தமிழ்நாடு தலைமைச் செயலகம் கடந்து வந்த பாதைகள் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ்,
-மாதிரி அமைப்பு -'புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும்' என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்தார். தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் 21.76 ஏக்கர் நிலத்தை செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி G.O.(Ms) No.564 அரசாணையை வெளியிட்டு ஒதுகீடு செய்து நடவடிக்கையை அரசு தொடங்கியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் மற்றும் பெரும்பாலான தவெகவின் எதிர் அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்கின்றன. புதிய தலைமைச் செயலகம் தேவை என்ற விவாதம் இப்போது தொடங்கியதல்ல.
சென்னையின் பறந்து விரிந்த கடற்கரையில் கல்கத்தா தலைமையிடமான ஆங்கில பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக மையத்தை பொதுஆண்டு 1639-ல் இப்பகுதியை நிர்வகித்து வந்த தாமர்ல வெங்கடப்ப நாயக்கரிடமிருந்து, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரி பிரான்சிஸ் டே வர்த்தக மையம் அமைப்பதற்கான நிலத்தைப் பெற்றார். அவரது மேலதிகாரியான ஆண்ட்ரூ கோகனின் ஒப்புதலைத் தொடர்ந்து இங்கு கம்பெனியின் வர்த்தக மையத்தையும் கோட்டையை அகழி கொத்தளத்தையும் அமைக்கும் பணிகள் தொடங்க 1640 ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் கட்டக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 'புனித ஜார்ஜ் ' அல்லது Fort St. George னப் பெயரிடப்பட்டது.
பொது ஆண்டு 3-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமானியப் பேரரசின் போர் வீரர் செயின்ட் ஜார்ஜ். கிறிஸ்தவ நம்பிக்கையைக் கைவிட மறுத்ததால் பேரரசர் டயோக்ளீஷியன் காலத்தில் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் ஏப்ரல் 23-ஆம் நாள், 'செயின்ட் ஜார்ஜ் தினம்' என ஆங்கிலக் கிறிஸ்தவர் மரபில் கடைப்பிடிக்கப்படுகிறது. அவர் இங்கிலாந்தின் பாதுகாவலர் புனிதராகப் போற்றப்பட்டார். ஆகவே அவரது பெயர்,ஆரம்பத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகத்தை நிர்வகிக்க பொருட்களையும் பாதுகாப்பதற்கான அரண் கொண்ட வர்த்தக மையமாக உருவான புனித ஜார்ஜ் கோட்டை, காலப்போக்கில் விரிவுபடுத்தப்பட்டது. கம்பெனியின் வர்த்தக மையம் என்ற நிலையிலிருந்து நிர்வாக மற்றும் அரசியல் அதிகார மையமாகவும், பின்னர் மதராஸ் மாகாணத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும் வளர்ந்தது.
இந்தியா சுதந்திரமடைந்து சென்னை மாநிலம், பின்னர் தமிழ்நாடு என வரலாறு மாறிய போதிலும், தலைமைச் செயலகமும் சட்டப்பேரவையும் செயல்படும் தமிழ்நாடு அரசின் அதிகார மையமாக புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாறு தான் நான்கு நூற்றாண்டுகளை நெருங்குகிறது; இன்று நாம் பார்க்கும் தலைமைச் செயலகக் கட்டடங்கள் அனைத்துக்கும் 400 வயது அல்ல.
இந்தக் கோட்டை வளாகம் ஒரே நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத் தொகுதியல்ல. 17-ஆம் நூற்றாண்டில் தொடங்கி அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் புதிய கட்டடங்கள் சேர்க்கப்பட்டும், பழையநிலை மாற்றியமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டு 1921 ஆம் ஆண்டு முதல் புனித ஜார்ஜ் கோட்டையில் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தின் பயணம் புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கியது. கோட்டையிலிருந்த மன்ற அரங்கில் சட்டமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றன.
