முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய தலைமைச் செயலகம் 20 லட்சம் சதுரடியில் 1200 கோடியில் அமைகிறது

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நேற்று 3 செப்டம்பர் 2026 அன்று நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் துறைசார்ந்த பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் நவீனமயமாக்கல் அறிவிப்புகளை வெளியிட்டார்.


முக்கிய நலத்திட்டங்கள் & நிதியுதவியில் ரூபாய் 1 கோடி இழப்பீடு: பணியின் போது துணிச்சலுடன் செயல்பட்டு உயிரிழக்கும் காவலர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூபாய் 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் இயல்பாக இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கான கருணைத் தொகை (Ex-gratia) ரூபாய் 20 லட்சத்திலிருந்து ரூபாய் 30 லட்சமாக உயர்வு. காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளுக்கான சில்லறை செலவின நிதி  கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் பணியிடங்களை நிரப்பும் வகையில் விரைவில் 10,000 அதில் பாதி மகளிர் புதிய காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.நவீனமயமாக்கல் & உள்கட்டமைப்பு ரூபாய் 212 கோடி நவீனமயமாக்கல்: செயற்கை நுண்ணறிவு (AI), அதிநவீன டிஜிட்டல் தடையவியல் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு அமைப்புகளுடன் காவல்துறை நவீனமயமாக்கப்படும். ரூபாய் 200 கோடியில் வாகனங்கள்: காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மற்றும் ரோந்துப் பணிகளை மேம்படுத்தப் புதிய வாகனங்கள் வாங்கப்படும். வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் அகாடமியில் ரூபாய் 23 கோடி மதிப்பில் பன்னோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். சேலம் மற்றும் விழுப்புரம் தடய அறிவியல் ஆய்வகங்களில் ரூபாய் 14 கோடி செலவில் புதிய மரபணு ஆய்வுப் பிரிவுகள் நிறுவப்படும்.போதைப்பொருள் ஒழிப்புப் பரிசுபோதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் 50 கிராமங்களைத் தேர்வு செய்து, கிராமம் ஒன்றுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வீதம் பரிசு வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் நேற்று (3.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும்,



உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றும், அரசியலமைப்புச் சட்ட Article 348(2) மற்றும் ஆட்சி மொழிகள் சட்டம், 1963, பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் மாநில ஆளுநர் அவர்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகளின் மீது தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.சென்னையில் ரூபாய் .1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் செப்டம்பர் 3, 2026 அன்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்துள்ளார். அடுத்த 100 ஆண்டுகளின் நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உலகத் தரத்திலான உள்கட்டமைப்புடன் இது உருவாக்கப்பட உள்ளது.சுமார் 20 லட்சம் சதுர அடி.நோக்கம்: அடுத்த 100 ஆண்டுகளின் நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உலகத் தரத்திலான உள்கட்டமைப்புடன் இது உருவாக்கப்பட உள்ளது.புதிய வளாகத்தில் சட்டப்பேரவை, முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் நவீன வசதிகள் அமைக்கப்படும்.     




 தற்போது தலைமைச் செயலகம் இயங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் சுமார் 107 ஏக்கர் பரப்பளவு கொண்டது.இதில் தமிழ்நாடு அரசின் பயன்பாட்டுக்கு சுமார் 4 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாகவும், மீதமுள்ள பகுதிகள் இந்தியப் பாதுகாப்புத் துறை மற்றும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் வளாகத்தை விரிவுபடுத்துவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகத்தை அமைப்பதற்காக சென்னையில் 3 இடங்கள் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
சென்னை சர்தார் பட்டேல் சாலையில் ஆளுநர் மாளிகை அருகே உள்ள கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய வளாகம், பட்டினப்பாக்கம், நந்தம்பாக்கம்
ஆகிய 3 இடங்களில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது தொடர்பாக முதல்வர்  ஆலோசனை நடத்தி வருகிறார் என கூறப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...