19.09.2026 அன்று விஞ்ஞான் பவனில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த சுற்றுச்சூழல் மாநாட்டின் முக்கிய அம்சங்கள் - சூரியசக்தி 160 GW, ஹைட்ரஜன் ரயில், 22% வனப்பகுதி அதிகரிப்பு.
*சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியலின் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாடு*
புதுதில்லி விஞ்ஞான் பவனில் "சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியலின் எதிர்காலம்" குறித்த சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 19.09.2026 அன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் முக்கியமாக குறிப்பிட்டவை:
- *கார்பன் வெளியேற்றம்:* வளர்ந்த நாடுகள் இந்தியாவை விட தனிநபர் அடிப்படையில் 6 மடங்கு அதிக கார்பன் வெளியிடுகின்றன.
- *சூரியசக்தி புரட்சி:* 12 ஆண்டுகளுக்கு முன் 2 ஜிகாவாட் ஆக இருந்தது, இப்போது 160 ஜிகாவாட்டிற்கும் மேலாக உயர்வு. பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ் 50 லட்சம் வீடுகளில் சூரியசக்தி, ரூ.80,000 வரை மானியம்.
- *புதிய தொழில்நுட்பம்:* நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தொடக்கம், மின்சார வாகன விற்பனை பல மடங்கு அதிகரிப்பு, 5000 கி.மீ உள்நாட்டு நீர்வழிகள்.
- *வேளாண்மை:* 12.5 லட்சம் ஹெக்டேரில் 24,000 இயற்கை வேளாண் தொகுப்புகள், 3000 பருவநிலை தாங்கும் பயிர் ரகங்கள்.
- *வனம்:* கடந்த 12 ஆண்டுகளில் அடர்ந்த வனப்பகுதி 22% அதிகரிப்பு.
"நமது வளர்ச்சி வேகமானது, நிலையானது" என்று பிரதமர் குறிப்பிட்டார்.



கருத்துகள்