ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒப்பந்ததாரர் இரவிசந்திரன், வெள்ளகோவில் ஒன்றியப் பள்ளி ஒன்றில் சமையலறை அமைத்தல்
மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைத்து டேங்க் கட்டுதல் உள்ளிட்ட 4 பணிகளை டெண்டர் எடுத்திருந்தார், இந்தப் பணிகளுக்கான பில் தொகையை விடுவிப்பதற்காக, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய துணை வடடார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் ரூபாய் 20,000 லஞ்சமாகத் தருமாறு ஒப்பந்ததாரரின் சூப்பர்வைசர் நந்தகுமாரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் இரவிசந்திரன், இது குறித்து திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தார். ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுறுத்தலின் படி, ஒப்பந்ததாரரின் சூப்பர்வைசர் நந்தகுமார் அரசு சாட்சிகள் முன்னிலையில் இரசாயனம் தடவிய ரூபாய் 20,000 பணத்தை வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் இரவிசந்திரன் தலைமையிலான ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமாரை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். பணம் பறிமுதல் செய்து பின் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் சேர்த்தனர்.

கருத்துகள்