திருமலை திருப்பதிக் கோவிலுக்காக ஆனந்த் அம்பானி அறிவித்த 25 புதிய மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டிற்காக திருமலைக்கு கொண்டுவந்துள்ளது
கடந்த ஜூன் மாதம் திருமலை திருப்பதிக்கு வருகை தந்த ஆனந்த் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 புதிய மின்சாரப் பேருந்துகள் மற்றும் பிற வசதிகளை வழங்குவதாக அறிவித்திருந்ததன்படி, திருமலை திருப்பதியில் புரட்டாசி வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவில் அனந்த் அம்பானி ரூபாய் .27.5 கோடி மதிப்பிலான 25 புதிய மின்சாரப் பேருந்துகள், மற்றும் 50 ஓட்டுநர்கள் மற்றும் ஒரு மின்னேற்ற நிலையம் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்க உள்ளாா். இதன் ஒரு பகுதியாக, இந்த 25 பேருந்துகளும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆந்திரப்பிரதேச மாநிலம் திருமலை திருப்பதிக்கு வந்தடைந்தன. ஞாயிற்றுக்கிழமை ஒரு பேருந்து திருமலைக்கான சோதனை ஓட்டத்தை நிறைவு செய்தது அலுவலர்கள் அதன் செயல்பாட்டை மதிப்பீடு செய்தனர். திருமலை திருப்பதிக்கு தரிசனம் செய்து வரும் பக்தர்களுக்கு போக்குவரத்து வசதியை அளிப்பதே இந்தப் பேருந்துகளின் நோக்கமாகும்.
16 ஆம் தேதி காலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தின் போது ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பேரூந்து போக்குவரத்து முறைப்படி தொடங்கி வைப்பாா் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றுடன், பாரத் பயோடிக் நிறுவனம் வழங்கும் மேலும் 7 மின்சாரப் பேருந்துகளும் திருமலை திருப்பதியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துப் பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, பக்தர்கள் பொதுப் போக்குவரத்து வசதியை எளிதாகப் பெற முடியும் என்பதோடு, தனியார் வாகனங்களைச் சார்ந்திருககும் நிலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள்