* பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் மீது சிவில் மற்றும் கிரிமினல் மானநஷ்ட வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.
*வழக்கு விவரம்:*
- *டெல்லி உயர்நீதிமன்றத்தில்* - ரூ.2 கோடி இழப்பீடு கோரி சிவில் வழக்கு
- *பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில்* - கிரிமினல் மானநஷ்ட வழக்கு
துபே தனது X பதிவில், "இனி நீதிமன்றமே முடிவு செய்யும், இந்த வழக்கு எனது கடந்த 18 ஆண்டு கால நாடாளுமன்ற பணியையும் மதிப்பிடும்" என தெரிவித்துள்ளார்.
*பின்னணி என்ன?*
1. சுபாஷ் கார்க் ஒரு பாட்காஸ்ட் பேட்டியில், நிஷிகாந்த் துபேவை *"பிளாக்மெயில் செய்யும் நபர்"* என கூறியதாகவும், 2018-ல் எல்ஐசி தலைவர் மூலம் டிரான்ஸ்பர் மற்றும் கான்ட்ராக்ட் வாங்க தனது அலுவலகத்திற்கு வந்ததாகவும் குற்றம் சாட்டினார்.
2. இதை துபே மறுத்துள்ளார். தான் ஒருபோதும் கார்க் அலுவலகத்திற்கு செல்லவில்லை எனவும் இது அவதூறு எனவும் கூறினார்.
3. முன்னதாக துபே, கார்க்கிற்கு 7 நாள் கெடுவுடன் சட்ட நோட்டீஸ் அனுப்பி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். ஆனால் கார்க் அதை நிராகரித்தார்.
*மோதலுக்கு காரணம் ஜிடிபி சர்ச்சை:*
அரசு அறிவித்த 2026-27 முதல் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 7.8% என்பதை கார்க் கேள்வி எழுப்பி கட்டுரை எழுதினார். உண்மையான வளர்ச்சி 0% தான் என அவர் கூற, துபே அவரை கடுமையாக விமர்சித்தார். 2019-ல் அறியாமை காரணமாக நிதி அமைச்சகத்தில் இருந்து நீக்கப்பட்டவர் என துபே கூறினார்.
தற்போது இந்த மோதல் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது

கருத்துகள்