பிரசாந்த் கிஷோர் இந்திய அரசியலின் மிக முக்கியமான முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும், தற்போதைய தீவிர
அரசியல்வாதியும் மற்றும் ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனர் பேச்சுவழக்கில் 'பிகே' PK என அழைக்கப்படுபவர், ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற பிகார் மாநில பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 1995 ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட பாங்கிபூர் தொகுதியில், ஜன் சூராஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர், 64,151 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் நீரஜ் குமாரை விட 19,324 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இது ஜன் சூராஜ் கட்சியின் முதல் வெற்றி: கடந்த 2025 ஆம் ஆண்டு பிஹார் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத ஜன் சூராஜ் கட்சிக்கு, பிரசாந்த் கிஷோரின் இந்த வெற்றி ஒரு திருப்புமுனையாகவும் அக்கட்சியின் முதல் தேர்தல் வெற்றியாகவும் அமைந்தது. பிஹார் முழுவதும் சுமார் 3,000 கி.மீ தூரம் "ஜன் சூராஜ் பாதயாத்திரை" மேற்கொண்ட பின் அக்டோபர் மாதம் 2, ஆம் தேதி 2024 ஆம் ஆண்டில் அரசியல் கட்சியாக முறைப்படி அறிவித்தார். தேர்தல் வியூக வகுப்பாளராகப் (2014 ஆம் ஆண்டு முதல் - 2021ஆம் ஆண்டு வரை )நேரடி அரசியலில் இறங்குவதற்கு முன்பு, இந்தியாவின் பல்வேறு முன்னணி அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் தேர்தல் வெற்றிக்கு பின்னணியில் இருந்து வியூகங்களை வகுத்துக் கொடுத்து புகழ்பெற்றார். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் 'சாய் பே சர்ச்சா' போன்ற புகழ்பெற்ற பிரச்சாரங்களை வடிவமைத்து அக்கட்சி ஆட்சியைப் பிடிக்க உதவினார். பிஹாரில் ஜேடியு-ஆர்ஜேடி கூட்டணிக்கு வியூகம் அமைத்து நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராகப் பணியாற்ற வழி செய்தார். தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இவரது வியூகங்கள் முக்கியப் பங்காற்றின.ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆகியோரின் பிரம்மாண்ட வெற்றிகளுக்குப் பின்னால் பிகே-வின் தேர்தல் வியூகங்கள் இருந்தன.2021 ஆம் ஆண்டு தேர்தல்களுக்குப் பிறகு, இனிமேல் தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்படப் போவதில்லை என்றும், மக்கள் நலனுக்காக நேரடியாகப் பணியாற்றப் போவதாகவும் கூறி அந்தப் பணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். மார்ச் 20, 1977 ஆம் தேதி அன்று பிஹார் மாநிலத்தின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் பிறந்து, லக்னோ பல்கலைக்கழகத்தில் பயின்றவர், ஐக்கிய நாடுகள் சபையின் (UNICEF) கீழ் பொதுச் சுகாதாரத் திட்டங்கள ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமூகக் கொள்கைத் தலைவராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.தற்போது பிகார் சட்டமன்ற உறுப்பினராகத் தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள பிரசாந்த் கிஷோர்பாங்கிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், 'ஜன் சுராஜ்' அமைப்பின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறுகையில்,
"சம்ராட் சௌத்ரியின் குணாதிசயமும் நற்பெயரும் ஏற்கனவே பொதுவெளியில் அறியப்பட்டவை. குற்றப் பின்னணி கொண்ட ஒருவரை பீஹாரின் முதலமைச்சராக நியமித்தால், மாநிலம் முன்னேற முடியாது. எங்கள் போராட்டம் எந்தவொரு தனிநபருக்கும் எதிரானதல்ல. பாஜக மற்றும் என்டிஏ கூட்டணிக்குத் தேவையான பெரும்பான்மை பலம் உள்ளது; எனவே, முதலமைச்சர் அந்தக் கூட்டணியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்.
நாங்கள் ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே முன்வைக்கிறோம். பீஹார் மக்களும், குறிப்பாக பங்கிபூர் மக்களும், பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றனர்:
பீஹாரின் முதலமைச்சராகத் திறமையான மற்றும் நேர்மையான ஒருவரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் பீஹார் மக்கள் தாங்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்ள முடியும்; அத்துடன், எங்கள் குழந்தைகளுக்குத் தரமான கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்க வழிவகுக்கும்".
இந்த பிஹார் இடைத் தேர்தல் தோல்வி நிறைய கேள்விகளை எழுப்புகிறது. இதற்கு முன்னர் நடந்த பிஹார் சட்டசபை தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதியில்தான் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தொகுதி.
சுமார் 35 ஆண்டுகளாக, தற்போது பாஜகவின் தேசியத் தலைவராக உள்ள நிதின் நபின், பாங்கிபூர் தொகுதியுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்திருந்தார். அவருக்கு முன்னதாக, இத்தொகுதி அவரது தந்தையும் மூத்த பாஜக தலைவருமான நபின் கிஷோர் பிரசாத் சின்ஹாவுடன் தொடர்புடையதாக இருந்தது. இத்தொகுதி வெறும் ஒரு பாஜக இடமாக மட்டுமல்லாமல், பாட்னாவின் மையப்பகுதியில் அக்கட்சியின் நகர்ப்புற ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கும் ஒரு குடும்பக் கோட்டையாகவும் திகழ்ந்தது.
தற்போது முதன் முறையாக பாஜக இந்த தொகுதியில் தோல்வியடைந்துள்ளது.

கருத்துகள்