நீதிக்கட்சி ஆட்சி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட மதராஸ் மாகாணத்தின் முக்கிய அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுடன் இந்த அரங்கத்தின் வரலாறும் உண்டு 1937-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக செனட் மண்டபத்திலும், பின்னர் 1938–1939 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்திலும் சட்டமன்றம் கூடிய போது அது 'Government House Banqueting Hall' என அழைக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்து 1952 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு அன்றைய மெட்ராஸ் மாநில சட்டப்பேரவையில் 375 உறுப்பினர்கள் இருந்தனர். புனித ஜார்ஜ் கோட்டையின் பழைய அரங்கில் சுமார் 260 உறுப்பினர்களுக்கே இடமிருந்ததால், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப்பேரவை அரங்கம் கட்டப்பட்டது.
1952 ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி சென்னை மாநில ஆளுநர் ஸ்ரீ பிரகாஷா புதிய அரங்கத்தைத் திறந்து வைத்தார். மே 3-ஆம் தேதி முதல் அங்கு சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கின.1952 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் மாநில சட்டப்பேரவை இந்த அரங்கில் செயல்பட்டது. பின்னர் இந்த அரங்கம் 'பாலர் அரங்கம்' என் அழைக்கப்பட்டு
புதுப்பிக்கப்பட்ட இந்த அரங்கம், திரைப்பட நகைச்சுவைக் கலைஞர் என்.எஸ். கிருஷ்ணனின் பெயரில் 'கலைவாணர் அரங்கம்' என அழைக்கப்பட்டது. 1974 ஜனவரி 29-ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி திறந்து வைத்தார்.
1956-ஆம் ஆண்டில் மொழிவாரி மாநில மறுசீரமைப்புக்குப் பிறகு தமிழ்நாடு மாநிலத்தின் எல்லைகள் மாறி அமைந்தது. சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் அரண்மூர் அரண்மனை (Arranmore Palace) சட்டப்பேரவை அமர்வு நடைபெற்றது. அது தற்போது இரண்டாவது ஆளுனர் தலைமையிடமாக உள்ளது,
ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி அவையில், கோடைகாலம் உதகமணடலம் எனும் ஊட்டியிலா சட்டப்பேரவை அமர்வுகளை நடத்துவது மாற்ற 1957-ஆம் ஆண்டில் சட்டப்பேரவை மெட்ராஸ் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்குத் திரும்பிய இரண்டு ஆண்டுகளிலேயே மீண்டும் சென்னைக்கு வெளியே கூடியது.
1959: ஆம் ஆண்டு கு.காமராஜர் காங்கிரஸ் ஆட்சியில் ஏப்ரல் மாதம் கோடைகாலம் சட்டப்பேரவை உதகமண்டலம் சென்றது. அரன்மோர் அரண்மனையில் இருந்த L L (Ball Room) சட்டப்பேரவை அரங்கமானது. சுமார் 180 உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டதுடன், ஆளுநருக்கான தனி இடமும் பார்வையாளர்களுக்கான அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டன. 1959 ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 30 வரை இங்கு சட்டப்பேரவை அமர்வு நடைபெற்றது. 1975-ல் திமுக ஆட்சியில் புதிய பல தளங்களுடனான புனித ஜார்ஜ் கோட்டையில் நிர்வாகக் கட்டிடம் 'நாமக்கல் கவிஞர் மாளிகை' கடடப்பட்டது. சென்னை கடுமையான குடிநீர் பஞ்சத்தை எதிர்கொண்ட 1981ஆம் ஆண்டு முதலா 1982 ஆம் ஆண்டு காலத்தில், தமிழ்நாடு தலைநகரை திருச்சிராப்பள்ளிக்கு மாற்றும் ஆலோசனையை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்வைத்தார்.
மாநிலத்தின் மத்தியப் பகுதியில் புதிய தலைநகரை உருவாக்குவது குறித்த மிகப்பெரிய அரசியல் விவாதமும் எதிர்ப்பும் கிளம்பியது. இறுதியாக செயல்பாட்டுக்கு வரவில்லை.2002-ஆம் ஆண்டில் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அரசு, சென்னைக்கு வெளியே சிறுதாவூர் பங்களா உள்ள மாமல்லபுரம் அருகில் சுமார் 2,000 ஏக்கரில் புதிய நிர்வாக நகரத்தை உருவாக்கும் யோசனையை முன்வைத்தது. அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி அதிகாரிகளுக்கான குடியிருப்புகளையும் உள்ளடக்கிய பெரிய நிர்வாக நகரமாக உருவாக்கும் முயற்சி அடுத்த கட்டத்துக்குச் செல்லவில்லை. 2003-ஆம் ஆண்டில் புதிய தலைமைச் செயலகத்தை சென்னையிலேயே அமைக்க முதலவர் செல்வி ஜெ.ஜெயலலிதா முடிவு செய்தார்.
