முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் CBI புதிய FIR பதிவு விசாரணை தீவிரம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: CBI விசாரணைக்கு புதிய FIR பதிவானது, ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில்,


சென்னை காவல்துறையிடமிருந்து விசாரணையை CBI ஏற்றுக்கொண்டது. அட்டவணை பட்டியல் சமூகத்தில் சென்னை பகுதியில் தலைவராக இருந்த  ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக 05.ஜூலை .2024 ஆம் தேதி K-1 செம்பியம் காவல் நிலையத்தில் குற்ற எண்.293/2024 ஆக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையில் நடந்த குறைபாடுகளை சுட்டிக்காட்டி விசாரணையை CBI-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் 24 செப்டம்பர் .2025 ஆம் தேதி உத்தரவிட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் SLP (Crl.) No.15897/2025  மேல்முறையீட்டு வழக்கு அப்போதிருந்த திமுக அரசால் தொடரப்பட்ட நிலையில் CBI விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது .

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு CBI விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் 

22.ஜூலை.2026 ஆம் தேதி  உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் தொடர்ச்சியாக, CBI விசாரணை நடைமுறைக்கு வந்தது.

06.ஆகஸ்ட் .2026 ஆம் தேதி சிபிஐ சார்பாக புதிய FIR பதிவானது,  CBI/STB, சென்னை காவல் நிலையத்தில்: FIR குற்ற எண்.: RC0582026S0009, என்ற புதிதாகப் பதிவு செய்யப்பட்டதில்: BNS Section 191(2), BNS Section 191(3), BNS Section 118(1), BNS Section 103, BNS Section 351(3), ஆகிய பிரிவுகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

FIR-ல், 05.07.2024 அன்று ஆம்ஸ்ட்ராங் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் CBI தனது விசாரணையை தொடங்கி சம்மந்தப்பட்ட நபர்களிடம் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, பெரம்பூரில் சம்பவம் நடந்த நிகழ்விடத்திற்கே நேரில் சென்று சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.செம்பியம் காவல் நிலையத்தினரிடமிருந்து வழக்கு தொடர்பாக விசாரித்து சேகரித்த அனைத்துக் ஆவணங்கள், வாக்குமூலங்கள் மற்றும் சாட்சியப் பதிவுகளைச் சிபிஐ அதிகாரிகள் பெற்று ஆய்வு செய்து வருகின்றனர்.  இக்கொலை வழக்கின் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தவும், சம்பவத்தின் போது உடனடியாகச் செயல்பட்ட நபர்கள் மற்றும் பின்னணியிலிருந்த முக்கியச் சதியாளர்களைக் கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது. படுகொலைக்கான உண்மையான பின்னணி என்ன என்பதைக் கண்டறியும் கோணத்தில் சிபிஐ அதிகாரிகளின் இந்த விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திய நிலையில் தற்போது வழக்கு விசாரணை வேகமெடுத்துள்ளது.


கே. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு காவல்துறையின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாகத் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. மாநிலக் காவல்துறையின் குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்ட நிலையில், சிபிஐ புதிய முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்துள்ளது. இந்த மாற்றம்.


சட்டப் போராட்டமும் அதன்படி நீதிமன்ற உத்தரவுகளையும் காணலாம் முதலில் 2025 செப்டம்பர் 24: ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் (வழக்கு எண்: Crl.O.P No. 18671/2025 மற்றும் Crl.M.P. No. 12440/2025) வழங்கிய தீர்ப்பின் மூலம், காவல்துறை குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டு, விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

2026 ஜூலை 22 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு (SLP (Crl) No. 15897/2025). உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடியானது. மாநிலக் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதால் உருவான சட்ட ரீதியான வெற்றிடத்தை நிரப்ப, சிபிஐ உடனடியாக விசாரணையை ஏற்கும் சூழல் வந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சிபிஐ (STB, Chennai) புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது. IPC-க்கு மாற்றாக அமலுக்கு வந்துள்ள புதிய சட்டமான BNS 2023-ன் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,

விவரம்:- வழக்கு எண் (FIR No) RC0582026S0009 பதிவு தேதி மற்றும் நேரம் 06/08/2026, மாலை 17:30 மணி விசாரணைப் பிரிவு CBI, STB (Special Task Branch), Chennai பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகள் (BNS 2023) 191(2), 191(3), 118(1), 103, 351(3) விசாரணை அதிகாரி ஆர். ரவி (R. Ravi), கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர்..


