தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்,
தேர்தல் அறிக்கை 6 சிலிண்டர்கள், வீட்டுக்கு ரேஷன் பொருள் பேருந்தில் எல்லோருக்கும் இலவசம் இன்னும் பல அறிவிப்புகளை தவிர்த்துத் தான் நிதிநிலை காரணம் எனச் சொல்கின்றார்கள் எனபதால் பின்னர் எதிர்பார்க்க வேண்டும்
அரசு எவ்வளவு கடன் வாங்குகிறது எவ்வளவு செலவிடுகிறது என்பததை எல்லாம் அறிந்து கொள்ளும் நேரமிது அது போக கடந்த திராவிடக் கட்சி ஆட்சி ஊழல் பட்ஜெட்டிலிருந்து இது எப்படி வேறுபடுகின்றது என்பதைக் காட்டும் நிகழ்விது
அது போக காங்கிரஸ்,, கம்யூனிஸ்டுகள், விசிக கூட்டு மந்திரி சபை என்பதால் வழக்கமாக எந்த பட்ஜெட் என்றாலும் காரசாரமில்லை எனச் சொல்லும் சில கும்பல்களின் கூடாட்சியில் அவியல் எப்படி இருக்கின்றது என்பதையும் பார்க்கவேண்டும், வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின்னர் வரும் முதல் நிதிநிலை அறிக்கை.
இலவச மடிக்கணினி, திருமண நிதி உதவி, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அனைத்தும் கடந்த அதிமுக, திமுக அரசுகளின் திட்டங்களின் தொடர்ச்சியே தவிர, இந்த அரசின் புதிய சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் எந்தவிதமான புதுமையும் இடம்பெறவில்லை. என்ற குறை இருக்கிறது,
தமிழ்நாட்டின் நிதிநிலை ஏற்கனவே கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கடன் சுமை அதிகரித்து வரும் இந்தச் சூழலில், மாநிலத்தின் வருவாயை உயர்த்துவதற்கான வலுவான பொருளாதாரத் திட்டங்கள், தொழில் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு இந்த பட்ஜெட்டில் போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை,
இதனால் எதிர்கால தலைமுறையின் மீது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் வகையிலான தவெக அரசின் நிதி நிர்வாக அணுகுமுறை தமிழகத்தின் வளர்ச்சிக்கு உகந்ததாக அமையாது என்மது நிதி வல்லுனர் கருத்து நிதி நிலை அறிக்கை ஊழல் ஒழிப்பு திட்டம் மற்றும் லோக் ஆயுக்தா சிர்திருத்தம் எதுவும் வரவில்லை, என்பது பலருக்கு வருத்தம், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்துகளுடன், தமிழ்நாடு அரசின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான திருத்திய முதல் நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது பட்ஜெட் தொடர்பான விரிவான பார்வை இதில் பார்க்கலாம்
ரூபாய் .50 கோடியில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைவது சிறப்பு,
தொழிலாளர் நலனுக்கு ரூபாய் .2022 கோடி ஒதுக்கப்படும் எனவும்
AI துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்; 5 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
ரூபாய் .150 கோடியில் 20,000 இளைஞர்களுக்கு வெற்றி திறன் பயிற்சி திட்டம்,
25,000 வாகன மெக்கானிக்குகளை உருவாக்க ரூபாய் 3 கோடியில் திட்டம்,
5 புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
உயர் கல்வித் துறைக்கு ரூபாய் 8393 கோடி ஒதுக்கீடு
300 மானவர்களுடன் மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும், முக்கிய நிதி விவரங்கள் மொத்த வருவாய் வரவு: ரூபாய் 3,44,575 கோடி.மாநிலத்தின் சொந்த வருவாய் பங்கு: மொத்த வருவாயில் 74.67 சதவீதம் .மத்திய அரசுப் பங்கு மற்றும் மானியங்கள்: 25.33 சதவீதம் மொத்த செலவினம் ரூபாய் 4,67,264 கோடி.மூலதனச் செலவு ரூபாய் 59,562 கோடி.நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3 சதவீதமாகக் குறைக்க இலக்கு.