அதற்காக மெரினா கடற்கரையில் அமைந்த ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.ஆனால் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவுக்கு மாணவிகள், முன்னாள் மாணவிகள் உள்ளிட்ட பல தரப்பினரிடமிருந்து திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. ராணி மேரி கல்லூரி இடம் தொடர்பாக மட்டும் 9 ரிட் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
மாணவிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கல்லூரிக்கு சென்றதும், கைது செய்யப்பட்டதும் இந்த விவகாரம் பெரிய அரசியல் பிரச்சினையாக மாறியது.
இந்தக் காலகட்டத்தில் தான் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துடனும் அதிமுக செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அரசு நேரடியாக மோதியது. 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிக்கை, கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்படும் மாநில அரசின் பெரிய கட்டுமானங்களுக்கும் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவைப்படும் நிலையை ஏற்படுத்தியதாக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா குற்றம்சாட்டினார். அப்போது மத்திய சுற்றுச்சூழல் தறையின் அமைச்சராக திமுகவின் டி.ஆர். பாலு.போராட்டம், நீதிமன்ற வழக்குகள், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான மோதல் என பிரச்சினைகள் தொடர்ந்த நிலையில், ராணி மேரி கல்லூரியில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட்டது.
ஆனால் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முயற்சியை நிறுத்தவில்லை. அடுத்த இடமாக கோட்டூர்புரம்
அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான 22.16 ஏக்கர், அரசின் Data Centre வசமிருந்த 18.40 ஏக்கர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் 2.64 ஏக்கர் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மொத்தம் 43.20 ஏக்கரில் புதிய தலைமைச் செயலக வளாகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு 2003 செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி G.O.Ms.No.1080 பிறப்பிக்கப்பட்டது. கோட்டூர்புரத்தில் சட்டப்பேரவை அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் சுமார் 10 முதல் 12 லட்சம் சதுர அடி பரப்பில் புதிய தலைமைச் செயலக வளாகத்தை உருவாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு CMDA-விடம் ஒப்படைக்கப்பட்டது.
2003 அக்டோபர் 8-ஆம் தேதி G.O.Ms.No.1184 பிறப்பிக்கப்பட்டு கட்டட வடிவமைப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், முதல்வர் அடிக்கல் நாட்டுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, 2003 அக்டோபர் 27-ஆம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை S.O.1236(E) என்ற வரைவு அறிவிக்கையை வெளியிட்டது. பெரிய அளவிலான புதிய கட்டுமானத் திட்டங்களையும் சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறைக்குள் கொண்டுவருவதற்கான திருத்தம் அதில் முன்மொழியப்பட்டது.
ஆனாலும், 2003 அக்டோபர் 30-ஆம் தேதி கோட்டூர்புரம் புதிய தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். பின்னர் இந்த மத்திய அரசின் வரைவு அறிவிக்கையை முன்வைத்து கோட்டூர்புரம் திட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் வரைவு அறிவிக்கை என்பது இறுதி அறிவிக்கை அல்ல; அது சட்டரீதியாக அமலுக்கு வராத நிலையில், ஏற்கெனவே தொடங்கப்பட்ட திட்டத்தை அதன் அடிப்படையில் தடுக்க முடியாது என்ற அடிப்படையில் திட்டம் தொடர நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக கலைஞர் மு. கருணாநிதி முதலமைச்சரான பிறகு, புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டதுசென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டம் தேர்வு செய்யப்பட்டது.
முந்தைய ஆட்சிகளில் புதிய தலைமைச் செயலகத்துக்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டிருந்தாலும் அவை முழுமையான கட்டடமாக உருவாகவில்லை, ஆகவே ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம்-சட்டப்பேரவை வளாக கட்டுமானமாக தொடங்கியது.
2008 ஜூன் 12-ஆம் தேதி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்துக்கு முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.
