சிவகங்கையில் இரண்டு இளைஞர்கள் ஆள்மாறாட்டமாக கூலிப்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக அறியும் சம்பவத்தைக் கண்டித்து,
இன்று 19 செப்டம்பர் 2026 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் சமுதாய பொதுமக்கள் மூன்றாம் நாளாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று சிவகங்கை அருகில் பையூர் கொடிக்காடு கண்மாய் பகுதியில் இரண்டு இளைஞர்களை விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் தொடர் சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டங்களை நடத்தி வருவதைக் காண்கிறோம், கொலையில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், கொலைக்கான பின்னணியை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும்,
வழக்கை சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உயிரிழந்தவர்களின் சடலங்களைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என உறவினர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக காளையார்கோவில் மற்றும் அரண்மனை வாசல் பகுதிகளில் மதுரை - தொண்டி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்துள்ளனர். ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை ஒட்டி, அங்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை காவல்துறையினரால்10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை விபரம் முழுமையாக வெளிவரவில்லை கொலையுண்டவர்களின் உடல்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கொலைக்கு காரணமான இன்னும் உள்ள அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், உண்மையான பின்னணியை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் உடல்களை வாங்க மறுத்து போராடுகின்றனர்.
போராட்டத்தின் 3-வது நாளான இன்று சனிக்கிழமை, உறவினர்களும் பொதுமக்களும் நீதி கேட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதனால் அத்தப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அசம்பாவிதங்களைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் இரும்புத் தடுப்புகளை அமைத்து பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, நேற்று காளையார்கோவில் பகுதியில் மதுரை - தொண்டி நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் அதிகாரப்பூர்வமற்ற சமரசப் பேச்சுவார்த்தையை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்ததால்,
காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவலர்கள் லத்தி சார்ஜ் எனும் தடியடி நடத்திக் கலைத்தனர். சாலை மறியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும், கடைகளை அடைக்கக் கோரி கற்களை வீசியதாகவும் கூறி, பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைதும் செய்தனர்.இன்று 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதால், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கக் கோரியும் மக்கள் தங்களின் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர்.தமிழ்நாட்டில் ஒரேநாளில் 8 படுகொலைகள் நிகழ்ந்த செய்தி வருகிறது காளையார்கோவில் இரட்டை கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தோடு சிவகங்கை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி நாச்சியார் கூட்டத்தில் வந்து பேசிய போது மேலிடத்திலிருந்து என்னை வரக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள், அதையும் மீறித்தான் நான் இங்கு வந்துள்ளேன் என்று சொல்கிறார், அது மக்களுக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி, நேற்று தடியடி நடத்தச் சொன்னவர்கள் யார் என்ற சந்தேகங்கள் எழும்பி கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் மூன்றாவது நாளாக தொடர்ந்து வாசலில் போராடும் மக்களை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கான முறையீட்டை நீதியை இதுவரை பெற்றுக் கொடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தான் அந்த மக்கள் தரப்பு கூறுவது,
கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் மது விற்பனைக் குடி பார் உரிமையாளரால் இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலையும், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் காவல் நிலையம் அருகிலேயே சரவணன் என்ற நபர் ஓட ஓட வெட்டிக் கொலையுமா, மதுரை மாவட்டம் மேலூர் அரசுப் பள்ளியின் அருகே செல்லத்துரை என்ற இளைஞர் வெட்டிப் படுகொலையும், சென்னை புறநகர் குன்றத்தூர் அருகே தண்டலத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலையும், தாம்பரத்தில் வெல்டர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலையும், கரூரில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல் உள்ளிட்ட ஒரே நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 8 படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக பல்வேறு தரப்பு கவலைப்படும் நிலையில்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்வதிலும், அவர்களுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தருவதிலும் ஏற்படும் காலதாமதமும், உளவுத்துறையில் ரகசியத் தகவல்கள் சேகரிக்க சரியான அனுகுமுறை இல்லாத நிலையும் அலட்சியமுமே இதுபோன்ற அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களுக்கு தூண்டுகோலாகவும், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
சமூகவிரோதிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்காணித்து, குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவேண்டிய காவல்துறையினர் தங்களது அடிப்படைப் பொறுப்பை உணராமல் அலட்சியமாகச் செயல்படுகின்றனரா ? அல்லது அவர்களின் செயல்பாட்டுகா கைகள் கட்டப்பட்டுள்ளதா? என்று பொதுமக்கள் போராடடங்கள் மூலம் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேநேரத்தில், தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைத்து, பதற்றமான சூழலை அதிகரிக்கும் இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழலில், காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய தினம் தோறும் அரங்கேறும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கையை மேற்கொள்வதோடு, அரங்கேறிய படுகொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, விரைவு நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் காவல்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்தும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைக்கினறனர், கடந்த 30 ஆண்டுகளுககு முன் தகவல் தொடர்பு சாதணங்கள், விஞ்ஞான வளர்ச்சி இல்லாத போது அரசு உளவுத்துறை IS மற்றும் CID சார்ந்த பணிகளில் உள்ளவர்கள் மக்கள் கூடும் சில இடங்களில் தேனீர் கடைகளில் சமூக நலன் காக்க முயலும் நடுநிலையாளர்கள், புலனாய்வு செய்தியாளர்கள், மற்றும் பகுதி முககிய பிரமுகர்களிடம் பழகி புழங்கி வேறுபாடு இல்லாமல் இருந்து கண்டறியும் நிலை இருந்தது அது தற்போது அறவே இல்லை, அணைத்தும் மாறிய காரணம் தான் குற்றங்கள் அதிகரிக்கும் நிலை, ஆகவே மக்கள் விரும்பி வாக்களித்த தலெக அரசு இதில் அறிவார்ந்த நபர்களை உறுவாக்கி விஞ்ஞானப்பூர்வ நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குற்றங்கள் குறையும், நாளைக்கு நடபபது என்ன என்பதை உளவுத்துறை அறியாமல் குற்றம் நடந்த பின் கணடறிவது, கண்கெட்ட பின் நடக்கும் சூரிய நமஸ்காரம் போன்றது, சுவர்கள் உள்ள போதே சித்திரம் வரைவதே முக்கியம், ஆட்சி அதிகாரம் மக்களுக்கானதே, அவர்கள் நிம்மதியான வாழ்வியலுக்கே, ஜனநாயக நாட்டில்"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை." (திருக்குறள்: 541) "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்ப்வைத்தூறு போலக் கெடும்." (திருக்குறள்: 435) "கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனோடு நேர்." (திருக்குறள்: 550) "கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர்." (திருக்குறள்: 562) அதுவே பொதுநீதி





















கருத்துகள்