கோயம்பத்தூர் , துடியலூர். 2016, செப்டம்பர் 22. இரவு மணி 9.30.
36 வயது இளைஞர் C.சசிக்குமார். இந்து முன்னணி அமைப்பின் துடிப்பான செய்தித் தொடர்பாளர். அன்றைய வேலைகளை முடித்து விட்டு, தன் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
சுப்பிரமணியம்பாளையம் விநாயகர் கோவில் அருகே திருப்பத்தில், திடீரென இரண்டு பைக்குகள் அவரை வழிமறித்தன. இறங்கிய 4 பேர் கையில் அரிவாள் மின்னியது. கண்மூடி கண் திறப்பதற்குள் சரமாரியாக வெட்டினார்கள்.
இரத்த வெள்ளத்தில் சரிந்த சசிக்குமார், மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே உயிரை விட்டார்.
*ஒரு கொலை... ஆறு மாவட்டங்களில் தீப்பற்றியது!*
மறுநாள் கோயம்பத்தூர் எரிந்தது. பஸ்கள் எரிப்பு, கடைகள் உடைப்பு, கலவரம். 6 மாவட்டங்களில் பதற்றம். 300-க்கும் மேற்பட்ட FIR-கள் பதிவானது. தமிழ்நாடே திரும்பிப் பார்த்தது.
*விசாரணை - மூன்று கட்ட பயணம்*
_கட்டம் 1:_ துடியலூர் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்தது, ஆனால் துப்பு கிடைக்கவில்லை.
_கட்டம் 2:_ அரசு CB-CID-க்கு மாற்றியது. சந்தேக நபர்கள் சதாம் உசேன், முபாரக் போஸ்டர்கள் தென் இந்தியா முழுவதும் ஒட்டப்பட்டன. அபு தாகிர் கைது செய்யப்பட்டார்.
_கட்டம் 3:_ 22.01.2018. திருப்புமுனை. மத்திய அரசு வழக்கை NIA-விடம் ஒப்படைத்தது.
NIA கண்டுபிடித்த உண்மை அதிர்ச்சி தந்தது - இது தனிப்பட்ட பகை அல்ல. தடை செய்யப்பட்ட PFI அமைப்பின் சதித்திட்டம். இந்து அமைப்பினரை மிரட்ட, மக்களிடையே அச்சத்தை உருவாக்க திட்டமிட்ட படுகொலை.
NIA 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றவாளி சுபேர் தன் சொத்தை தாய்க்கு தானமாக எழுதி தப்பிக்க பார்த்ததை கூட 2024-ல் கண்டுபிடித்து பறிமுதல் செய்தது.
*7 வருட விசாரணை... இன்று நீதி!*
பூந்தமல்லி NIA சிறப்பு நீதிமன்றத்தில் 2019 முதல் வழக்கு நடந்தது. 75 அரசு சாட்சிகள், 2 எதிர்தரப்பு சாட்சிகள்.
இன்று, 25.09.2026 வெள்ளிக்கிழமை, நீதிபதி மலர்விழி தீர்ப்பை வாசித்தார்.
> "குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சதாம் உசேன், சுபேர், முபாரக், முகமது ரஃபீக்குல் ஹசன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.30,000 அபராதம். 5-வது நபர் அபு தாகிர் விடுதலை."
IPC 302 கொலை, 120B சதி, 153A மதக்கலவர தூண்டுதல், UAPA 16,18,20 பயங்கரவாத பிரிவுகளில் தண்டனை.
*இந்த தீர்ப்பு ஏன் முக்கியம்?*
PFI அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பிறகு, அந்த அமைப்பினருக்கு NIA வாங்கிக் கொடுத்த *முதல் தண்டனை தீர்ப்பு இதுதான்.*
10 வருடங்களுக்கு பிறகு, சசிக்குமார் குடும்பத்திற்கு இன்று தான் நீதி கிடைத்துள்ளது.



கருத்துகள்