இதில் சட்டப்பேரவை அரங்கம் மட்டுமின்றி அணைத்து அலுவலகங்களையும் ஒரே வளாகத்தில் கொண்டுவரும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில்
கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.ஓமந்தூரார் வளாகத்தின் பிரதான பகுதியாக A Block உருவாக்கப்பட்டது. சுமார் 9 முதல் 9.3 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்தப் பகுதியில் புதிய சட்டப்பேரவை அரங்கம், முதலமைச்சர் அலுவலகம், அமைச்சர்கள் அலுவலகங்கள், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம், தலைமைச் செயலாளர் மற்றும் முக்கிய அரசுத் துறைகளுக்கான அலுவலகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. சுமார் 700 அறைகளைக் கொண்டதாக இந்தப் பிரதான கட்டடம்A Block-ஐத் தொடர்ந்து B Block அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 7.43 லட்சம் சதுர அடி பரப்பில் திட்டமிடப்பட்ட இந்தப் பகுதியில் கூடுதல் அரசுத் துறை அலுவலகங்கள் மட்டுமின்றி, 1,200 பேர் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம், 50 அறைகளைக் கொண்ட விருந்தினர் இல்லம், சுமார் 700 வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி உள்ளிட்டவற்றையும் உருவாக்கத் திட்டமிடப்பட்ட நிலையில் 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் நேரத்தில் A Block பயன்பாட்டுக்கு வந்திருந்த நிலையில், B Block பணிகள் முழுமையாக முடிவடையவில்லை.வேகமாக நடைபெற்ற கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் தேதி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.
விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி , மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். பல ஆண்டுகளாக நீடித்த “புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றாக புதிய தலைமைச் செயலகம்" என்ற தேடல் முதல் முறையாக ஒரு முழுமையான கட்டடமாக உருவெடுத்து, சட்டப்பேரவையும் அங்கு செயல்பட்டது.
2010 மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை ஓமந்தூரார் புதிய வளாகத்தில் செயல்படத் தொடங்கியது. முதலமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களும் அங்கு செயல்படத் தொடங்கின.
ஆனால் அனைத்து அரசுத் துறைகளும் ஓமந்தூராருக்கு முழுமையாக இடமாற்றம் செய்யப்படவில்லை. 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று செல்வி ஜெ.ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானதும், 2011 மே 16-ஆம் தேதி, புதிய அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தலைமைச் செயலகத்தை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு சட்டப்பேரவைக் கூட்டங்களும் மீண்டும் கோட்டையில் நடைபெறத் தொடங்கின.மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவதற்கான முடிவை அறிவித்தார்.
2011 செப்டம்பர் 14-ஆம் தேதி G.O.Ms.No.846 பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஓமந்தூரார் வளாகத்தின் A Block- Multi Super Speciality Hospital அமைக்கவும், B Block-ல் புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கவும் அரசு முடிவு செய்தது. அதற்கும் நீதிமன்றத்தில் எதிர்ப்பு எழுந்தது. வழக்குகள் நடைபெற்ற பின்னர், ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கட்டடத்தை உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் அரசின் முடிவு நீதிமன்றங்களில் தீர்ப்பு மூலம் நிலைநிறுத்தப்பட்டது.2011-ஆம் ஆண்டில் புனித ஜார்ஜ் கோட்டைக்குத் திரும்பிய தமிழ்நாடு சட்டப்பேரவை, அடுத்த பல ஆண்டுகள் அங்கேயே செயல்பட்டது. ஆனால் 2020-ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் இருப்பிடத்தை மீண்டும் மாற்றியது.
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் சிரமம் இருந்ததால், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவை 2020 செப்டம்பர் 14-ஆம் தேதி, கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பல்நோக்கு அரங்கில் கூடியது. 1952 முதல் 1956 வரை உள்ள ஆண்டில் மதராஸ் மாநில சட்டப்பேரவை செயல்பட்ட அதே கலைவாணர் அரங்க வளாகத்திற்குத்தான், சுமார் 64 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை மீண்டும் வந்தது. 2021-ஆம் ஆண்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, கலைஞர் மு. கருணாநிதி அமைத்த ஓமந்தூரார் வளாகத்தை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றும் எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. ஆனால் மருத்துவமனை என்பதால் மு.க.ஸ்டாலின் தலைமையில் அபைந்த திமுக அரசு அந்த முடிவை எடுக்கவில்லை.
