மத்திய அமைச்சரவைச் செயலாளரான டி.வி. சோமநாதன் IAS பதவிக் காலத்தை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டது
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மத்திய அமைச்சரவைச் செயலாளராக டி.வி. சோமநாதன் பணியாற்றுகிறார். இதேபோல சிக்கிம் ஐஏஎஸ் அதிகாரியான கோவிந்த் மோகன் மத்திய உள்துறைச் செயலாளராக பணியாற்றுகிறார். இவ்விரு அதிகாரிகளின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிற நிலையில், டி.வி.சோமநாதன், கோவிந்த் மோகன் இருவரின் பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தப் பதவி நீட்டிப்பு ஓராண்டு காலத்துக்கு அளிக்கப்பட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது,
இந்தியாவின் மிக உயரிய நிர்வாகப் பதவியான மத்திய அமைச்சரவைச் செயலாளர் எனும் Cabinet Secretary யாகப் பணியாற்றும் புகழ்பெற்ற IAS ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், 1987ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடியவிருந்த இவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு 30 ஆகஸ்ட் 2027 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்தியாவின் 33வது அமைச்சரவைச் செயலாளராகவும், இதற்கு முன்பு, மத்திய அரசின் நிதித்துறை (செலவினத் துறை) செயலாளராகத் திறம்பட பணியாற்றி பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகவும், கூடுதல் செயலாளராகவும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். வாஷிங்டன் டிசியில் உள்ள உலக வங்கிக் குழுமத்தில் இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலை (M.A.) பட்டமும் பெற்ற தகுதிபெற்ற பட்டயக் கணக்காளர், செலவுக் கணக்காளர் மற்றும் நிறுவனச் செயலாளர் படிப்புகளையும் முடித்தவராவார்.



கருத்துகள்