புகார்தாரரின் வாக்குமூலம் (Crime Narrative - Informant's Version) சிபிஐ-யின் புதிய FIR மற்றும் மூல ஆதாரங்களின்படி, சம்பவத்தன்று நடந்த நிகழ்வுகளின் விரிவான விவரங்கள்:

சம்பவ இடம் மற்றும் நேரம்: 05/07/2024 அன்று இரவு சுமார் 07:00 மணியளவில், பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் ஆம்ஸ்ட்ராங்கின் புதிய வீடு கட்டப்படும் இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

நேரில் கண்ட சாட்சிகள்: ஆம்ஸ்ட்ராங் சகோதரர் வீரமணி, ரியல் எஸ்டேட் புரோக்கர் பாலாஜி, ஓட்டுநர் அப்துல் கனி மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களான மோகன்ராஜ், சுரேஷ் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது.

சுமார் 8 பேர் கொண்ட கும்பல் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியது. இச்சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரைத் தடுக்க முயன்ற வீரமணி மற்றும் அப்துல் கனி ஆகியோருக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. பாலாஜி என்பவர் பள்ளத்தில் தள்ளப்பட்டதில் அவருக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆம்ஸ்ட்ராங் உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த பாலாஜி அருள் தாஸ் மருத்துவமனையிலும் வீரமணி சென் மருத்துவமனையிலும்  அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வழக்கிற்கான முதன்மை புகாரை வீரமணி அளிக்க, அதனை அவரது மகன் வி. மோகன் பிரபாகரன் எழுதிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, சிபிஐ தற்போது மாநிலக் காவல்துறை கவனிக்கத் தவறிய அல்லது மறைத்ததாகக் கூறப்படும் கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது:

 கொலை நடந்த இடத்திலிருந்து செம்பியம் காவல் நிலையம் வெறும் 200 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது. இவ்வளவு அருகாமையில் ஒரு கொலை நடந்துள்ளது, ஆருத்ரா கோல்ட் மற்றும் அரசியல் தொடர்பு: சுமார் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஆம்ஸ்ட்ராங் குரல் கொடுத்தார் என்பதும் இதற்கிடையில், இந்த மோசடி பணத்தை கையாள்வது தொடர்பாக திண்டுக்கல் மோகன்ராம் மற்றும் பாம் சரவணன் போன்ற நபர்கள் மூலமாகப் பெரிய அளவிலான பேரம் பேசப்பட்டதாகப் புகார்களும் எழுந்துள்ளன.  அரசியல் முக்கிய நபர்கள் பெயர்கள் அரசியல் ரீதியான விமர்சனங்களில் தொடர்ந்து அடிபடுகின்றன.

 காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட திருவேங்கடம், சீசிங் ராஜா மற்றும் "காக்கா தோப்பு" பாலாஜி ஆகியோரின் என்கவுண்டர்கள், உண்மையான குற்றவாளிகளைக் காப்பதற்கான ஒரு முயற்சியோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.

சிபிஐ அதிகாரப்பூர்வமாக RC0582026S0009 என்ற எண்ணில் புதிய வழக்குப் பதிவு செய்திருப்பது, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் நீதியின் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலக் காவல்துறையின் விசாரணையில் விடுபட்ட அரசியல் சதி மற்றும் நிழல் உலகத் தொடர்புகளை சிபிஐ வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மறு-விசாரணை தமிழ்நாடு அரசியலில் முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தும் பதிவானதன் அடிப்படையில் சந்தேகமில்லை.எஎன்பதே பலரும் கூறும் தகவல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...