மாநிலத்தின் மொத்தக் கடன்: பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து ரூபாய் 13.18 லட்சம் கோடி என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பள்ளி மற்றும் உயர் கல்வித் துறை பள்ளிக் கல்வி மேம்பாட்டிற்காக இந்த பட்ஜெட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பெரும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுளது, ரூபாய் 44,527 கோடி.உயர் கல்வித் துறை ஒதுக்கீடு: ரூபாய் 8,393 கோடி.வெற்றி லேப்டாப் திட்டம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூபாய் 2,000 கோடி.புதிய பயணம், புதிய வேகம் திட்டம்: 5.3 லட்சம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கூடிய புது வகை மிதிவண்டிகள் வழங்க ரூபாய் 277 கோடி.பள்ளி, 3,734 அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க ரூபாய் 300 கோடி (மொத்த திட்ட மதிப்பு ரூபாய் 2,132 கோடி சூப்பர் கிளீன், முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ரூபாய் 139 கோடி.கற்றலில் முதலிடம் தமிழ்நாடு திட்டம்: பள்ளிப் பாடத்திட்ட சீர்திருத்தங்களுக்காக ரூபாய் 25 கோடி.பெருந்தலைவர் காமராசர் மாதிரிப் பள்ளிகள்: 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நவீன குடியிருப்புப் பள்ளிகளின் உள்கட்டமைப்பிற்கு ரூபாய் 125 கோடி. மதுரையில் 300 மாணவர்கள் சேர்க்கை வசதியுடன் புதிய சட்டக் கல்லூரி, வேளாண்மை மற்றும் இதர துறை ஒதுக்கீடுகள் முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கான தற்காலிகத் துறைவாரி ஒதுக்கீடுகள்:நகர்ப்புற வளர்ச்சி: ரூபாய் 35,773 கோடி.ஊரக வளர்ச்சித் துறை: ரூபாய் 28,687 கோடி.மக்கள் நல்வாழ்வு (சுகாதாரம்): ரூபாய் 22,090 கோடி.
நெடுஞ்சாலைகள் துறை: ரூபாய் 21,132 கோடி ஒதுக்கீடு .செய்யப்பட்டுள்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூபாய் .708 கோடி நிதி ஒதுக்கீடு. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3,000 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு நடத்தப்படும் எனவும்,அறநிலையத்துறை வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் ரூபாய் .708 கோடி ஒதுக்கீடு. 1000 ஆண்டுகள் பழமையான 213 கோயில்கள் புனரமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 3,000 கோயில்கள் புதுப்பிக்கப்படும். 250 கோயில் குளங்கள் மற்றும் 75 தேர்கள் சீரமைக்கப்படும். ஆனால் ஆலயத்தில் வரும் செலவினங்கள் மட்டுமே இவை ஆலயத்தில் வரும் வருவாய் விபரங்கள் குறித்து தெளிவு படுத்த வில்லை தவெக அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட் என்பது, அதிமுகவைக் கைப்பற்ற ஜெயலலிதா கொள்கை முரனாக 2021-ல் அதிமுகவை கொள்கை ரீதியாக தோற்கடித்தார் எடப்பாடி கே.பழனிச்சாமி.
2026-ல் ஊழல் ஒரே குடும்பத் திராவிடக் கட்சிகளிடமிருந்து காப்பாற்ற உதயமான புதிய தவெகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள், அரசியல் ஏதுமறியாப் பிள்ளைகள், இளைஞர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்.ஊழல் ஒழிப்பு ஏட்டளவில் தான் உள்ளது,
சீர்மிகு தமிழ்நாட்டைச் சிதைத்து விட்டு ஊழலால் தூக்கி எறியப்பட்டு விட்டது திமுக. தற்போது தவெக நிதிநிலை அறிக்கை என்பது முழுக்க சிறுபான்மையினரின் மற்றும் பட்டியல் சமூக வளர்ச்சி, மற்றும் வாக்களித்த பெண்கள் மற்றும் மாணவர்கள் திட்டங்களுக்கு மட்டுமே முன்னுறிமை தருகிறது நிதிநிலை அறிக்கை. என்பதே உண்மை.




















































































கருத்துகள்