள்ளது. சென்னையில் தோல் தொழில் செய்து வந்த ஷாகுல் ஹமீது என்ற நபர் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்து இளையான்குடிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் அவர்கள் கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது,




கருத்துகள்