ஓமந்தூரார் வளாகத்தில் செயல்பட்டு வந்த அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தொடர்ந்து அங்கேயே செயல்பட்டது; 2026-ல் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலானஅரசு பொறுப்பேற்ற பிறகு, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தின் இடவசதி தொடர்பான பிரச்சினை மீண்டும் கவனத்துக்கு வந்ததையடுத்து முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அவரது செயலாளர்களின் அலுவலகங்களை நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை மாளிகையின் 10-வது தளத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அங்கு ஏற்கெனவே செயல்பட்டு வந்த அலுவலகம் மாற்றம் நடந்த நிலையில் 2026 செப்டம்பர் 3-ஆம் தேதி, சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ்நாடு அடுத்த 100 ஆண்டுகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் கட்டப்படும் என அறிவித்தார்.
புதிய வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் ரூபாய் 1,200 கோடி செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் சென்னை மயிலாப்பூர் வட்டம், பட்டினப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான புல எண்கள் T.S.No.4593/1, 4593/29, 4593/33 நிலங்களில் 21.37 ஏக்கரும், T.S.No.4592- 0.39 5 மொத்தம் 21.76 ஏக்கர் நிலம் புதிய சட்டப்பேரவை-தலைமைச் செயலக வளாகத்துக்காக அரசு தரப்பு அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து 2026 செப்டம்பர் 8- ஆம் தேதியில் G.O.(Ms) No.564, Public (Buildings) Department அரசாணையை அரசு வெளியிட்டதன் மூலம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தைக் கட்டுவதற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை (in-principle approval) பொது பிரிட்டிஷ் கும்பெனி 640-ஆம் ஆண்டில் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கிய தமிழ்நாடு ஆட்சி அதிகார மையக் கடடிடப் பயணம், பல இடமாற்றங்கள், புதிய தலைநகருக்கான யோசனைகள், கைவிடப்பட்ட திட்டங்கள், கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் என பல திருப்பங்களைக் கடந்துள்ளது. இப்போது 2026-ஆம் ஆண்டில் பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை-தலைமைச் செயலகம் என்ற அடுத்த அத்தியாயத்தை தவெக கூட்டணி அரசு தொடங்கியிருக்கிறது.ஆனால் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவது நிலத்தைத் தேர்வு செய்து கட்டுமானத்தைத் தொடங்குவதோடு முடிந்துவிடும் விஷயம் அல்ல.
கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகள், சுற்றுச்சூழல் அனுமதி, கடற்கரை வெள்ள அபாயம், புயல் மற்றும் கனமழைக் கால நீர்தேக்கம், நிலத்தடி நீர் மற்றும் வடிகால் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கும். குறிப்பாக 20 லட்சம் சதுர அடி பரப்பிலான மிகப்பெரிய அரசு தலைமை அலுவலக வளாகம் என்பதால், கட்டுமானத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை விதிகளின் படி தேவையான ஆய்வுகளையும் அனுமதிகளையும் தவெக அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் 21.76 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது திட்டத்தின் தொடக்கம் தான்; சுற்றுச்சூழல் அனுமதிகள் உள்ளிட்ட அடுத்தடுத்த நடைமுறைகளைக் கடந்த பிறகு திட்டத்தின் முழுமையான பயணம் தொடங்கி நடைபெறும்.
அத்துடன் அப்பகுதி மீனவ மக்கள் அரசு இடத்திற்கு இப்போதே தனிநபர் இடம் போல உரிமைப் போர்க்கொடி தூக்குகின்றனர். தமிழ்நாட்டில் ஆளும் தவெக, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளைத் தவிர அத்தனை கட்சிகளும் இத்திட்டத்தை மிக கடுமையாக எதிர்க்கின்றன.
நான்கு நூற்றாண்டுகளை நெருங்கும் புனித ஜார்ஜ் கோட்டையின் அதிகாரப் பயணம் இனி ASI அதாவது இப்போது கோட்டையில் இயங்கும் மத்திய தொல்வியல் துறை, இந்திய ராணுவம் வசம் செல்லும் தமிழ்நாடு புதிய தலைமைச் செயலகத்துக்கான நீண்ட 'தேடலில்' பட்டணப்பாக்கம் புதிய தலைமை பட்டிணம் ஆவதை காலமும் மத்திய அரசும் தான் தடை இல்லாமல் விரைவில் பதில் சொல்ல வேண்டும்.புதிய தலைமைச் செயலகம் குறித்து
எதிர்ப்பு நபர்களின் கருத்து பூவுலகின் நண்பர்கள் தரப்பு அறிக்கை பார்த்தேன். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் தவெக கூடடணி அரசு அமைப்பதை எதிர்த்து கடலோர சூழல், மீனவர் வாழிடம், காலநிலை அபாயம் என்று பேசுகிறீர்கள். சரி,ஒரு கேள்வி: பரந்தூரில் நீர்நிலைகள் நிறைந்த பகுதியில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்க முந்தைய திமுக அரசு முடிவு செய்தபோது நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்தத் திட்டம் பல ஏரிகளையும் கால்வாய்களையும் அழிக்கப்போவதாகச் சொல்லி நீங்கள் எழுதிய அறிக்கைகள் இப்போது மட்டும் ஏன் அதிகமாகத் தெரிகிறது?
அதே பட்டினப்பாக்கத்திலேயே மேம்பால DPR பேசப்பட்ட போது உங்கள் குரல் எங்கே போனது? காலம்சென்ற முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதிக்கு பேனா சின்னத்தைக் கடலுக்குள் அமைக்க முந்தைய அரசு முன்மொழிந்தபோது பொதுமன்றத்தில் சிலர் பேசினார்கள் என்பது உண்மை. ஆனால் அப்போது இந்த அளவுக்கு தொடர் அழுத்தம், அரசை நேரடியாகக் குற்றம்சாட்டி இத்தனை பத்திரிகைகளுக்கு டேக் செய்து நீங்கள் பரப்புரை செய்தீர்களா?
முந்தைய அரசு செய்த எந்தத் திட்டத்திலும் இப்படித் திடீரென அனைவரும் ஒரே நேரத்தில் குரல்கொடுக்கவில்லை. இன்று அரசு மாறியதும் ஒவ்வொருவரும் தங்கள் கருத்தைச் சொல்கிறார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஆட்சி மாறும்போது மாறக்கூடிய கொள்கையா, அல்லது எப்போதும் ஒரே அளவுகோலில் நிற்க வேண்டிய கொள்கையா?
மீனவர்கள் வாழ்வாதாரம், கடற்கரை உரிமை, காலநிலை ஆபத்து ஆகியவை இன்றைக்கு மட்டும் முக்கியமாகிவிட்டதா? முன்பு அதே பகுதியில், அதே கடற்கரையில் நடந்த திட்டங்களைப் பற்றி நீங்கள் இப்போது காட்டும் ஆர்வத்தை அப்போது காட்டியிருந்தால் இன்று இந்தக் கேள்விகள் இப்போது எழாது.
சூழல் பாதுகாப்பு என்பது அரசுக்கு எதிரான ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தப்படக்கூடாது. அது எப்போதும் ஒரே தரத்தில் இருக்க வேண்டும். என்பதே பொதுவான மக்கள் நிலை, சென்னை பட்டினப்பாக்கத்தில் (Foreshore Estate) சுமார் ரூபாய் 1,200 கோடி செலவில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டும் திட்டத்தின் இடம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளதால், கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (MoEFCC) கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) சட்ட ஒப்புதல்கள் கட்டாயமாகும். இத்திட்டம். கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதிமத்திய அரசு சட்டம்: சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986-ன் (Environment Protection Act) கீழ் மத்திய அரசு இந்த CRZ விதிகளை வகுத்துள்ளது. இத்திட்டத்திற்கான வரைபடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை முதலில் மாநில கடலோர மண்டல மேலாண்மை வாரியத்திடம் (TNSCZMA) சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அதனை ஆய்வு செய்து பரிந்துரைத்த பின், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் (MoEFCC) இறுதி ஒப்புதலை வழங்க வேண்டும். கடலோரப் பகுதியில் அலைகளின் எல்லையிலிருந்து (High Tide Line) குறிப்பிட்ட தூரத்திற்குள் புதிய கட்டுமானங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA Notification, 2006)இத்திட்டம் 20 லட்சம் சதுர அடி (சுமார் 1.85 லட்சம் சதுர மீட்டர்) பரப்பளவில் அமையவிருப்பதால், EIA Notification, 2006 விதிகளின் கீழ் இதற்கு உரிய சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance) பெற வேண்டும். கட்டுமானத்தால் கடலோரச் சூழல், நிலத்தடி நீர் மற்றும் உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டடும் இத்திட்டம் அமையவுள்ள பட்டினப்பாக்கம் பகுதி தங்களின் வாழ்வாதாரத்தையும், மீன்பிடி தொழிலையும் பாதிக்கும் என அப்பகுதி மீனவக் கிராம மக்கள் மற்றும் சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளனர், இக்கடற்கரை பகுதி ஆலிவ் ரிட்லி (Olive Ridley) ஆமைகள் முட்டையிடும் பகுதியாக இருப்பதால், பிரம்மாண்ட கட்டுமானங்கள் கடலோரச் சூழலியலைக் கெடுக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) இந்த நிலத்தை குடியிருப்புப் பகுதியிலிருந்து வணிகப் பகுதியாக மாற்றுவதற்கும், அதனைத் தொடர்ந்து CRZ அனுமதியைப் பெறுவதற்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் உள்ள 2.21 ஏக்கர் நிலப்பரப்பில், ரூபாய் .39 கோடி மதிப்பீட்டில் கலைஞர் மு.கருணாநிதி நினைவிடம் மற்றும் பொது மக்கள் பார்க்கும் வகையிலான பாதாள தியேட்டர், "கலைஞர் உலகம்" டிஜிட்டல் அருங்காட்சியகம் (Museum) ஆகியவை கட்டப்பட்டன. திமுக ஆட்சி இந்த நிலப்பரப்பு CRZ-II (Coastal Regulation Zone-II) மண்டலத்திற்குள் வருவதால், இதற்கு தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் (TNSCZMA) முறையாகப் பரிசீலித்து அனுமதி வழங்கியது. இது கடலுக்குள் கட்டப்படவில்லை என்றாலும் கடலோர நிலப்பகுதியில் 15 அடி ஆழத்தில் அதிநவீன நிலவறை தொழில்நுட்பத்துடன், கடல் நீர் உள்ளே புகாதவாறு பிரத்யேக வாட்டர்ப்ரூஃபிங் வசதிகளுடன் கடல் தரைக்கடியில் அமைக்கப்பட்டுள்ளது.
(சுதந்திரம் அடைந்த பின் முதல்வர்கள்)அதேபோல் கடலுக்குள் திட்டமிடப்பட்ட "பேனா நினைவுச் சின்னம்" (ஆஃப்ஷோர் பகுதி) நீங்கள் "கடலைத் தோண்டி கடலுக்குள்" நினைவிடத்திற்குப் பின்புறம் வங்கக்கடலில் அமைக்கத் திட்டமிடப்பட்ட "கலைஞர் பேனா நினைவுச் சின்னத்தை" கடலுக்குள் 360 மீட்டர் தொலைவில் அமையவிருந்த இந்த பேனா சின்னம் மற்றும் அதற்கான கண்ணாடிப் பாலம் திட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் Expert Appraisal Committee (EAC) சில கடுமையான நிபந்தனைகளுடன் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியை வழங்கியது. ஆமைகள் முட்டையிடும் காலங்களில் கட்டுமானப் பணிகள் செய்யக் கூடாது, கடலோர அரிப்பைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் போன்ற 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மீனவ அமைப்புகளின் இப்போது தொடர் எதிர்ப்புகள் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) வழக்குகள் காரணமாக, கடலுக்குள் அமைக்கும் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, தரைப்பகுதியில் உள்ள நினைவிட வளாகத்திற்குள்ளேயே அந்த சின்னத்தை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மெரினாவில் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் தரைக்கடி "கலைஞர் உலகம்" தியேட்டர் மற்றும் அருங்காட்சியகம் அனைத்து சட்டபூர்வ சுற்றுச்சூழல் மற்றும் கடலோர மண்டல அனுமதிகளையும் பெற்றே கட்டப்பட்டது, அப்படி இருக்க தலைமைச் செயலகம் அமைவதில் சிக்னல் இருக்காது அனுமதி கிடைக்கும்.



























கருத்துகள்